எம்எஸ்எம்இ பதிவு செய்ய விரும்பும் சிறு நிறுவனங்கள்.. என்ன காரணம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெரும்பான்மையான நிறுவனங்கள் பதிவு செய்ய காத்துக் கொண்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் அரசாங்கத்தின் நிவாரணப் சலுகையின் மூலம் பயனடையவில்லை என்று கூறப்படுகின்றது.

 

அதிலும் கடந்த மாதம் பணப்புழக்க நெருக்கடியை எதிர்கொள்ளும் 4.5 மில்லியன் எம்எஸ்எம்இகளுக்கு 3 டிரில்லியன் ரூபாய் மதிப்புள்ள கடன்களை அரசாங்கள் கடந்த மாதம் அறிவித்தது.

எம்எஸ்எம்இ பதிவு செய்ய விரும்பும் சிறு நிறுவனங்கள்.. என்ன காரணம்?

அதிலும் பிணை இல்லாத கடன்களே அக்டோபர் 31 வரை கிடைக்கப்பெற்றாலும், 25 கோடி ரூபாய் நிலுவையில் உள்ள வணிகங்களுக்கு மட்டுமே கடன் கிடைக்கும். ஆக இது சிறு தொழில்களுக்கு கிடைப்பது கஷ்டமே.

இந்த புதிய கடன்கள் வழங்கப்பட்ட நிறுவனங்களுக்கும் 100 கோடி ரூபாய் வரையில், விற்றுமுதல் உள்ள நிறுவனங்களுக்கும் கூடுதல் செயல்பாட்டு மூலதன நிதி என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்த நிதியை அணுகும் திறனுக்கு அரசாங்கத்தின் எம்எஸ்எஸ்இ வலைதளத்தின் மூலம் ஒரு நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளதா இல்லையா? என்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. நிலுவையில் உள்ள கடனுடன் கூடிய நிறுவனங்கள் மட்டுமே தகுதியுடையவை என்றும் இந்திய எம்எஸ்எம்இ கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அனில் பரத்வாஜ் கூறியுள்ளார்.

இந்த வாரத் தொடக்கத்தில் 2,00,000 எம்எஸ்எம்இ-களுக்கு 20,000 கோடி ரூபாய் துணைக் கடனுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அவை செயல்படாத சொத்துக்கள் என்று குறிக்கப்பட்டுள்ளன. எம்எஸ்எம்இ-களுக்கு பிணையங்கள் அல்லது மூன்றாம் தரப்பு உத்தரவாதங்கள் இல்லாமல் வங்கி கடன் பெற அனுமதிக்கிறது. இதற்கு 20,000 கோடி ரூபாய்க்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனினும் இதில் ஸ்டார்டப்கள் மற்றும் புதிய எம்எஸ்எம்இக்கள் ஒரு நன்மையை பெறலாம். அது எம்எஸ்எம்இக்களுக்கு திறனை விரிவுபடுத்தவும், சந்தையை விரிவுபடுத்தவும் உதவும் வகையில் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான கார்பஸூடன் ஒரு மெகா ஃபண்ட் உருவாக்குவதாக மையம் அறிவித்தது.

 

அதோடு பட்டியலிடத் தேர்வு செய்யும் நிறுவனங்களில் 15 சதவீதம் வரை பங்குகளை அரசாங்கம் வாங்கும் என்று கட்கரி தெளிப்படுத்தியிருந்தார். மேலும் நிறுவனங்கள் பட்டியலிடப்பட்ட பின்னர், ஒரு வலிமையை சேகரித்தவுடன் அரசாங்கம் அதன் திசை திருப்பி பணத்தை மற்றொரு எம்எஸ்எம்இக்களுக்கு வழங்க அனுமதிக்கும் என்றும் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தற்போது பங்கு சந்தைகளில் நிலவும் நிலையற்ற தன்மையால், தொழில் முனைவோருக்கு மிகுந்த நம்பிக்கையை அழிக்காது. எனினும் விரைவில் முறைப்படுத்தப்பட விரும்பும் நிறுவங்கள் பயனடையக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Most businesses start-ups trying to register as msme may not get loans

Most businesses start-ups trying to register as msme may not get loans
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X