அமெரிக்காவின் குடியேற்ற மசோதாவை கண்டு அஞ்சும் இன்போசிஸ்!!..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: அமெரிக்காவில், அச்சத்தை ஏற்படுத்துகின்ற குடியேற்ற மசோதா அமுலுக்கு வரும் அபாயம் இருப்பதால், இன்போசிஸ் நிறுவனம் தன் ஆன்-சைட் வேலைகளை அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியாவிற்கு அருகில் இருக்கும் பிற நாடுகளுக்கும் மாற்றி வருகிறது.

பொது நிர்வாகம் மற்றும் விற்பனை ஆதரவு செயல்பாடுகள் போன்ற ஆக்கச் செலவு மையங்களை முதலில் இங்கு (ஆஃப்-ஷோர்) மாற்றப் போகிறது என்று இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து பிசினஸ் லைன் பத்திரிக்கைக்கு உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

பிரத்யேக நிர்வாகம், அடிப்படைவசதி நிர்வாகம் மற்றும் வியாபார செய்முறை அவுட்சோர்ஸிங் போன்ற சேவைகளை ஆஃ ப் ஷோர் செய்யும் அளவும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. குறைந்த விளிம்பு நிலை ஆன்சைட் வியாபாரத்தின் மீது சார்ந்திருப்பதையும் இந்த வினைமுறைத் திறம் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களிடம் கலந்தாலோசித்த பின்னரே ஆஃப்-ஷோர் கொண்டு வரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் நிறவன தகவல்கள் கூறுகிறது.

அமெரிக்காவின் குடியேற்ற மசோதாவை கண்டு அஞ்சும் இன்போசிஸ்!!..

குடியேற்ற மசோதாவை அமுல்படுத்துவதை பற்றி அமெரிக்க காங்கிரஸ் விரைவிலேயே விவாதிக்க போவதால், இன்போசிஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. செனேட் குழு ஏற்கனவே இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதனால் விசா செலவுகள் மற்றும் H1B விசா வைத்திருப்பவர்களின் சம்பளமும் அதிகரிக்கும். இதனால் இனி இன்போசிஸ் போன்ற நிறுவனங்களால் அமெரிக்காவில் தொழில் செய்ய சிரமப்படும்.

உள்ளூர் தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் ஐ.டி.ஈ.எஸ். தொழில்களின் 65 சதவீத வருவாய் அமெரிக்க வாடிக்கையாளர்களிடம் இருந்து தான் வருகிறது. அமெரிக்காவில் அமர்த்தப்பட்டுள்ள H1-B விசா கொண்ட பணியாளர்களை அதிக அளவில் அமர்த்தியதில் இரண்டாவது இடத்தை பெறுகிறது இன்போசிஸ்.

தகவல் தொழில் நுட்பத்துறையின் முகவாயிலாக விளங்கும் நாஸ்காம் இந்த சட்டத்தில் உள்ள ஒதுக்கீடுகளுக்காக இறங்கி வந்துள்ளது.

குடியேற்ற சட்டம் என்பது ஆப்-ஷோர் வணிகர்களான இன்போசிஸ் மற்றும் டி.சி.எஸ். போன்றவர்களுக்கு தொடர்ந்து உறுதியின்மையை ஏற்படுத்தும் என்று பிரபுதாஸ் லில்லாதர் மற்றும் சந்தை ஆய்வாளர் கூறியுள்ளனர். குடிமயேற்ற மசோதா, விசா கட்டணங்களை உயர்த்தினாலோ அல்லது உள்ளூர் பணியாளர்களை வேளையில் அமர்த்த கட்டளையிட்டாலோ, இந்திய தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்களின் விளம்பு நிலை வருவாய் பெரிதும் பாதிக்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys begins moving work out of US over immigration Bill fears

Infosys has started moving onsite work in the US to India or near-shore destinations in a move to de-risk itself in case the dreaded immigration Bill becomes law.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X