அமெரிக்க பெடரல் வங்கித் திட்டத்தால் இந்திய சந்தைக்கு பாதிப்பு இல்லை!! நிதி அமைச்சகம்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இன்றைய வர்த்தக துவக்கத்தில் தங்கம் மீதான வர்த்தகம் ஆமை போல் மிதமாகவே செயல்பட்டது, இதனால் தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ஆனால் நாணய பரிமாற்றத்தில் இன்றைய வர்த்தகம் ரூபாயிக்கு சாதகமாக அமைந்து என்பது மகிழ்ச்சியான செய்தி.

 

கடந்த சில தினங்களாக நிலையற்ற தன்மையில் வர்த்தகம் ஆகிவரும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 62.85 ரூபாயாக உயர்ந்தது. அமெரிக்க பெடரல் வங்கியின் நிதி ஊக்குவிப்பு திட்ட குறைப்பால் ரூபாய் மதிப்பில் பெரும் வீழ்ச்சி அடையும் என அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில் இன்று காலை நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டார்.

இந்த அறிக்கையில் அமெரிக்க பெடரல் வங்கி செயல்படுத்தும் நாணய உக்குவிப்பு திட்ட குறைப்பை கண்டு நாம் அஞ்ச தேவையில்லை. இத்திட்டங்கள் அமல்படுத்தபட்டாலும் இந்தியவின் பொருளாதாரத்திற்கும், வர்த்தகத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என குறிப்பிட்டு இருந்தார். அதனால் சந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதனை உறுதிபடுத்தும் வகையில் ரிசர்வ் வங்கியும் பெடரல் திட்டங்களில் எதிர்புகளை களைய தகுந்த திட்டங்களை தீட்டி வருகிறது.

இன்று 1கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.2995, ஆனால் கடந்த வாரத்தின் இதே வியாழன் அன்று 1கிராம் தங்கம் ரூ.2987 ஆக இருந்தது குறிப்பிடதக்கது. மேலும் 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் இன்று 5 ரூபாய் குறைந்து 2798.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் ரூபாய் குறைந்து 2995.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.

10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்

ஹைதராபாத்

ஹைதராபாத்

ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.27,920

பெங்களூரு

பெங்களூரு

பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.27,880

கொல்கத்தா

கொல்கத்தா

கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.27,950

டெல்லி
 

டெல்லி

இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.27,840

சென்னை

சென்னை

நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.27,980

மும்பை

மும்பை

மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.27,800

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Markets need not worry on Fed taper: Finance Ministry

The Finance Ministry on Thursday said the U.S. Federal Reserve’s decision to trim its monetary stimulus will not affect the Indian markets and all steps would be taken by the RBI and the government to ensure financial stability.
Story first published: Thursday, January 30, 2014, 16:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X