விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் செலுத்தும் புகழ்பெற்ற வங்கிகள்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் செலுத்தும் புகழ்பெற்ற வங்கிகள்!!!
ரிசர்வ் வங்கி இன்று, விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஆக்ஸிஸ், எச்டிஎப்சி, மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளுக்கு அபராதம் விதித்துள்ளது. ஆக்ஸிஸ் வங்கிக்கு ரூ 5 கோடியும், எச்டிஎப்சி வங்கிக்கு ரூ 4.5 கோடியும், ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ 1 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி இந்த வங்கிகளின் மீதான குற்றச்சாற்றுகளுக்கான விசாரணையை மேற்கொண்டு வந்ததை நாம் அனைவரும் அறிவோம். இந்த வங்கிகளின் கணக்கு புத்தகங்கள், உள்ளக அதிகாரம், இணக்க அமைப்புகள் மற்றும் இந்த 3 வங்கிகளின் நிறுவன அலுவலகங்கள் மற்றும் கிளை அலுவலகங்களின் நடைமுறைகள் பற்றிய விசாரணையை மார்ச்/ஏப்ரல் 2013 போது இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்டது. இந்த விசாரணை, இந்த வங்கிகள் KYC/AML வழிகாட்டுதல்களை மீறி செயல்பட்டனவா? என்பதை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்டது என ரிசர்வ் வங்கியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. அந்த விசாரணையின் முடிவில் இந்த மூன்று வங்கிகளும் இந்திய ரிசர்வ் வங்கியின் வங்கி வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

•கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட 'அட்-பார்' காசோலைகள் சம்பந்தமான சில பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்காதது

•வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் (KYC) மற்றும் பணமோசடி எதிர்ப்பு (AML) பற்றிய சில விதிமுறைகள், ஆபத்து வகைப்படுத்தல் மற்றும் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆபத்து விவரக்குறிப்புகளை ஒரு குறிப்பிட்ட காலவரையறையில் நடைமுறைப் படுத்தாதது

•வங்கிக்கு புதிதாக வந்த வாடிக்கையாளர்களுக்கு மூன்றாம் பொருட்களை விற்கும் பொழுது அவர்களைப் பற்றிய வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் (KYC) படிவங்களை கேட்டுப் பெறாதது, குறிப்பிட்ட சில பணப் பரிவர்த்தனைகளைப் பற்றிய அறிக்கையை தாக்கல் செய்யாதது, ரொக்கத்திற்கு ரூ50000க்கு மேல் தங்கம் விற்றது

•நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டை விவரங்கள் அல்லது 60/61 படிவத்தை கேட்டுப் பெறாதது.

•வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் சாதாரண கணக்கிற்கு (NRO)அனுப்பப்படும் மூல நிதி ஆதாரத்தை பற்றி ஆராயாமல் இருப்பது

•தேவைப்படும் சில கணக்குகளை உதாரணமாக NRO கணக்குகளை மீண்டும் உருவாக்காமல் இருப்பது,

•இந்திய ரிசர்வ் வங்கிக்கு சரியான தகவல்களை அனுப்பாதது

இந்த விசாரணை பணப் பறிமாற்ற மோசடி சம்பந்தமாக எந்த ஒரு தெளிவான சான்றுகளையும் வெளிப்படுத்தவில்லை. எனினும் இதைப் பற்றிய எந்த ஒரு உறுதியான முடிவையும் நாம் வரி மற்றும் அமலாக்கப் பிரிவின் இறுதி விசாரணை அறிக்கைக்கு பிறகே எடுக்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Axis, HDFC Bank, ICICI Bank fined for violating RBI guidelines

The Reserve Bank today imposed a monetary penalty on Axis Bank, HDFC Bank and ICICI Bank for violating Reserve Bank of India instructions. Axis Bank has been fined Rs 5 crores, while HDFC Bank has been fined Rs 4.5 crore and ICICI Bank Rs 1 crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X