இந்திய வர்த்தக சந்தையில் பேயாட்டம்- சென்செக்ஸ், நிஃப்டி வரலாற்று சாதனை..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் வர்த்தக சந்தை வரலாற்றில் முதன் முறையாக தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 7,000 புள்ளிகளை தாண்டியது. இதனால் நிஃப்டியில் இடம்பெற்றுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு, பொது துறை நிறுவனங்கள், வங்கி, மற்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறை சார்ந்த நிறுவனங்களின் மீது அதிகப்படியான முதலீடு செய்யப்பட்டதால் இன்று நிஃப்டியில் 155.45 புள்ளிகள் உயர்ந்து 7,014.25 புள்ளியாக எட்டியது.

 

நிஃப்டியில் இதற்கு முன் கடந்த வெள்ளிக்கிழமை 6,871.35 புள்ளிகள் வரை உயர்ந்தது இதுவே மிகப்பெரிய வரலாற்று சாதனையாக இருந்தது. ஆனால் இச்சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

வர்த்தக வல்லுனர்களிடம் இத்தகைய உயர்வை குறித்து கேட்டபோது, அதிகப்படியான அன்னிய முதலீடு (கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் ஒரு தளம்) மற்றும் தேர்தலையொட்டி அதிகப்படியான பங்கு வாங்கு ஆர்வமுடன் வர்த்தகர்கள் வாங்கினர். இதனாலேயே இத்தகைய உயர்வு அடைந்ததாக வல்லுனர்கள் தெரிவித்தனர்.

ஆசிய சந்தை

ஆசிய சந்தை

ஆசிய சந்தைகளில் அதிகப்படியான வர்த்தகம் செய்யப்பட்டதால் இத்தாக்கம் இந்தியாவில் தென்பட்டது. மேலும் அமெரிக்காவின் நாஸ்டாக், டவ் ஜோன்ஸ், ஆசியாவின் ஹங்சாங், காஸ்பி ஆகியவை சந்தைகளும் சிறப்பான வளர்ச்சியை பெற்றது. ஜாப்பானின் நைக்கி மட்டும் 0.35 சதவீதம் சரிந்தது.

மும்பை பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தை

நிஃப்டியை தொடர்ந்து மும்பை பங்கு சந்தையிலும் இன்று 556.77 புள்ளிகள் உயர்ந்து 23,551 புள்ளகளை அடைந்தது. இதனால் நிஃப்டியை போலவே மும்பை பங்கு சந்தையும் வரலாற்று சாதனை படைத்தது.

டாலர் - ரூபாய்
 

டாலர் - ரூபாய்

இன்று வர்த்தகம் சிறப்பாக செயல்பட்டது போல் இந்திய நாணயந்தையில் டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு அதிகப்படியாக 59.65 ரூபாயும், குறைவாக 60.06 ரூபாய் என்ற அளவில் வர்த்தகம் செய்யப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nifty Breaches 7,000 Level on Capital Inflows

The broader NSE Nifty today crossed the 7,000 level for the first time on a strong rally in oil and gas, PSUs, banking and capital goods sector stocks driven by sustained foreign capital inflows ahead of the exit poll results.
Story first published: Monday, May 12, 2014, 17:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X