அதிர்ச்சி அளிக்கும் 'விலை'யில் அறிய நாணயங்கள்..!

By Super Admin
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  சென்னை: நாணயங்கள் சேகரிப்பது பலருக்கு பொழுது போக்கு, ஆனால் சிலருக்கு அது மிகப்பெரிய வியாபாரம். உலகில் உள்ள சில அறிய வகை நாணயங்களின் மதிப்பு பல கோடி மதிப்புடையது. இன்றளவும் இந்த வியாபாரம் அணையா விளக்கு போல் எரிந்து கொண்டே தான் இருக்கிறது.

  நாணயம் சேகரிப்பு ஒரு கலை என்ற சொல்லலாம், இக்கலையின் பெயர் நுமிஸ்மாடிக்ஸ் (Numismatics). சிலர் இதை வெறும் பொழுதுபோக்காக செய்கின்றனர், மற்றும் பலர் அவற்றின் வரலாற்று முக்கியத்துவம் அறிந்து அதனை சேகரிப்பதில் தங்களை ஈடுபடுத்தி கொள்கின்றனர். பழைய கிடைத்தற்கரிய நாணயத்தின் மதிப்பு அந்நாணயத்தில் அச்சிடப்பட்டுள்ள மதிப்பை விட பல மடங்கு அதிக விலையில் விற்கப்படுகிறது.

   

  சரி இந்நிலையில் உலகில் அதிக மதிப்பு கொண்ட நாணயங்கள் பற்றி தெரிந்துக்கொள்ளும் ஆர்வதினை இதை படிக்கும் ஒருவருக்கு தூண்டும். உங்கள் ஆர்வத்தை தொடர்ந்து அதிகப்படுத்தும் வகையில் உலகின் அதிக மதிப்பு கொண்ட 10 நாணயங்கள் குறித்து இங்கு ஒரு பட்டியலை அளித்துள்ளோம். தொடர்ந்து படியுங்கள்..

  (இந்திய நாணயங்களை பற்றிய நாம் அறியப்படாத சில உண்மைகள்!!)

  ஃபுளோயிங் ஹேர் டாலர்

  ஃபுளோயிங் ஹேர் டாலர் என்று அழைக்கப்படும் இந்த நாணயம் 7,850,000 டாலர் மதிப்பிற்கு விற்கப்படுகிறது. விலை உயர்ந்த நாணய வகைகளுள் இந்த நாணயம் முதலிடத்திலுள்ளது. அமெரிக்க வர்த்தகத்தில் புகழ் பெற்ற நாணயமான இது ஸ்பானிஷ் டாலரை அடிப்படையாக கொண்டது. மிக சிறந்த படைப்பான இந்த நாணயம், ராபர்ட் ஸ்காட் என்பவரால் 1794 -ல் மற்றும் 1795 - ல் வடிவமைக்கப்பட்டது. அமெரிக்க டாலரின் மதிப்பு படி 2 சென்ட் மதிப்பு கொண்டதாக விளங்கியது.

  1933 டபுள் ஈகிள்

  1933-ல் உருவாக்கப்பட்ட அமெரிக்க கோல்ட் டபுள் ஈகிள் நாணயம் உலகின் இரண்டாவது அதிக மதிப்பு கொண்ட நாணயம் ஆகும். உருவாக்கப்பட்ட 445,500 டபுள் ஈகிள் நாணயங்களில் 1933-ல் உள்நாட்டின் தங்க நியமத்தின் இடைநிறுத்தத்தின் காரணமாக, அதிகாரபூர்வமாக எந்த நாணயமும் புழகத்திற்காக வெளியிடப்படவில்லை என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த நாணயம் $7.59 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது.

