ஜி20 நாடுகளுக்கும் வந்த புதிய பிரச்சனை!! உலக வங்கி

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகம் முழுவதும் ஒரு மிகப்பெரிய வேலைவாய்ப்பு நெருக்கடியை சந்திக்க உள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது. 2030ஆம் வருடத்திற்குள் உலகம் முழுவதிலும் 600 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கினால் தான் மக்கள் தொகைக்கும் ஈடான வளர்ச்சியை பெற முடியும். இல்லை என்றால் உலக பொருளாதாரம் மிகப்பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

 

இச்செய்தியை உலக வங்கி ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு கூட்டத்தில் வெளியிட்டது. மேலும் ஜி20 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

(இன்றைய இன்ஜினியரிங் பட்டதாரிகளின் உண்மை நிலை!!)

ஆஸ்திரேலியாவில் கூட்டம்...

ஆஸ்திரேலியாவில் கூட்டம்...

ஜி20 நாடுகளின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக கூட்டம் ஆஸ்திரேலியாவில் நடந்தது. இதில் உலக நாடுகளில் வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கான சாத்திய கூற்றுகை ஆய்வு செய்தனர்.

வேலையில்லா பட்டதாரி...

வேலையில்லா பட்டதாரி...

தற்போது 100 மில்லியன் பட்டதாரிகள் வேலையில்லாமல் இருப்பதாகவும், ஜி20 நாடுகள் சுமார் 447 மில்லியன் மக்கள் ஒரு நாளுக்கு 2 டாலருக்கும் குறைவான வருமானத்தை பெற்று வருவதாக முக்கிய அமைச்சர் ஒரு தெரிவித்தார்.

உலக வங்கி

உலக வங்கி

உலக வங்கியின் உயர் தலைவர் நேய்ஜெல் டவ்ஸ் கூறுகையில்," இந்த ஆய்வின் நமக்கு உலக நாடுகளில் தரமான வேலைகளும் வேலைவாய்ப்புகளும் உருவாக்க வேண்டும் என்ற தெளிவான தகவலை தருகிறது. " என்று தெரிவித்தார்.

ஊதிய வித்தியாசம்
 

ஊதிய வித்தியாசம்

மேலும் அவர் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளான பிரேசில், சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ள ஊதிய வித்தியாசத்தை பிரச்சனையை விரைவில் களைய வேண்டுகோள் விடுத்தார். மேலும் இப்பிரச்சனை அண்டை நாடுகளுக்கும் விரிவடைந்து வருவாதாகவும் அவர் தெரிவித்தார்.

மேஜிக் புல்லட்

மேஜிக் புல்லட்

இத்தகைய பிரச்சனையை சமாளிக்க மேஜிக் புல்லட் எதும் இல்லை, இந்த நிலைமை மாற சில காலம் ஆகும் என டவ்ஸ் கூறினார். மேலும் உலக நாடுகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப வேலைவாய்ப்பு உருவாக்கினாலே நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். இங்க இந்தியாவுலையும் அது தான் பிரச்சனை.

ஜி20 நாடுகள்

ஜி20 நாடுகள்

ஜி20 கூட்டமைப்பில் இந்தியவு சேர்த்து சுமார் 20 நாடுகள் உள்ளது. அவை அர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பா யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்ஸிக்கோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, கொரியா, துருக்கி, ஐக்கிய ராஜ்யம், அமெரிக்கா குடியரசு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

A Global Jobs Crisis Is Coming, Says World Bank

We are heading for a global jobs crisis, says the World Bank, warning that 600 million new jobs would have to be created by the year 2030 just to keep up with current levels of population growth.
Story first published: Wednesday, September 10, 2014, 16:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X