முதலீட்டாளர்களிடம் வசூலித்த ரூ.17,400 கோடியை திருப்பி தர சஹாராவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

By Chakra
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதலீட்டாளர்களிடம் வசூலித்த ரூ.17,400 கோடியை திருப்பி தர சஹாராவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: விதிகளை மீறி சிறு முதலீட்டாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட ரூ. 17,400 கோடியை அவர்களிடம் திருப்பித் தர வேண்டும் என்று சஹாரா நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

2008-11ம் ஆண்டு காலத்தில் சஹாரா தனது Sahara India Real Estate Corporation, Sahara Housing Investment Corporation ஆகிய துணை நிறுவனங்கள் மூலம் ரூ. 17,400 கோடியை 2.3 கோடி முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டியது.

ஆனால், இந்த இரு துணை நிறுவனங்களும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாதவை ஆகும். இதையடுத்து இந்த மொத்த பணத் திரட்டலும் சட்ட விரோதமானது என்று அறிவித்த செபி அமைப்பு (Securities and Exchange Board of India) பணம் வசூலிப்பதை நிறுத்துமாறு உத்தரவிட்டது.

ஆனால், இதை ஏற்க மறுத்த சஹாரா நிறுவனம் பங்குகள் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை நாடியது. இதை விசாரித்த தீர்ப்பாயம் வசூலித்த முழுப் பணத்தையும் 6 வாரங்களுக்குள் முதலீட்டாளர்களிடமே திருப்பித் தருமாறு உத்தரவிட்டது.

ஆனால், இதையும் ஏற்க மறுத்து உச்ச நீதிமன்றத்தை சஹாரா அணுகியது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பாயத்தின் உத்தரவு சரியே என்று தீர்ப்பளித்ததோடு பணத்தை உடனே 15 சதவீத வட்டியோடு திருப்பித் தரவும் இன்று உத்தரவிட்டது. பணம் திருப்பித் தரப்படுவதை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பிஎன் அகர்வால் கண்காணிப்பார் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இதில் 2.3 கோடி முதலீட்டாளர்களும் உண்மையானவர்களா அல்லது சஹாராவே போலியாக முதலீட்டாளர்கள் என்ற பெயரில் தனது கருப்புப் பணத்தையே வெள்ளையாக்க முதலீடு செய்ததா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதனால் சரியான முகவரி, விவரம் இல்லாத முதலீட்டாளர்கள் பெயரில் இந்த இரு நிறுவனங்களுக்கும் வந்த தொகை அரசின் கஜானாவில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

இதனால் முதலீட்டாளர்கள் குறித்த முழு விவரத்தையும் செபி அமைப்பிடம் சஹாரா நிறுவனம் தர வேண்டும் என்றும், அதைத் தராவிட்டால் சஹாராவின் சொத்துக்களை செபி நிறுவனம் கைப்பற்றி, ஏலம் விடலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்தத் தீர்ப்பு சஹாரா நிறுவனத்துக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Supreme Court asks Sahara Group to refund Rs. 17,400 crore to investors | முதலீட்டாளர்களிடம் வசூலித்த ரூ.17,400 கோடியை திருப்பி தர சஹாரா நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

The Sahara Group will have to refund Rs. 17,400 crore raised between 2008 and 2011, to retail investors, the Supreme Court has ruled. The top court has upheld a Securities Appellate Tribunal (SAT) order directing two Sahara companies to refund this amount because the process violated rules. Former Supreme Court Judge BN Agarwal will monitor the refund to investors, the court said. The Supreme Court also ordered Sahara to pay 15 per cent interest to investors on their deposits, a lawyer on the case said.
Story first published: Friday, August 31, 2012, 13:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X