பேஸ்புக் டுவிட்டரில் கலக்கும் இந்திய வங்கிகள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: அரசியல்வாதிகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பிரச்சாரங்களை செய்து வரும் போது, இந்திய வங்கிகளும் இதே வழிமுறைகளில் தங்களுடைய வாடிக்கையாளர்களை, மிகவும் திறமையான முறையில் நெருங்க முயற்சிப்பது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் கிடையாது. எனினும், இந்த வகையில் 'சமூக' அந்தஸ்து பெறுவதற்கு வங்கிகள் பல கோடிகளும் பல மணிநேரங்களையும் முதலீடு செய்துள்ளது.

 

மைன்ட் ஷிப்ட் இன்டெராக்டிவ் நிறுவனத்தின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆய்வில் ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.டி.பி.ஐ வங்கி மற்றும் கோடக் மகிந்திர வாங்கி ஆகியவை சமூக வலைத்தள ஊடகங்களை ஆக்ரோஷமான முறையில் பயன்படுத்தி வருகின்றன.

பேஸ்புக்

பேஸ்புக்

தற்போது பேஸ்புக்கில் இந்தியாவின் வங்கி நிறுவனங்களில் 2,989,931 பேருடன், ஐசிஐசிஐ வங்கி பேஸ்புக்கில் மற்ற வங்கிகளை விட முன்னணியில் உள்ளது. அதேபோல் 2.46 மில்லியன் பேருடன் ஆக்சிஸ் வங்கி இரண்டாம் இடத்தில் உள்ளது.

டிவிட்டரில் முதல் இடம்

டிவிட்டரில் முதல் இடம்

கோடாக் மகிந்திரா வங்கி 100,057 பேருடன் டுவிட்டர் இணைய தளத்தில் யாரும் நெருங்க முடியாத வகையில், முதலிடத்தில் இருந்தாலும், பேஸ்புக்கில் இந்த வங்கிக்கு 'லைக்' கொடுப்பவர்கள் அதிகமில்லை. 2,17,425 பேர் மட்டுமே இந்த வங்கியை பேஸ்புக்கில் தொடர்ந்து வருகின்றனர், மற்ற வங்கிகள் முன்நோக்கி சென்று கொண்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வங்கிகள்
 

சமூக ஊடகங்களில் வங்கிகள்

புதிதாக தொடங்கும் திட்டங்களை கவனிக்கப் போகிறோம் என்று சொல்லும் ஆக்சிஸ் வங்கி, டுவிட்டரில் சில போட்டிகளை நடத்தியுள்ளது. ஆக்சிஸ் வங்கி புதிதாக வெளியிட்ட, யூத் கார்டுகளைப் பற்றிய தாக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டாக சமீபத்தில் ஒரு மைக்ரோசைட்-ஐ உருவாக்கியுள்ளது. இது அந்த வங்கியின் முதன்மை தளத்திற்குள்ளிருந்து கொண்டு, 'யூத் கார்டு'-என்ற அப்ளிக்கேஷனை பேஸ்புக்கில் மையப்படுத்தும் பணியை இந்த மைக்ரோசைட் செய்யும். இந்த அப்ளிக்கேஷன் மூலம் தங்களுக்கான டெபிட் கார்டுகளை டிசைன் செய்பவர்கள் ஐபாட் அல்லது சாம்சஜ் கேலக்ஸி போன்களை பரிசாகப் பெறுவார்கள்.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கியும் கூட பாக்கெட்ஸ் ஆன் பேஸ்புக் (Pockets on Facebook) என்ற சமூக வங்கிதள பயன்பாட்டுக் கருவியை அறிமுகம் செய்துள்ளது. இந்த பயன்பாட்டு கருவி வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு தகவல்களை பார்க்க விடுவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் பணத்தை டிரான்ஸ்பர் செய்யவும், சினிமா டிக்கெட்கள் எடுக்கவும், மொபைல் ரீசார்ஜ் செய்யவும் மற்றும் செலவுகளை பிரித்து, கவனிக்கச் செய்யவும் உதவும்.

கோடக் மகிந்திர வங்கி

கோடக் மகிந்திர வங்கி

கோடக் மகிந்திர வங்கியும் தன்னுடைய சேமிப்பு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டாக 'சுப்பு சாப் ஜன்ந்தா ஹய்' என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்த பிரச்சாரம் தொடர்பாக டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் இவர்கள் போட்டிகளை நடத்தி வருகின்றனர். எனினும், இந்த பிராண்டில் பேஸ்புக்கில் போஸ்டிங் போடுவதில் சீரற்ற நிலையே நிலவி வருகிறது.

இதில் என்ன பலன்?

இதில் என்ன பலன்?

வெளிப்படையாக சொன்னால், வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான பலனும் இல்லை. மிகச்சிறந்த வாடிக்கையாளர் தொடர்பு நேரமாக இருப்பது ஹெச்.டி.எஃப்.சி வங்கிக்கு 5 மணி நேரம் உள்ளது. இது மிகவும் மோசமான நிலையில் இருக்கும் ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளர் தொடர்பு நேரத்தை விட மிகவும் சிறப்பானதாகும்.

மோசமான வாடிக்கையாளர் சேவை

மோசமான வாடிக்கையாளர் சேவை

சமூக வலைத்தளத்ங்களில் அதிகமான வாடிக்கையாளர்களை ஐசிஐசிஐ வங்கி கொண்டிருந்தாலும், அவர்களுடைய கேள்விகளுக்கு டுவிட்டரில் பதிலளளிக்க 1 நாள், 13 மணி நேரம் மற்றும் 49 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian banks on Twitter, Facebook

At a time when politicians are fighting their election battles on social media, it is not amusing that banks too have taken to Twitter and Facebook to reach out to their customers in a more effective manner.
Story first published: Wednesday, June 25, 2014, 10:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X