மோடி அலையில் பாதித்த ஐடி நிறுவனங்கள்!! இன்போசிஸ் நிறுவனத்திற்கு பலத்த அடி..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய பங்கு சந்தை களைகட்டும் இந்த வேளையில் நாம் எப்போதும் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் ஐடி நிறுவனங்களின் பங்குகளின் நிலை என்ன??. ஒரு வழியாக மோடி பெருவாரியான இடங்களில் வெற்றிவாகை சூடும் இவ்வேலையில் ஐடி நிறுவன பங்குகள் அனைத்துமே சரிவை தழுவியது.

 

இதில் முக்கியமாக இந்தியாவின் டாப் மென்பொருள் நிறுவனங்களாக கருதப்படும் இன்போசிஸ், டிசிஎஸ், எச்சிஎல், விப்ரோ, டெக் மஹிந்திரா அகிய நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் சரிந்தது குறிப்பிடதக்கது. அதேவேலையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ரிலையன்ஸ், மற்றும் குஜராத் நிறுவனமான அதானி குழுமத்தின் அத்தனை நிறுவனங்களும் அதிகப்படியான உயர்வை சந்தித்தது.

சரிந்ததில் இன்போசிஸ் தான் டாப்

சரிந்ததில் இன்போசிஸ் தான் டாப்

இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு கடந்த ஒரு வாரகாலமாகவே சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஐடி துறையில் அதிகளவில் சரிந்த நிறுவனங்களில் இன்போசிஸ் நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இன்போசிஸ் நிறுவன பங்குகள் 2.37 சதவீதம் சரிந்து 3,192.85 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இன்போசிஸ் நிறுவனத்துடன் விப்ரோ கடும் போட்டி

இன்போசிஸ் நிறுவனத்துடன் விப்ரோ கடும் போட்டி

இந்த இரண்டு நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆடர்களை பிடிப்பதில் மயீர் பிடி சண்டை போடுவதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று, குறிப்பாக இவ்விறு நிறுவனங்களில் விற்பனை பரிவில் வேலை செய்யும் நபர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். இப்போட்டி ஆடர்களை பிடிப்பிதில் மட்டும் அல்ல பங்கு சந்தையிலும் தான். இன்போசிஸ் 2.37 சதவீதம் சரிந்தது போல விப்ரோ நிறுவனமும் 2.29 சதவீதம் சரிந்துள்ளது.

 எச்சிஎல்
 

எச்சிஎல்

இன்போசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களுக்கு மத்தியில் இப்போது எச்சிஎல் நிறுவனம் மிகவும் வேகமான வளர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் பங்குகளும் 2.24 சதவீதம் சரிந்துள்ளது.

தப்பித்தது ஹெக்ஸாவேர் மட்டும் தான்

தப்பித்தது ஹெக்ஸாவேர் மட்டும் தான்

இந்த அடியில் லாபத்தை எட்டிப் பார்த்த நிறுவனங்கள் சில நிறுவனங்கள் மட்டுமே அதில் ஹெக்ஸாவேர், சாஸ்கன் கம்யூனிகேஷ்ன் மற்றும் மாஸ்டெக் அகிய நிறுவனங்கள் மட்டும் தான். இந்நிறுவனங்களில் முதலீடு செய்யதால் அதிகப்படியான லாபம் எதும் பார்க்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை.

அப்ப டிசிஎஸ் என்ன ஆச்சு??

அப்ப டிசிஎஸ் என்ன ஆச்சு??

இந்த சுரக்காத்தில் டிசிஎஸ் நிறுவனம் மட்டும் என்ன விதிவிலக்கா?? டிசிஎஸ் நிறுவனமும் சுத்தி சுத்தி அடிவாங்கியது. இத்தகைய அடியில் டிசிஎஸ் நிறுவனம் 1.15 சதவீதம் மட்டுமே சரிந்தது தப்பித்துக்கொண்டது.

அதிக லாபம் பெற்ற நிறுவனங்கள்

அதிக லாபம் பெற்ற நிறுவனங்கள்

இன்றைய வர்த்தகத்தில் வங்கித்துறை பங்குகள் சிறப்பாக செய்லபட்டது, இதனால் ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ, மற்றும் எச்டிஎஃப் ஆகிய வங்க பங்குகள் தளா 5% முதல் 6% உயர்வை எட்டியது. இதுமட்டும் அல்லாமல் ரிலையன்ஸ், அதானி நிறுவனம், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவன பங்குகளும் அதிகளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வர்த்தக உச்சியை எட்டியது.

இன்றைய டார்கெட்

இன்றைய டார்கெட்

பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று வங்கித் துறை, பெரு நிறுவனங்கள், கட்டுமானத்துறை பங்குகளில் முதலீடு செய்தால் லாபத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys, TCS, Wipro, HCL Tech beaten down even as Sensex, Nifty rally 4 per cent

Shares in software stocks were hammered down mercilessly even as the Sensex rose a staggering 1400 points in trade today ahead of a victory for the BJP led NDA in the elections 2014. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X