இந்த நாட்ல செலவு ரொம்ப கம்பியாம் பாஸ்.. வாங்களேன் ஓரு ரவுண்டு போவோம்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உயர்ந்து வரும் செலவுகள் மற்றும் பொருளாதாரத்தில் அதிகரித்து வரும் ஏற்றதாழ்வுகள், ஆகியவற்றின் காரணமாக தங்கள் நாட்டின் பொருளாதார சமநிலையை பேணி காப்பதில், உலக நாடுகள் பல இடர்பாடுகளை சந்திகின்றன. எனினும் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மொத்தம் ‍177 நாடுகளில், குறைந்த செலவுகளுடைய நாடுகளாக கருதிகிறது.

இந்த நாடுகள் குறைவான செலவுகளை கொண்டுள்ளதாகவும், மனிதன் வாழ்வதற்கான மலிவான இடங்களாகவும் கருதப்படுகின்றன. அந்த வகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில நாடுகள் குறைவான செலவுகளை கொண்டவை என்று யாஹூ தெரிவிக்கிறது.

எகிப்து

எகிப்து

எகிப்து நாட்டின், மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளால் அந்நாட்டின் பொருளாதரத்தில் ஏற்ற தாழ்வுகள் காணப்படுகின்றன. எனினும் மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது எகிப்தில் செலவுகள் மிகவும் குறைவே! இந்நாட்டில் பட்டினியால் வாடும் மக்களை பார்க்க முடியாது. மேலும் இங்கு உணவு மிகவும் மலிவாகவும் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் தாரளமாக கிடைக்கிறது.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

உலகில் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான், 21ஆம் நூற்றாண்டின் சிறந்த பொருளாதார திறன் கொண்ட நாடாக கருதப்படுகிறது. நாட்டில் பெருகி வரும் தீவரவாதத்தால், இந்நாட்டின் பொருளாதரத்தில் தாக்கத்தை ஏற்படுத்கின்றன. மேலும் குறைவான வேலை வாய்ப்பு, சமநிலையற்ற பங்கீடு இவற்றின் காரணமாகவும், போக்குவரத்து மற்றும் இரயில்வே போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்து செய்வதிலும் குறைபாடுகள் காணப்படுகின்றன.

இது போன்ற பல காரணங்களால் பொருளாதாரத்தில் சிறந்த நாடாக உருவெடுப்பது என்பது எட்டாத கனவாகவே உள்ளது. ஒப்பீட்டளவில் பார்க்கும் பொது வசிப்பிடம் மற்றும் உணவு ஆகியவற்றிற்கான செலவுகள் மிக குறைவாகவே கானப்படுகிறது.

 

மியான்மர்

மியான்மர்

இந்நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் 97 சதவீதத்தை அரிசி உற்பத்தியை மட்டுமே பெற்றுள்ளது. மேலும் விலை உயர்ந்த கற்களான மாணிக்கங்கள், முத்துக்கள் மற்றும் ஜேட் ஆகியவை இந்நாட்டில் உற்பத்தி செய்யபடுகின்றன. அடக்குமுறை ஆட்சியின் கீழ் 1௦ ஆண்டுகள் கழிந்த பின்னர் மியான்மர் தனது முன்னேற்றத்தை நோக்கி மீண்டு வருகிறது. 2010ஆம் ஆண்டின் தேர்தலுக்கு பின்னர் நாட்டில் அமைந்த அரசாங்கத்தின் தூண்டுதலினால், அயல்நாடுகளுடனான குறிப்பாக மேற்கத்திய நாடுகளுடனான உறவு வலுப்பெற்று வருகிறது.தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள ஏழை நாடுகளில் ஒன்றாக் மியான்மர் கருதப்படுகிறது.

எத்தியோப்பியா

எத்தியோப்பியா

உலகின் பெரிய கால்நடை உற்பத்தியாளர்களுக்கு மத்தியில் இடம் பெற்றுள்ள எத்தியோப்பியாவில் உணவு மிகவும் மலிவாகவே கிடைக்கிறது. வேளாண்மை உற்பத்தி இங்கே மிக குறைவாகவே காணப்படுகிறது அடிக்கடி ஏற்படும் வறட்சி, நாட்டின் மிக முக்கியமான பிரச்சனையாக கருதப்படுகிறது. 2009ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில் எதியோப்பியா வேகமாக பொருளாதரத்தில் முன்னேறிவரும் நாடுகளுக்கு மத்தியில் இடம் பெற்றிருந்தது.

 லாவ் பிடிஆர்

லாவ் பிடிஆர்

இந்நாட்டின் சுற்றுலா துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெருமளவில் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. இதன் பொருளாதாரம் பெருமளவு முதலீடு மற்றும் இதன் அண்டை நாடுகளான சீனா, வியட்நாம் ,மற்றும் தாய்லாந்து ஆகியவற்றுடனான வர்த்தகத்தை சார்ந்துள்ளது.இந்நாட்டில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே அதாவது நாள் ஒன்றுக்கு 1.25 அமெரிக்க டாலருக்கும் குறைவாக செலவு செய்து வாழ்கின்றனர்.

வங்கதேசம்

வங்கதேசம்

வெள்ளம், வறட்சி, புயல், ஊழல், வறுமை, மக்கள்தொகை பெருக்கம் மற்றும் நிலையற்ற அரசு ஆகிய பல காரணிகளை உள்ளடக்கிய அரசியல், பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொண்ட வங்காளம் தனது படிப்படியான முயற்சியில் வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.வங்கதேசம் விடுதலை அடைந்ததிலிருந்து மனித மற்றும் சமூக முன்னேற்றத்தில் குறிபிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது.இது ஏற்றதாழ்வுகள் நிறைந்த பொருளாதாரத்தை நிலையானதாக்க உதவியது.

இந்தியா

இந்தியா

இந்தியா தனது வேகமான வளர்ச்சியுடன் பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற தேவையான அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தியா மலிவான செலவுகளை கொண்டு வாழ்வதற்கு சிறந்த இடமாக விளங்குகிறது.இந்தியா தனது அற்புத அழகை மிகவும் மலிவான விலையில் உங்களுக்கு காண கிடைக்க செய்கிறது. தங்குமிடத்திற்கான செலவு, போக்குவரத்து, சுவை மிகுந்த உணவு வகைகள், வசீகரிக்கும் சுற்றுலா இடங்கள், ஆகியவை அனைத்தையும் மிக மலிவான விலையிலேயே நாம் பெற முடியும். மேலும் இவற்றின் விலை மதிப்பை விட நாம் மேற்சொன்ன யாவும் அதிக மதிப்பு கொண்டவை ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

World's 7 Least Expensive Countries

With the soaring expenses and rising fluctuations in the economy, many countries are facing difficulty in maintaining their economic parity. However, according to the new World Bank Report released, out of 177 countries.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X