அதிகரித்து வரும் வீட்டு விலைகள் ஆபத்தானது: தீபக் பரேக்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிகரித்து வரும் வீட்டு விலைகள் ஆபத்தானது: தீபக் பரேக்
சிறிய நகரங்கள் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வீட்டு விலைகள் கடுமையாக உயர்ந்து விட்டன, என தீபக் பரேக் தெரிவித்துள்ளார். நாட்டின் முன்னனி வீட்டு நிதித்துறை தொழிலதிபரான அவர், ஆடம்பரமான அதிக விலையுடைய வீடுகளை கட்டுவதைத் தவிர்த்து, மலிவு விலை வீடுகளை கட்டுமாறு டெவலப்பர்களிடம் கடந்த வெள்ளியன்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர், டெவலப்பர்களுக்கு மிகத் தீவிரமாக கடன் கொடுப்பது என்பது ஒரு ஆபத்தான விஷயம் எனவும் தெரிவித்தார்.

 

( Compare home loans rates online before you apply for one )

நாட்டின் மிக பெரிய வீட்டு கடன் நிறுவனமான எச்டிஎஃப்சியின் தலைவரான பரேக், "வீடு வாங்குபர்கள், டெவலப்பர்கள் வழங்கும் திட்டங்களில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்", என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அவர், "வீடு வாங்கும் வாடிக்கையாளர்கள், டெவலப்பர்கள் வழங்கும் சலுகைகளான வாடிக்கையாளர்களின் வட்டியை டெவலப்பர்களே செலுத்துவது பற்றி மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.

" நிதித் துறை நிறுவனங்கள் புதுமையான மற்றும் மிகத் தீவிரமான வீட்டுக் கடன் வழங்கும் திட்டங்களில் இருந்து விலகியிருக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு டீசர் வீட்டுக் கடன் (இத்தகைய வீட்டுக் கடன்களில் வட்டி விகிதம் கனிசமாக உயரும்) வழங்கக் கூடாது. தனி நபர்களுக்கு வழங்கும் அதே வட்டி விகிதத்தில் டெவலப்பர்களுக்கு கடன் வழங்கக் கூடாது", எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் வீட்டு நிதிச் சந்தை கண்டுள்ள வளர்ச்சியை பாராட்டியுள்ள அவர், எச்டிஎஃப்சி பங்குதாரர்களுக்கு அனுப்பிய தனது வருடாந்திர கடிதத்தில், " அடிப்படையில் கட்டுமான நிதித்துறை என்பது உயர் ஆபத்துக்களுக்கு உட்படுகிறது. இந்தத் துறையில் இது போன்ற ஆபத்துகளை தவிர்க்க இயலாது. ஆகவே இது போன்ற அபாயங்களை வருமானமாக மாற்ற வேண்டும்.

கட்டுமான நிதி, எந்த புதுமையான வழிமுறைப்படுத்துதல்கள் மூலம் தனிப்பட்ட நபருக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தில், டெவல்ப்பர்களுக்கு கிடைக்க கூடாது. மேலும், நிலங்களைப் பிரிக்கும் முன் டெவலப்பர்களுக்கு வழங்கப்படும் முன்கூட்டிய மற்றும் முழுமையான நிதி உதவி மிகவும் ஆபத்தானது", எனக் குறிப்பிட்டுள்ளார்.

நம் நாட்டில் கடுமையான வீடுகள் பற்றாக்குறை உள்ள போதிலும், வீடுகளின் விலை அதிகமாகவே உள்ளது, என பரேக் தெரிவித்தார்.

வீட்டு விலைகள் கடந்த கால வரலாறுகளை உடைத்துள்ள இந்த நேரத்தில், அதிகமான வீடுகளை சந்தைக்கு கொண்டு வருவது மட்டுமே இந்தியாவில் வீட்டு விலைகளை குறைப்பதற்கு உண்டான ஒரே வழி என நான் கருதுகிறேன். இரண்டாம் அடுக்கு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் கூட வீட்டு விலைகள் உயர்ந்து விட்டன", என அவர் தெரிவித்தார்.

மலிவு விலை வீடுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள புதிய இன தொழில் முனைவோர், மற்றும் முதல் முறை டெவலப்பர்களை, பரேக் பாராட்டியுள்ளார்.

"இத்தகைய திட்டங்களின் போக்கு சந்தையை ஊக்குவிக்கிறது, ஏனெனில் இங்கு மட்டுமே உண்மையான தேவை இருக்கிறது. இந்த மலிவு வீட்டுத் திட்டங்கள் பெரும்பாலானவை உடனடியாக விற்று வருகின்றன. இதை கவனிக்கும் மிகப் பெரிய டெவலப்பர்கள் மலிவு விலை வீடுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துவார்கள். அவர்களுடைய கவனம் பெரிய ஆடம்பர வீடுகளைத் தவிர்த்து மலிவு விலை வீடுகளின் பக்கம் திரும்பும், "என்று அவர் கூறினார்.

 

வங்கிகளின் வட்டி விகிதங்களைப் பற்றி பேசும் பொழுது, "சில வங்கிகள் ஆரம்ப காலத்தில் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்கினாலும், பிற்காலத்தில் அதை படிப்படியாக அதிகரித்து விடுகின்றன. ஆனால் அத்தகைய போக்கு மிக ஆபத்தானது அது முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டும்", என பரேக் தெரிவித்தார்.

கடன் தொகையை டெவலப்பர் தாமதப்படுத்தும் பட்சத்தில், அது பயனாளிகளின் கடன் அறிக்கையில் எதிரொலிக்கும். இத்தகைய பதிவுகளைப் பற்றி பயனாளிகள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

"இறுதியில், டெவலப்பர்கள் ஒன்றை உணர வேண்டும். நீண்ட கால நோக்கில் வீட்டு விலைகளில் ஏற்படும் திருத்தம், பணப் புழக்கத்தை அதிகரிக்கும். அது டெவலப்பர்களுக்கே சாதகமாக அமையும்" என்று அவர் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Home prices inflated; aggressive lending dangerous: Deepak Parekh

Terming the home prices as highly inflated in the country, including in smaller cities, industry leader Deepak Parekh on Friday asked builders to focus on affordable housing, rather than luxury homes, and said it is a dangerous thing to lend aggressively to developers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more