பெங்களுரூ: இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சீஇஓ மற்றும் நிர்வாக இயக்குனராக விஷால் சிக்கா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார். இதன் பின்பு அவர் பேசுகையில் இன்போசிஸ் இழந்த நம்பிக்கையை மீண்டும் கொண்டு வர கடினமாக தான் உழைக்கபோவதாக அவர் தெரிவித்தார். மேலும் அவர் இனி வரும் ஆண்டுகளில் நிறுவன வளர்ச்சியில் புதுமை கண்டுபிடிப்புகளுக்கும் முக்கிய இடம் இருக்கும் என அவர் தெரிவித்தார்.
மேலும் இன்போசிஸ் நிறுவனத்தின் 3.0 உத்தி அறிக்கையை முழுமையாக படிக்கவில்லை என்றும் அடுத்து தான் மேற்கொள்ள உள்ள அமெரிக்க பயணத்தின் போது அதை கண்டிப்பாக படித்து முடிப்பதாவும் அவர் தெரிவித்தார்.
(Read: 4 fixed deposits with monthly interest income that retired individuals could invest)

முக்கிய பணிகள்
மேலும் நிறுவனத்தின் பின் அலுவலக நடைமுறை சேவைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும் அவற்றை உடனடியாக நவின முறையில் மாற்றியமைக்கப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கண்டுபிடிப்புகள்
இந்நிறுவனத்தின் அடுத்த கட்ட முயற்சி என்றால் அது புதிய கண்டுபிடிப்புகள் தான், இது தவிர்க முடியாத ஒன்று. புதி கண்டுபிடிப்புகள் மூலம் நிறுவன வளர்ச்சி மட்டும் அல்லாமல் நிறுவனத்தின் அதிகப்படியான செலவுகளை குறைக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

நம்பிக்கை
இன்போசிஸ் நிறுவனத்தின் பிரச்சனைகளை கண்டு நிறுவன ஊழியர்கள் முதல் வாடிக்கையாளர்கள் வரை அனைவருக்கும் நிறுவனத்தை குறித்த நம்பிக்கை குறைந்துள்ளது. இதை களையும் வகையில் இன்போசிஸ் நிறுவனத்தை பற்றி அனைவருக்கும் நம்பிக்கையை ஊட்ட வேண்டும் என்று விஷால் சிக்கா தெரிவித்தார்.

ஊக்க மருந்து
இன்போசிஸ் நிறுவனத்திற்கு நம்பிக்கை ஊட்டும் ஒரே மருந்து வெற்றி மட்டுமே. இந்த வெற்றிக்கு நிறுவனத்தின் அனைத்து மட்ட ஊழியர்களும் மிகவும் ஆர்வமாகவும், சிறப்பாகவும் செயல்பட வேண்டும் எனவம் அவர் தெரிவித்தார்.

வெற்றி ஒன்றே இலக்கு
மேலும் விஷால் சிக்கா "வெற்றிக்கு வழி வகுக்கும் பிளான் ஏ மட்டுமே உள்ளது, பிளான் பி எதுவும் இல்லை" என்று திட்டவட்டமாக மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்தார்.