மாதச் சம்பளம் வாங்குவோருக்கு இந்த கிரேடிட் கார்டு தான் பெஸ்ட் சாய்ஸ்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நம்மில் எத்தனை பேருக்கு கிரேடிட் கார்டுகளை சரியாகப் பயன்படுத்தத் தெரியும்? சந்தேகமே! பெரும்பாலானோர் தாங்கள் கணக்குகளை வைத்துள்ள வங்கி கொடுத்தது என்ற காரணத்திற்காக மட்டுமே அவற்றை வைத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் பல கார்டு வகைகள் இருந்தாலும் மாதச் சம்பளம் பெறுவோருக்கான கார்டுகள் நிரந்தர வைப்புகள் (பிக்ஸ்ட் டெபாசிட்) மற்றும் பிற பிரத்தியேக திட்டங்களுடன் கிடைக்கின்றன.

வழக்கமாக, உங்கள் கிரேடிட் கார்டிலுள்ள கிரேடிட் லிமிட் அதாவது கடன் உச்சவரம்பு உங்களின் வருடாந்திர வருமானம் அல்லது உங்களுடைய பழைய கடன் பரிவர்தனைகளின் பதிவுகளின் அடிப்படையில் அமைகிறது ஒவ்வொரு வங்கியும் தனக்கென தனி வரைமுறைகளைக் கொண்டுள்ளன. ஆனால் பெரும்பாலும் உங்களின் வருடாந்திர வருமானம் எவ்வளவு அதிகமோ அவ்வளவு அதிகமான உச்சவரம்பு இருக்கும்.

இந்நிலையில் மாத சம்பளம் வாங்குவோருக்கான சிறந்த கிரேடிட் கார்டுகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.

சிட்டி பாங்க் பிளாட்டினம் கிரேடிட் கார்ட்

சிட்டி பாங்க் பிளாட்டினம் கிரேடிட் கார்ட்

சிட்டிபாங்க் வழங்கும் இந்த பிளாட்டினம் கிரேடிட் கார்டு, தொடங்குவதற்கோ அல்லது வருடாந்திர கட்டணமாகவோ எதுவுமின்றி கிடைக்கிறது. ஆனால், பெரும்பாலான வங்கிகள், தொடக்க கட்டணம் அல்லது அதிகமான வருடாந்திரக் கட்டணம் ஆகியவற்றை தங்கள் கிரெடிட் கார்டில் விதிக்கின்றன. இந்த வங்கி, உங்கள் செலவுகள் அல்லது பே பேக் எனப்படும் பணம் திரும்பக் கிடைக்கும் சலுகைகளில் மாதாந்திர வட்டியாக 3.25 சதவிகிதம் விதிக்கிறது.

தச் சம்பளக்காரர்களுக்கு, இந்த கார்டு மிகவும் சிறந்ததாக இருக்கும். இது ஐந்து மடங்கு ரிவார்ட் பாய்ண்ட்களை பொருட்கள் வாங்கும்போதும் உணவகங்களில் செலவிடும்போதும் தருவதுடன், சினிமா டிக்கெட், பயணச்சீட்டு ஆகியவற்றில் தள்ளுபடிகளையும், தவணை முறை வசதி உட்பட பல சலுகைகளையும் வழங்கி வருகிறது.

ஹெச்டிஎஃப்சி ப்ளாட்டினம் ப்ளஸ் கிரேடிட் கார்ட்

ஹெச்டிஎஃப்சி ப்ளாட்டினம் ப்ளஸ் கிரேடிட் கார்ட்

ஹெச்டிஎஃப்சி யின் இந்த கிரேடிட் கார்டு 3.15 சதவிகித மாதாந்திர வட்டி விகிதத்துடன் கிடைக்கிறது. வருடத்திற்கு 299 ரூபாய் கட்டணமாக செலுத்தவேண்டியிருந்தாலும், நீங்கள் முப்பதினாயிரம் ரூபாய்க்கு மேல் 12 மாதங்களில் செலவிட்டிருந்தால், வங்கி இந்த கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கும்.

கிரேடிட் கார்டு கடன்களை அவ்வப்போது குறிப்பிட்ட தேதிகளுக்குள் செலுத்திவிடுவது நல்லது. ஆனால் உங்களால் இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் கட்ட இயலவில்லை என்றால், கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால், இந்த வங்கி அதற்கான தாமதக் கட்டணம் அல்லது லேட் ஃபீயை குறைவாகவே வசூலிக்கிறது.

