வட்டி விகிதங்கள் குறைக்க வாய்ப்பில்லை: எச்டிஎஃப்சி மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகள்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சில நாட்களுக்கு முன், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு, கடன்களுக்கு வட்டி வீகித அளவை குறைக்குமாறு வங்கிகளை கேட்டுக்கொண்டார். கடன்களுக்கு வட்டி வீத அளவை குறைக்கும் பொருட்டு சில வங்கிகள், சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி வீகித அளவையும் வெட்டின.

ஆனால் இரண்டு வாரங்களுக்கு உள்ளாகவே நிலைமாறிவிட்டது. அதாவது வங்கிகள் சேமிப்புக் கணக்குகளுக்கு வட்டி வீத அளவை அதிகரித்து, கடன்களுக்கான வட்டி வீத அளவை குறைப்பது என்பது தங்களால் இயலாத காரியம் என சொல்லாமல் சொல்லி விட்டன. கடந்த புதனன்று, யெஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கி ஆகிய மூன்று தனியார் வங்கிகள், குறைந்தகால சேமிப்புகளுக்கான வட்டி வீகித அளவை அதிகரித்துவிட்டன

வட்டி விகிதங்கள் குறைக்க வாய்ப்பில்லை: எச்டிஎஃப்சி மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகள்

 

வங்கிகள் இந்த முடிவை எடுக்க அடிப்படை காரணம், "பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளின் விளைவாக ஏற்றம் கண்ட குறைந்த கால கடன்களுக்கான வட்டி வீதமே." மத்திய ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு கடன் கொடுக்க வைத்திருக்கும் தனது LDF தொகையை குறைத்ததுடன், MSF விகிதத்தை 200 (bps) புள்ளிகள் அதிகரித்து, வங்கிகளின் கடன் வாங்கும் திறனையும் குறைத்துவிட்டது.

இதனால் ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் வாங்க, முன்பைவிட அதிகமாக செலவழிக்க வேண்டியுள்ளதால், வங்கிகள் சிக்கலில் மாட்டியுள்ளன. இந்த சிக்கலில் இருந்து தப்பித்து, தங்களுடைய இலாப அளவை கட்டுக்குள் வைக்க, வங்கிகள் சேமிப்புகளுக்கான வட்டி வீகித அதிகரிக்கலாம். அதனைப்பின் தொடர்ந்து கடன்களுக்கான வட்டி வீகித அளவையும் அதிகரிக்கலாம் என பொருளாதார துறை சார்ந்த வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

No relief in sight from high interest rates as banks raise deposit rates

Some days back the finance minister P Chidambaram was urging banks to cut their lending rates to boost economic growth, following which some lenders had started to cut their deposit rates, as that was necessary to ease the lending rates.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?