கிரெடிட் கார்டு தொலைஞ்சு போச்சா?? இருக்கவே இருக்கு கார்டு பாதுகாப்பு திட்டம்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு தொலைந்து போனாலோ, திருட்டு போனாலோ அதனால் ஏற்பட போகும் இழப்பை தடுக்க சில பாதுகாப்பு திட்டங்கள் உள்ளது. அதை நாம் அனைவரும் அறிந்திருப்பதில்லை. எனவே இத்தகைய திட்டம் எவ்வாறு செயல்படுகிறது, பயன்கள் பற்றி இங்கு பார்போம்.

 

கார்டு பாதுகாப்பு திட்டம்:

இந்த திட்டம் உங்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட்களுக்கு இன்ஷூரன்ஸ் பாதுகாப்பு அளிக்கும். ஒரு வேலை டெபிட்/கிரெடிட் கார்டு வைத்துள்ள பர்சை தொலைத்து விட்டீர்களானால் அதனால் பல நிதி இழப்பீடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதற்கான தீர்வு: கார்டு பாதுகாப்பு திட்டத்தை பயன்படுத்துங்கள்.

ஒன்றிற்கும் மேற்பட்ட பல கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வைத்திருப்பவர்கள் தான் தன் கார்டுகளை தொலைப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு இந்த திட்டம் பெரும் பயனை அளிக்கும். அடிப்படையில் உங்கள் கிரெடிட், டெபிட் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை பாதுகாக்கவே இந்த கார்டு பாதுகாப்பு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் கார்டுகளை நீங்கள் தொலைத்து விட்டால் உங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் சேவை வழங்கும் வங்கியிடம் அதனை பற்றி தெரிவிக்க வேண்டும். புகார் கிடைத்த உடனே வங்கி அந்த கார்டுக்கான அனைத்து சேவைகளையும் முடக்கப்படும். இதனால் கிடைக்கும் சில பயன்கள்:

தொலைபேசி

தொலைபேசி

ஒரு தொலைபேசி காலில் அனைத்து கார்டுகளையும் தடை செய்து விடலாம்.

பண உதவி

பண உதவி

கார்டுகளுடன் சேர்த்து பணத்தையும் நீங்கள் தொலைத்திருந்தால், சேவை வழங்குபவர், உங்களுக்கு குறிப்பிட்ட அளவிற்குள், சிறிதளவு பண உதவியும் அளிப்பார். இந்த பணத்திற்கு வட்டி வசூல் செய்யப்படுவதில்லை. அதனை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் திருப்பி செலுத்தி விட வேண்டும்.

திட்டம்

திட்டம்

இந்த திட்டம், மோசடியில் இருந்தும் உங்களை ஓரளவுக்கு பாதுகாக்கும்.

திட்ட கட்டணம்
 

திட்ட கட்டணம்

இந்த பயனை பெற இழப்பு ஏற்பட்டு 24 மணி நேரத்திற்குள் அதனை பற்றி தெரிவித்து விட வேண்டும். கார்டு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்ய 1,145 ரூபாய் முதல் 1,745 ரூபாய் (வரிகள் உட்படாமால்) வரை கட்ட வேண்டியிருக்கும்.

இன்ஷூரன்ஸ்

இன்ஷூரன்ஸ்

திருட்டு போன்ற இழப்புகளில் இருந்து உங்களை பாதுகாக்க சில வங்கிகள் இன்ஷூரன்ஸ் கவரேஜும் அளிக்கிறது. ஒரு வேளை இது தன்னிச்சையான கவரேஜாக இருந்தால், வங்கி இழப்பை ஏற்றுக் கொள்ளும் அல்லது கார்டு சொந்தக்காரரை ஏற்றுக் கொள்ளச் சொல்லும்.

மெய்நிகர் சொத்துக்கள்

மெய்நிகர் சொத்துக்கள்

மற்ற செல்வங்களை போலவே மெய்நிகர் சொத்துக்களை (Virtual assets) பாதுகாப்பதும் மிகவும் அவசியம். அப்படி செய்வதால் நீங்கள் உங்கள் நிதி சார்ந்த சொத்துக்களை பாதுகாத்து இழப்புகளை தவிர்க்கலாம். பணத்தை பாதுகாத்தால் அது உங்களை பாதுகாக்கும்!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Debit card and credit Card protection plan

This insurance cover for your debit or credit cards. Suppose you lose your wallet carrying multiple credit/debit cards. There can be a huge financial burden on account of theft.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X