மின் உற்பத்தியை 62% உயர்த்திய டாட்டா பவர்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நாட்டின் மிகப்பெரிய தனியார் மின் உற்பத்தி நிறுவனமான டாடா பவர் கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 1402.9 கோடி யூனிட்டுகளை உற்பத்தி செய்தது, அதை தவிடுபொடி ஆக்கும் வகையில் இப்போது 2273.8 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளதாக தனது செய்திகுறிப்பில் டாட்டா பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது அதன் உற்பத்தித் திறன் 8,521 மெகாவாட் என்ற அளவில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ஆறு மாதங்களில் தனது மின் உற்பத்தியை 62 சதவிகிதம் உயர்த்தியுள்ளதாக டாட்டா பவர் நிறுவனம் கூறியது.

மின் உற்பத்தியை 62% உயர்த்திய டாட்டா பவர்!!

அதன் துணை நிறுவனங்களான கோஸ்டல் குஜராத் பவர் லிமிடெட் (CGPL) மற்றும் மைதான் பவர் லிமிடெட் (MPL) ஆகியவை தொடர்ந்து தமது உற்பத்திப் பங்களிப்பை அளித்து வருகிறது 1157.4 கோடி யூனிட்டுகள் மற்றும் 293 கோடி யூனிட்டுகளை 2014 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் தந்து முக்கியத்துவம் பெற்றன என்று அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

CGPL முந்த்ராவில் 4,000 மெகாவாட் மிகப்பெரும் மின் திட்டத்தையும், MPL ஜார்கண்டில் 1,050 மெகாவாட் மின் திட்டத்தையும் நடத்துகின்றன.

பசுமை மின் உற்பத்தி கடந்த ஆறு மாதங்களில் 143.9 கோடி யுனிட்டுகளாக, அதாவது மொத்த உற்பத்தியில் 6 சதவிகிதமாக இருந்தது. இந்த உற்பத்தி கூடமானது பசுமை வாயுக்கள் எனப்படும் (கிரீன் ஹவுஸ்) வாயுக்களை வெளியிடாத மூலங்களிலிருந்து 20 முதல் 25 சதவிகித உற்பத்தியை பெற குறிக்கோளை கொண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata Power's generation increases 62% in first half of 2013-14

Tata Power today said it increased electricity generation by 62% in the first six months of current financial year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X