சுற்றுச்சூழலை பாதுகாக்க ரூ. 20,000 கோடி திட்டத்தை கைவிட்ட மத்திய அரசு!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சட்டீஸ்கர் மாநிலத்தின் சர்குஜா பகுதியில் உள்ள அடர்ந்த காட்டில் முன்மொழியப்பட்ட 20,000 கோடி மதிப்பிலான மிகப்பெரிய மின் திட்டத்தை, மின் அமைச்சகம் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுற்றுச்சூழல் பிரச்சினை எழும் சூழல் காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

 

"சட்டீஸ்கர் சர்குஜா பகுதியின் அமைக்கப்படவிருந்த 4,000 மெகாவாட் மெகா மின் திட்டம் கைவிடப்பட்டது." என மின்சாரத்துறை அமைச்சர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுச்சூழல் மிகவும் முக்கியம்!!

சுற்றுச்சூழல் மிகவும் முக்கியம்!!

அடர்ந்த காடுகள் அடங்கிய பகுதியில் இத்திட்டத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டதால், சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்க வாய்ப்பு இருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. சுற்றுச்சூழல் அனுமதி இல்லாததால் இத்திட்டத்தின் ஆரம்ப ஏலம் கடந்த காலத்தில் பல முறை தாமதமானது.

இப்பகுதியில் சுரங்கங்கள் அமைக்க முடியாது

இப்பகுதியில் சுரங்கங்கள் அமைக்க முடியாது

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், இத்திட்டம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இப்பகுதியில் சுரங்கங்கள் அமைக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

பி.கே. சதுர்வேதியின் குழு
 

பி.கே. சதுர்வேதியின் குழு

எனினும், திட்டக்குழு உறுப்பினர் பி.கே. சதுர்வேதி தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு, தனது அறிக்கையில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் பரித்துரையின் மீது ஐயப்பாட்டை வெளிப்படுத்தியது. மின் உற்பத்தி திட்டங்கள் பாதிக்கும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் தீர்க்க அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு (GOM) சதுர்வேதி குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டுள்ளது.

"ஆனால், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அப்பகுதியில் சுரங்க அமைக்க அனுமதி தரவில்லை" என செய்திகள் தெரிவிக்கின்றன

 

 

நிலக்கரி தொகுதியில் ஆய்வு

நிலக்கரி தொகுதியில் ஆய்வு

மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதல் படி, மெகா மின் திட்டங்கள் நிலக்கரி அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப்பின் 730 நாட்களுக்குள் ஒதுக்கப்பட்ட நிலக்கரி தொகுதியில் ஆய்வு பணியை தொடங்கியிருக்க வேண்டும். இந்த காலக்கெடு மார்ச் 2012 ல் முடிவடைந்தது.

பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்

பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்

மின் துறை சார்ந்த பணிகளுக்கு நிதி உதவி அளிக்கும் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் இதுவரை நான்கு மிகப்பெரிய மின் திட்டங்களை ஒதுக்கியுள்ளது. அவற்றுள் மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் அமைக்கவுள்ள மூன்று திட்டங்களை ரிலையன்ஸ் பவர் கைப்பற்றியுள்ளது.

டாடா பவர்

டாடா பவர்

சர்வதேச போட்டி விலைகளில் வென்ற டாடா பவர், இறக்குமதி அடிப்படையிலான நாட்டின் முதல் முதலாக மிக பெரிய மின் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt drops Rs 20,000 cr power project plan in Chhattisgarh

The Power Ministry is believed to have shelved the plan to set up a Rs 20,000-crore ultra mega power project at Chhattisgarh.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X