வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறைகிறது!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கடந்த ஒரு மாதத்தில் இந்திய சந்தையில் அதிகப்படியான அன்னிய முதலீடு கிடைத்தது, இதனால் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது. மேலும் கடந்த நடந்த வர்த்தகத்தில் வங்கித்துறை பங்குகள் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது. இதன் எதிரொலியாக இந்திய வங்கிகள் வீட்டு கடனுக்கான வட்டி வகிதத்தை குறைக்க துவங்கியுள்ளன.

 

மேலும் தற்போது வீடு கட்ட நினைக்கு மக்கள் எல்லோரும் வங்கி கடனை அதிகளவில் நாடுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. மேலும் வங்கிகளில் தனி நபர் கடனை விட வீட்டுக் கடனுக்கான தொகை அதிகளவில் உள்ளதாக வங்கித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி வீட்டு கடனுக்கான வட்டி விகதத்தை 15 மற்றம் 10 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. பெண்களுக்கான வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 10.1 சதவீதமாகவும், மாத வருமானம் பெறும் தனிநபருக்கு 10.15 சதவீதமாக வட்டி வகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் இந்த வட்டி வகிதம் 10.25 சதவீதமாக இருந்தது.

ஸ்டேட் வங்கி

ஸ்டேட் வங்கி

நாட்டின் மிகப்பெரிய பொது துறை வங்கியான ஸ்டேட் வங்கியும் 75 இலட்சத்திற்கு குறைவாக கடன் வாங்கும் பெண்களுக்கு 10.1 சதவீத வட்டியும், மற்றவர்களுக்கு 10.15 சதவீத என்ற அளவில் வீட்டு கடன்களை அளித்து வருகிறது.

எச்.டி.எஃப்.சி
 

எச்.டி.எஃப்.சி

மேலும் இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுகடன் அளிக்கும் நிறுவனமான எச்.டி.எஃப்.சி, 75 இலட்சத்திற்கும் குறைவான வீட்டு கடன் தொகைக்கு 10.25 சதவீதம் வட்டியை விதிக்கிறது. மேலும் சில நாட்களில் இந்நிறுவனம் வட்டி விகிதங்களை குறைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆக்சிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கி

தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி 75 இலட்சத்திற்கும் குறைவான வீட்டு கடன்களுக்கு 10.25 சதவீதம் வட்டி விதிக்கிறது.

குறைந்த கால சலுகை

குறைந்த கால சலுகை

இந்த வட்டி குறைப்பை பற்றி ஐசிஐசிஐ வங்கி அதிகாரிகளை கேட்ட போது "இது மே15 முதல் ஜூன் 30 வரை மட்டும் விதிக்கப்படும் ஒரு குறைந்த கால சலுகை மட்டுமே" என தெரிவித்தார். மேலும் இந்த வட்டி மாற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என மிக தெளிவாக கூறினார்.

99 சதவீதம்

99 சதவீதம்

இந்திய வங்கித்துறையில் அளிக்கப்படும் வீட்டு கடனில் 99 சதவீதம் 75 இலட்சத்திற்கும் குறைவானது என்று வங்கித்துறை தகவல்கள் தெரிவிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ICICI bank cuts home loan rates by up to 15 basic points

ICICI bank has cut home loan rates for women and salaried individuals by 15 and 10 basis points, respectively. Home loans up to Rs 75 lakh will be available at 10.1% for women and 10.15% for salaried men as against 10.25% earlier.
Story first published: Tuesday, May 20, 2014, 10:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X