டெலிகாம் துறையிலிருந்து வெளியேறும் டாடா குழுமம்!! சைரஸ் மிஸ்ட்ரி அறிவிப்பு..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பல்வேறு துறைகளில் மிகபெரிய அளவில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள டாடா நிறுவனம், தொலைத்தொடர்பு வணிகத்திலிருந்து முற்றிலுமாக வெளியேற முடிவு செய்துள்ளது.

 

டாடா குழுமத்தின் தலைவராக சைரஸ் மிஸ்ட்ரி பொறுப்பேற்று ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில், டாடா குழுமத்தில் ஒரு அதிர்ப்தி நிலவுகிறது. தொலை தொடர்பு துறை வணிகத்திலிருந்து டாடா குழுமம் முற்றிலும் வெளியேறுகிறது என்ற முடிவினை சைரஸ் மிஸ்ட்ரி எடுத்துள்ளதாக நேரடியான ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் டாடா குழுமம், டாடா கம்யூனிகேஷன் மற்றும் டாடா டெலி ஆகிய நிறுவனங்களை விற்கும் பொருட்டு வோடஃபோன் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது என்ற தகவலையும் தெரிவிக்கின்றன. மேலும் ஒப்பந்தததிற்கான பேச்சு வார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது.

டெலிகாம் துறையிலிருந்து வெளியேறும் டாடா குழுமம்!! சைரஸ் மிஸ்ட்ரி அறிவிப்பு..

நிர்வாக முடிவுகளில் அதிக ஆதிக்கத்தை செலுத்துவது டாடா கம்யூனிகேஷன் மற்றும் டாடா டெலி ஆகிய இரு நிறுவனங்கள் கொண்டிருப்பதால், ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தை பல கட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும். என்டிடி டோகோமோ (NTT DOCOMO) என்கிற ஜப்பானிய நிறுவனம் டாடா டெலி நிறுவனத்தில் 26% பங்குகளைக் கொண்டு மேலும் புட் ஆப்ஷன் (PUT OPTION)என்று சொல்லபடக் கூடிய குறிப்பிட்ட தேதியிலோ அல்லது அதற்கு முன்பாகவோ ஒத்துக்கொண்ட விலையில் பங்குகளை விற்கும் உரிமையினையும் கொண்டுள்ளது. மேலும் டோகோமோ நிறுவனம் தனது புட் ஆப்ஷனுக்கு ஒரு வருட நீட்டிப்பு வழங்கி, வோடஃபோன் நிறுவனத்துடனான ஒப்பந்தததிற்கான பேச்சு வார்த்தைக்கு சுலபமான வழியை உருவாக்கலாம் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. டாடா டெலி மற்றும் வோடஃபோன் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இடையேயான ஒப்பந்தததிற்கான பேச்சு வார்த்தை ஜனவரி 3 2014 அன்று நடை பெறும் என்றும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

டாடா கம்யூனிகேஷன் நிறுவனத்தில் 26% பங்குகளை கொண்டுள்ள மத்திய அரசு, வோடஃபோன் நிறுவனத்துடனான பேச்சு வார்த்தையில் பங்கு பெறும் உரிமையினையும் பெற்றுள்ளது. டாடா குழுமம் தனது நிறுவனத்திலுள்ள அரசின் பங்குகளை வாங்கி, பின் இங்கிலாந்து நாட்டிலுள்ள மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனத்திற்கு விற்கிறது. இது சம்பந்தமான பேச்சு வார்த்தை டாடா நிறுவனத்திற்கும் அரசிற்கும் இடையே நடை பெறும். இதனிடையே டாடா கம்யூனிகேஷனின் ஆப்பிரிக்க நிறுவனமான நீயோடெல் நிறுவனத்தில் உள்ள தனது பங்குகளை வோடஃபோனின் வோடகாம் நிறுவனத்திற்கு விற்கிறது.

 
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata Group to exit telecom business completely: Sources

Cyrus Mistry has decided to exit the telecom business completely, sources with direct knowledge share that the Tata Group has initiated talks with Vodafone to sell both Tata Communications and Tata Tele.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X