  முன்றாம எட்வர்ட் நாணயம்

  முன்றாம எட்வர்ட் டபுள் புளோரின் நாணயம் உலகின் மூன்றாவது விலை உயர்ந்த நாணயத்திற்கான உரிமையை கோரியுள்ளது. இந்த நாணயம் உலக உருண்டையையும் செங்கோலையும் ஏந்தியபடி அமர்ந்து உள்ள ஒரு அரசர் தனது பின்புறம் இரு சிறுத்தைகள் மற்றும் விதானத்த்துடன் கூடிய வகையில் ஒரு சாசனம் இந்நாணயத்தில் உள்ளது. இந்த நாணயம் இங்கிலாந்து அரசர் மூன்றாவது எட்வர்டை தெளிவாக காட்டுகிறது. இந்த நாணயம் ஸ்பிங்க் ஏல நிறுவனத்தில் 460,000 பவுண்ட் மதிப்பிற்கு (தோராயமாக 6.80 மில்லியன் டாலர்) ஏலம் போனது.

  1804 சில்வர் டாலர்

  1804 சில்வர் டாலர் உலகின் நான்காவது அதிக மதிப்பு கொண்ட நாணயமாக அறியப்படுகிறது. சியாம் அரசரின் சேகரிப்பில் ஒரு பகுதியாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இது " தி கிங் ஆஃப் காயின்ஸ் " என்று பெயரிடப்பட்டது 2001-ல் ஒரு நாணய சேகரிப்பாளரால் இந்த நாணயம் வாங்கப்பட்டது. பெயர் அறியாத அந்த நபர் சியாம் அரசரின் சேகரிப்பில் அந்த நேரம் இருந்த அனைத்து நாணயங்களையும் 4.14 மில்லியன் டாலருக்கு வாங்கினார்.

  இரண்டாம் குயின் எலிஸபத்

  100 கிலோ எடையையும் 53 சென்டிமீட்டர் விட்டத்தினையும் கொண்ட 99.999 சதவீத தூய தங்கத்தினை (சந்தையின்படி தூய தங்கம்) கொண்டு உலகின் மிக பெரிய நாணயமாக இரண்டாம் குயின் எலிஸபத் விளங்குகிறது. நாணயத்திலுள்ள மூல பொருட்களின் மதிப்பை விட குறைவாக 1 மில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாணயத்தில் ராணி எலிஸபத் மற்றும் பனை இலைகள் கொண்ட சாசனம் உள்ளது. நாணயத்தின் பின்புறம் அமெரிக்க தேசிய சின்னத்தினை கொண்டுள்ளது.

  இந்திய நாணயம்

  இந்தியவின் விலை உயர்ந்த நாணயத்தை பற்றி தெரிந்துகொள்ள ஆசையா, பொருமையாக கடைசி ஸ்லைடர் வரை படிக்கவும்.

  குயிலரின் தொகுப்பிலிருந்து 1804 க்ளாஸ் 1

  ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள 1804 சில்வர் நாணயங்களின் சியாம் அரசரின் தொகுப்பின் கீழ் இந்த நாணயமும் வருகிறது. 1834 -ல் வெறும் 15 நாணயங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டன. அரிதாக கிடைக்கும் தனது இயல்பு காரணமாக, ஒரு சில நாணயங்கள் மிக உயர்ந்த மதிப்பிற்க்கு விற்கபட்டன என பதிவுகள் காட்டுகின்றன. உலகின் அதிக விலை உயர்ந்த நாணயங்களில் ஒன்றான இந்த நாணயம் 2010 -ல் 3,737,500 டாலருக்கு ஏலம் போனது.

  1913 லிபர்டி ஹெட் நிக்கல்

  அமெரிக்க 5 சென்ட் நாணயமான லிபர்டி ஹெட் நிக்கல், 1913ஆம் ஆண்டில் மிகவும் குறைந்த அளவில் அமெரிக்க அரசின் அங்கீகாரம் இல்லாமல் உருவாக்கப்பட்டது. அமெரிக்க நாணயங்களை பற்றி கூறும் நூலில் அதிக புகழ் பெற்ற அரிதான மற்றும் அனைவரும் அடைய விரும்பும் நாணயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 5 சென்ட் நாணயங்களின் மாதிரி ஒன்று 1972 - ல் 100,000 டாலருக்கு ஏலம் போன முதல் நாணயம் என்ற பெருமையை பெற்றது.

