டெல்லி: இந்தியன் மகாராஜா என்று அழைக்கப்படும் ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரிகளின் மீது தங்க கடத்தலுக்காக, கடந்த முன்று வருடத்தில் சுமார் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்நிறுவனத்தை பற்றி சரம் குறைவான வாடிக்கையாளர் சேவை, சுகாதாரமற்ற உணவு, மெத்தனமான பணிகள் சேவை என பல குற்றச்சாட்டுகள் இந்நிறுவனத்தின் மீது உள்ளது. இந்த காரணங்களுக்காகவே இந்நிறுவனத்தின் பயணிகளின் எண்ணிக்கைய வெகுவாக குறைந்தது குறிப்பிடதக்கது.
(Read: 4 bank fixed deposits where there is no penalty on breaking the deposit before maturity)

தங்க கடத்தல்
உலக நாடுகளில் சீனாவிற்கு அடுத்து அதிகளவில் தங்கத்தை இறக்குமதி செய்வது இந்தியா தான். இந்நிலையில் கடந்த வருடம் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க தங்கம் மற்றும் வெள்ளி இற்குமதி வரியை சுமார் 10 சதவீதம் வரை மத்திய அரசு அதிகரித்தது. இதனால் இந்தியாவில் தங்க இறக்குமதி அதிகளவில் குறைந்தது. ஆனால் முறையற்ற வகையில் தங்கம் அதிகளவில் இந்தியாவிற்குள் வந்தது குறிப்பிட்டதக்கது. இந்த கடத்தலும் விமானத்துறை அதிகாரிகளே துணை போனது வருந்தக்கூடியது.

கடத்தல்
இந்த கடத்தல் அதிகளவில் இறக்குமதி செய்ய வாகனங்கள் மூலமும், தங்க கட்டிகளை விழங்குதல் போன்ற முறையில் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிகிறது. பொதுவாக தங்க கட்டிகளை விழுங்கிவிட்டால் விமான நிலைய பாதுகாப்பு சோதனையில் இருந்து எளிதாக தப்பித்து விடலாம் என்ற கருத்து உண்டு.

நடவடிக்கைகள்
மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஊழியர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விமான போக்குவரத்து துறையின் ஜி.எம். சித்தேஸ்வரா தெரிவித்தார். மேலும் அவர் கடத்தப்பட்ட தங்கத்தின் அளவு குறித்து தெரிவிக்கவில்லை.

ஒரு வருடம் மட்டும்
கடந்த வருடம் மட்டும் சுமார் 2.34 டன் தங்கத்தை கடத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் வோல்டு கோல்டு கவுன்சில் கூறுகையில் இந்தியாவிற்கு சுமார் 200 முதல் 250 டன் தங்கம் முறையற்ற வகையில் வந்திருப்பதாக தெரிவித்துள்ளது.