 

ஸ்டேட் பாங்க் கோல்ட் அண்ட் மோர் கார்ட்

ஸ்டேட் பாங்க் கோல்ட் அண்ட் மோர் கார்ட்

இந்த கார்டின் படி, வருடாந்திரக் கட்டணம் 499 ரூபாய். ஆனால், 12 மாதங்களில் 75,000 ரூபாய்க்கு மேல் செலவு செய்திருந்தால், எஸ்பிஐ உங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கும்.

இது மட்டுமின்றி, இந்த கோல்ட் அண்ட் மோர் கார்டின் மூலம் செய்யப்படும் சிறப்பங்காடி செலவுகள், வீட்டுபொருட்கள் வாங்கும் செலவுகள் ஆகியவற்றில் 2.5 சதவிகித பணம் திரும்பக் கிடைக்கும். மேலும் முதல்முறை ஏடிஎம்-இல் பணம் எடுக்கும்போது 100 ரூபாயும், கட்டணமில்லாத ஆட்-ஆன் கார்டுகளும் இந்த கார்டுடன் கிடைக்கும் கூடுதல் பலன்களாகும்.

 

ஆக்ஸிஸ் பாங்க் ப்ளாட்டினம் கிரேடிட் கார்ட்

ஆக்ஸிஸ் பாங்க் ப்ளாட்டினம் கிரேடிட் கார்ட்

ஆக்ஸிஸ் பாங்க் இந்த கார்டின் மூலம் பல சலுகைகளைத் தருகிறது. இதில், உங்கள் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்வது, எரிபொருள் நிரப்புவதில் உள்ள 2.5 சதவிகித கூடுதல் கட்டணத்திலிருந்து விலக்கு, மாட்ரிக்ஸ் செல்லுலர் (matrix cellular) மற்றும் ஹெர்ட்ஸ் கார் வாடகை (Hertz car rentals) நிறுவனங்களில் சிறப்பு சலுகைகள் ஆகியவை அடங்கும்.

இந்த கார்டின் தொடக்கக் கட்டணம் சற்று அதிகமாக 500 ரூபாய்கள். ஆனால் 45 நாட்களுக்குள் ரூபாய் ஐந்தாயிரத்திற்கும் மேலாக செலவு செய்தால் நீங்கள் இதை செலுத்த வேண்டியதில்லை. இந்த வங்கி மாதாந்திர வட்டியாக 2.95 சதவிகிதத்தை வசூலிப்பதுடன், வட்டியில்லாத நாட்கள் 20 முதல் 50 வரை இருக்கும்.

 

ட்ரம்ப் கோல்ட் கிரேடிட் கார்ட் – கோடக் மஹிந்த்ரா பாங்க்

ட்ரம்ப் கோல்ட் கிரேடிட் கார்ட் – கோடக் மஹிந்த்ரா பாங்க்

இந்த வங்கி தொடக்கக் கட்டணமாக எதையும் பெருவதில்லை ஆனால் வருடக் கட்டணமாக 499 ரூபாயை வசூலிக்கிறது. மூன்று லட்சம் அல்லது அதற்கு மேல் சம்பளம் பெரும் எந்த ஒரு நபரும், அவருடைய வருடாந்திர வருமானத்தினடிப்படையில் இந்த கார்டிற்கு தகுதியானவராவார்.

இந்த வங்கியின் கார்டு, சினிமா டிக்கட்டுகள், உணவக செலவுகள் ஆகியவற்றில் 10 சதவிகித பணத்தைத் திரும்பத் தருவதோடு, வட்டியில்லா மாதத் தவணை வசதிகள், ரயில் டிக்கட்டுகளில் 1.8 கூடுதல் கட்டண வில்லக்கு மற்றும் தொலைந்த கார்டுகளில் வாடிக்கையாளரின் பொறுப்பிலிருந்து விலக்கு ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 Best Credit Cards For Salaried Professionals

People own credit cards because their banks offer them, but the truth is that no one knows to use it properly. There are different kinds of credit cards, but the ones for the salaried professionals come with fixed deposits and other add-on schemes.
Story first published: Saturday, September 20, 2014, 10:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X