‘நிர்பயா' பெயரில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மற்றொரு திட்டம்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கான்பூர்: சமீப காலமாக ரயில்களில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், ரயில்வே போலீஸ் மற்றும் ஏனைய ஹெல்ப்லைன் எண்கள் ஆகிய தொடர்பு விவரங்கள் அடங்கிய 'நிர்பயா' அட்டைகளை வட-மத்திய ரயில்வே விநியோகித்து வருகிறது.

கான்பூர் ரயில் நிலையம் ஊடாக கடந்து செல்லும் அனைத்து ரயில்களிலும், ஏடிஎம் கார்டு அளவிலான ‘நிர்பயா' அட்டைகள் வழங்கப்படுகின்றன என ஜிஆர்பி வட்டாரம் தெரிவித்தது.

முக்கிய எண்கள்..

முக்கிய எண்கள்..

இந்த அட்டையில், உத்தர பிரதேச பெண்கள் அவசரத்தொடர்பு (ஹெல்ப் லைன்) எண்கள், ஜிஆர்பி போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் எண், ஜிஆர்பி லக்னோ கட்டுப்பாட்டு அறை மற்றும் வடமத்திய ரயில்வே பிரிவிற்கு கீழ் வரும் போலீஸ் நிலையங்கள் ஆகியவற்றின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்படடுள்ளன எனவும் இந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

24x7 மணிநேர சேவை!!

24x7 மணிநேர சேவை!!

"ரயிலில் ஒரு பெண் துன்புறுத்தலுக்கு உள்ளானால், அவர் இந்த அட்டையில் உள்ள எண்களுக்கு டயல் செய்து புகார் கொடுக்கலாம். ஜிஆர்பி போலீஸ் குழுவொன்று அடுத்த ரயில் நிலையத்தில் அவருக்கு உதவிசெய்ய விரைந்து வரும்." என ஜிஆர்பியின் வட்ட அதிகாரி சுரேந்தர் திவாரி கூறினார். "அதேபோன்று துன்புறுத்தல் பற்றி, அந்த ரயிலில் உள்ள ஜிஆர்பி ஊழியர்களிடமும் பெண்கள் புகார் கொடுக்கலாம்" எனவும் அவர் கூறினார்.

நிர்பயா

நிர்பயா

"ஒவ்வொரு பெண்ணும் ‘நிர்பயா'வை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, பாலியல் சம்பந்தமான வன்முறைகளுக்கு எதிராக தைரியமாக குரல் கொடுக்க வேண்டும்" எனவும் திவாரி கூறினார்.

டெல்லி விபத்து..

டெல்லி விபத்து..

23 வயதான மருத்துவ மாணவியான ‘நிர்பயா', டிசம்பர் 16, 2012 இல், டெல்லியில் ஒடும் பஸ்ஸில் ஆறு பேர் கொண்ட கும்பலால் கொடுரமாக கற்பழிகப்பட்டு, சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

‘Nirbhaya' card for women train passengers

To curb growing incidents of crime against women in trains, North-Central Railway is distributing ’Nirbhaya Card’, which has contacts of Railway Police and other helpline numbers inscribed on it.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X