6 துறைகளில் 36% வராக்கடன்!! ரிசர்வ் வங்கியின் அதிர்ச்சி தகவல்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய வங்கித்துறைக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கும் வராக்கடன் பட்டியலில் உள்கட்டமைப்பு, உலோகங்கள், ஜவுளி, ரசாயனங்கள், பொறியியல் மற்றும் சுரங்கம் ஆகிய 6 முக்கிய துறைகளின் கடன்கள் மட்டும் 36 சதவீதம் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் இந்த 6 துறைகளும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகுக்கிறது. நாட்டின் பொருளாதாரம் இருக்கும் நிலைமையில் இத்துறை மற்றும் மொத்த வராக் கடன் அளவு பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைக்கல்லாக உள்ளது.

வளர்ச்சி

வளர்ச்சி


ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கடந்த வருடம் 3.4 சதவீதமாக இருந்த வராக் கடன் நடப்பு நிதியாண்டில் 4.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி இதனை களைய பல தரப்பட்ட முயற்சிகள் செய்து வருகிறது.

சொத்து விற்பனை

சொத்து விற்பனை

தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் வராக்கடன் குறைக்கும் விதமாக வங்கி சொத்துக்களை அதிகளவில் விற்று வருகிறது. 2014ஆம் ஆண்டின் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வங்கிகள் சுமார் 127.1 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை விற்றுள்ளது. கடந்த காலாண்டுகளில் விற்பனை செய்த சொத்துக்களின் மதிப்பு 35.7 பில்லியன் ரூபாய் மற்றும் 6 பில்லியன் ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருந்தது குறிப்பிடதக்கது.

தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள்

தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள்

பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் 3.8 சதவீதத்தில் இருந்து 4.7 சதவீமாக உயர்ந்துள்ளது. அதேபோல் வெளிநாட்டு வங்கிகளின் வராக்கடன் அளவும் 3 சதவீத்தில் இருந்து 3.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.


ஆனால் தனியார் துறை வங்கிகளின் வராக்கடன் அளவு 1.9 சதவீதம் மட்டுமே உள்ளது.

ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்

வராக் கடன் அளவு தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் ராகுராம் ராஜன் எச்சரித்த உலக பொருளாதார நிதி நெருக்கடி நினைவிக்கு வருகிறது. மேலும் இந்திய பொருளாதரத்திற்கு முதுகெலுப்பாக இருப்பது இந்திய வங்கித்துறை தான். இத்துறையின் வலிமைப்பெருத்தே நாட்டின் வளர்ச்சியும் அமையும்...

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI says 36% of total bad loans are from six key sectors

The Reserve Bank has said about 36 per cent of the overall 4.1 per cent bad assets in the system have been created by six sectors of the economy - infrastructure, metals, textiles, chemicals, engineering and mining. 
Story first published: Monday, August 25, 2014, 15:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X