  ப்ராஷார் டப்ளுன் ஈபி ஆன் பிரஸ்ட்

  உலகின் 8வது விலை உயர்ந்த நாணயம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. 1787 -ல் உருவாக்கப்பட்ட இந்த தங்க நாணயம், ஏப்ராயீம் ப்ராஷார் என்ற பொற்கொல்லர் தங்க நாணயங்கள் தயாரிப்பில் தனக்கு வந்த உத்தரவின் படி, இந்த நாணயத்தை பெரும்பாலான அமெரிக்க நாணயங்களில் காணப்படுகிற கழுகினையும், தனது ஹால்மார்க் முத்திரையான ஈபி-யை கழுகின் மார்பிலும் பதித்து உருவாக்கினார். 1981 -ல் நடந்த ஒரு பொதுவான மக்கள் ஏலத்தில் இந்நாணயம் $625,000 டாலருக்கு விற்கப்பட்டது. கடைசியாக இந்த நாணயம் விற்கப்பட்ட விலை $2,999,000 டாலராகும்.

  செயின்ட் கௌடன்ஸ் டபுள் ஈகிள்

  இந்த நாணயம் அதன் வடிவமைப்பாளர் மற்றும் ஆகஷ்டஸ் சிற்பம் ஆகியவற்றை கொண்டு இது செயின்ட் -கௌடன்ஸ் என்று பெயரிடப்பட்டது. அமெரிக்க நாணயமான இது உலகின் விலை உயர்ந்த நாணயங்களில் ஒன்றாகும். முதன் முதலில் 1850 - ல் இந்த நாணயம் வெளியிடப்பட்டது. இந்த நாணயம் பின்புறம் சூரிய கதிர்களுடன் கூடிய சுதந்திர தேவி கையில் ஓலிவ் இலை மற்றும் ஜோதியை ஏந்தியபடி உள்ள சாசனத்தினை கொண்டுள்ளது. இந்த நாணயம் 2,999,000 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது.

  பிராஷர் டப்ளுன் ஈபி ஆன் விங்

  1787-ல் பிராஷர் டப்ளுன் ஈபி ஆன் ப்ரஸ்ட் -ஐ போலவே, பிராஷர் டப்ளுன் ஆன் விங் உருவாக்கப்பட்டது. முதலில் கழுகின் மார்பில் பதிக்கப்பட்டிருந்த ஈபி என்ற முத்திரை பின்னாளில் கழுகின் இறக்கையில் அச்சிடப்பட்டது.

  பிற விலை உயர்ந்த நாணயங்கள்

  இந்த நாணயங்களை தவிர்த்து வேறு பல நாணயங்களும், அதன் விதிவிலக்கான உயர் மதிப்பின் காரணமாக அறியப்படுகின்றன. ஆரம்ப கால சவூதி ராஜ்ஜியத்தின் சவூதி கோல்ட் தினார் மற்றும் பெட்ரோ I காரோனேசன் மற்றும் ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த " ஹோலி டாலர் " ஆகியவை விலை உயர்ந்த நாணயமாக கருதப்படுகிறது.

  இந்திய நாணயம்

  இந்த பட்டியலில் இந்திய நாணயம் ஒன்று கூட இல்லை என்பது மிகவும் வருத்தமான செய்தி. எனினும் இந்தியாவின் விலை உயர்ந்த நாணயமாக, இந்த கிராஸ் பிளாக் (Cross flag) நாணயம் கருதப்படுகிறது. இந்தியா ஆங்கிலேய கட்டுப்பாட்டில் இருந்த போது இந்த நாணயம் அச்சிடப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 20 இலட்சம் என அறியப்படுகிறது.

  வாசகர்களுக்கு இந்தியாவின் இதர விலை உயர்ந்த நாணயங்கள் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளவும்.

   

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  English summary

  10 Most Rarest and Expensive Coins in the World

  Coin collecting is a hobby to many people; while some engage in collecting coins that are beautiful and others collect them depending on their historical significance. Old and rarity of the coin hold more importance than the printed value on it.
  Company Search
  Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
  Thousands of Goodreturn readers receive our evening newsletter.
  Have you subscribed?

  Find IFSC

  Get Latest News alerts from Tamil Goodreturns

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more