பெண்களே! உங்களுக்காக தயாரிக்கப்பட்ட நியூ பிராண்ட் பீர் இது! திசைமாறும் "பீர்" மார்க்கெட்டிங்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

குர்கானில் பெண்களை குறிவைத்து
குர்கான்: மச்சான் சும்மா 2 பீர்தான்! என்று காலரைத் தூக்கிவிடும் ஆண்கள் அனேகமாக குடிக்காமலே இருக்கிறதுதான் நல்லது.. இப்பவெல்லாம் பீர் நிறுவனங்கள் தங்களது பீர் மார்க்கெட்டிங்க்கு பெண்களை குறிவைக்கின்றன. 100 பெண்களைக் கூப்பிட்டு பீர் குடிக்கவிட்டு புதுரக பீரை அறிமுகப்படுத்துறதுதான் பேஷனாகிவிட்டது.

அரியானா மாநிலத்தின் குர்கான் மில்லியனியம் சிட்டியில் பெண்களைத்தான் குறிவைத்துதான் பீர் மார்க்கெட்டிங்கே அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது..

குர்கானில்தான் பெரும்பாலானா பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய தலைமையகங்கள் செயல்படுகின்றன. இங்கு பணிபுரியும் பெண்கள் பலரும் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு தங்களது கம்பெனிகளின் சார்பில் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அங்கேபோகும் போது "பீர்" குடிக்கும் கலாச்சாரத்தையும் கற்றுக் கொள்கின்றனர். நாடு திரும்பிய பிறகும்கூட பீர் குடிப்பதை ஒரு சாதாரணமாக குடிநீர் குடிக்கும் வழக்கத்தைப் போலத்தான் பார்க்கின்றனர்.

குர்கானில் இருக்கும் லெம்ப் ஹோட்டல் ஒவ்வொரு வியாழக்கிழமை இரவுமே அந்த ஹோட்டலுக்கு வரும் அனைத்து பெண்களுக்கும் பீர் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. அதேபோல் ஆம்பீசியன் மாலில் இருக்கும் பீர் கபேயில் அண்மையில் ப்ரூட் பீர் அறிமுகப்படுத்தப்பட்டது. பெல்ஜியத்தின் ப்ரூட் பீர் இந்தியாவிலேயே இங்குதான் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஜாலியாக சிறப்பித்திருக்கின்றனர்.

பீர் விற்பனைக்கு பெண்களை பயன்படுத்தும் மர்க்கெட்டிங் குறித்து கருத்து தெரிவித்த பீர் கபே நிர்வாகிகள், பீர் என்பது மதுபானம் அல்ல... சாதாரண குளிர்பானம்.,..உடல்நலத்துக்கு கேடானது என்பதெல்லாம் உண்மையில்லை.. அப்படி வெட்கப்படுவோர்தான் பெண்கள். அவர்களே பீர் குடிக்க வரும்போது வர்த்தகம் அதிகரிக்கும் அல்லவா என்கின்றனர்.

குர்கான் மற்றும் டெல்லியில் பெரும்பாலான இளம்பெண்கள் பீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதற்குக் காரணம் ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பதுதான் என்று கூறப்படுகிறது.

குர்கான் கேர்ல்ஸ் கேங் நிர்வாகி ஸ்வேதா இது பற்றி கூறுகையில், ஆண்கள்தான் பீர் குடிப்பார்கள் என்று பொதுவாக நினைக்கின்றனர். 25 முதல் 35 வயது வரையிலான பெண்கள் பீர் குடிப்பதில் ரொம்பவும் ஆர்வமாகவே இருக்கின்றனர்.அண்மையில் லெம்ப் ஹோட்டலில் நடந்த பீர் அறிமுக விழாவில் எங்களது குரூப்பைச் சேர்ந்த 40 பேர் வரை கலந்து கொண்டோம் என்றார்.

இப்ப பீர் குடிப்பதை பெண்கள் பேஷனாக்கிக் கொண்டதால் இனி சும்மா 2 பீர்தான் மச்சி என்றெல்லாம் ஆண்கள் தமது நண்பர்களிடம் கூறி மொக்கை வாங்கிக் கொள்ள வேண்டாம்!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gurgaon beer market shifts focus to women | குர்கானில் பெண்களை குறிவைத்து "பீர்" மார்க்கெட்டிங்

Beer marketing has always been notoriously male-focused but not anymore. The booming beer industry in the Millennium City is going all out to change women's perception about beer, which has been long reserved for the stereotypical man on the couch while watching sports.
Story first published: Sunday, August 5, 2012, 13:07 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns