ஒரே நாளில் ரூ.600 கோடி வர்த்தகம்!! "பிளிப்கார்ட்"க்கு வந்தது புது பிரச்சனை..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், கடந்த அக்டோபர் 6ஆம் தேதி நடத்திய பிக் பில்லியன் டே தள்ளுபடி விற்பனையில் பல குளறுபடிகள் நடந்தது. பிளிப்கார்ட் நிறுவனம் பல முன்னணி நிறுவனங்களின் பொருட்களை சலுகை விலையில் விற்றதை எதிர்த்து விற்பனையாளர்கள் மத்திய அரசிடம் புகார்களை குவித்த வண்ணம் உள்ளனர்.

 

மன்னிப்பு..

மன்னிப்பு..

6ஆம் தேதி நடந்த குளறுபடிக்களுக்கு இந்நிறுவனத்தின் தலைவர்கள் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் தனது வாடிக்கையாளர்கள் அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்டனர். ஆனால் புகார்களை பெற்ற வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "மன்னிப்பு மட்டும் போதாது, நடந்த தவறுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து புகார்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளது மேலும் இந்திய ஆன்லைன் வர்த்தகத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவணித்து வருகிறது." என்று எச்சரித்துள்ளார்.

புகார்கள்

புகார்கள்

இந்த ஷாப்பிங் இணையதளத்தில் விற்பனையாளர்கள் (Sellers) அளிக்கும் விலையை விட குறைவான விலையில் பிளிப்கார்ட் விற்பனை செய்து வருவதால் சந்தையில் எங்களது பொருட்களின் விற்பனை கடுமையாக பாதித்துள்ளது, இதனால் முக்கிய சந்தைகளில் நுழைய முடியவில்லை என்று முன்னணி நிறுவனங்கள் மத்திய அரசிடம் புகார் அளித்துள்ளது. மேலும் சில நிறுவனங்கள் பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களை மட்டுமே சார்ந்து இருக்கும் நிலையில் உள்ளது.

விலையேற்றம்
 

விலையேற்றம்

மேலும் எல்.ஜி நிறுவனத்தின் துணை தலைவர் சஞ்சீவ் அகர்வால் கூறுகையில்,"எங்களது நிறுவனத்தின் இணையதளத்தில் 32 இன்ச் எல்.சி.டி டிவியின் விலை 14,900 ரூபாய் தான், ஆனால் பிளிப்கார்ட் நிறுவனத்தில் இதன் விலை 27,000 ரூபாய். இத்தகைய விலைஏற்றத்தின் காரணமாக சந்தையில் எங்களது நிறுவனத்தின் மதிப்பு குறைந்துள்ளது, அதேபோல் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது" என்று கூறியுள்ளார்.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

இது குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், "புகார்களை விசாரித்த பின்பு சில்லறை வர்த்தக துறையில் புதிய விதிமுறைகளை அமைப்பதா இல்லை பிளிப்கார்ட் நிறுவனத்திடம் விளக்கம் கேட்பதா என்பதை முடிவு செய்ய முடியும். ஆனால் கண்டிப்பாக குற்றத்திற்கு தகுந்த பாடம் கிட்டும்" என அவர் தெரிவித்தார்.

பிளிப்கார்ட் நிறுவனம் சந்திர்க்கும் பிரச்சனைகள்

பிளிப்கார்ட் நிறுவனம் சந்திர்க்கும் பிரச்சனைகள்

1. முறைகேடுகளை குறித்து அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் பிளிப்கார்ட் நிறுவனம் அமலாக்க இயக்குனரகம் விசாரணையை சந்திக்க உள்ளது.

2. விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்கும் பட்சத்தில் இந்நிறுனத்தின் கிடங்குகளில் இருக்கும் பொருட்களுக்கு வாட் வரி வசூல் செய்ய வேண்டும்.

3. அக்டோபர் 6ஆம் தேதி நடந்த விற்பனையில் குறைவான விலையில் விற்பனை செய்ததற்காக விசாரணை போன்ற சில முக்கிய பிரச்சனைகளை சந்திக்க உள்ளது.

பிளிப்கார்ட் ரியாக்ஷன்

பிளிப்கார்ட் ரியாக்ஷன்

மத்திய அமைச்சர் மற்றும் விற்பனையாளர்களின் செயல்களை கண்ட பிளிப்கார்ட் நிறுவன செய்திதொடர்பாளர் கூறுகையில்,"இச்சந்தையில் விற்பனையாளர்கள் நேரடியாக எங்களது தளத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். விலை நிலைகளையும் அவர்கள் தான் முடிவு செய்கின்றனர். விலை மாற்றத்திற்கு நிறுவனத்திற்கு எந்த விதமான தொடர்பும் இல்லை." என்று தெரிவித்துள்ளார்.

போட்டித்தன்மை

போட்டித்தன்மை

மேலும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் அடிமட்ட விலை விற்பனை சந்தையில் போட்டித்தன்மையை அடியோடு குறைத்துள்ளது. இதனால் நிறுவனங்கள் நேரடியாக சந்தையை கைபற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது. என பியூச்சர் குருப் தலைவர் கிஷோர் பியானி தெரிவித்துள்ளார்.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீடு

மேலும் நிர்மலா சீதாராமன் இந்திய சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளது நினைவிருக்கும். இன்றைய நிலையில் இத்துறையில் ஈபே, அமேசான் மற்றும் வால்மார்ட் ஆகிய 3 அன்னிய நிறுவனங்கள் உள்ளது.

ஈ-காமர்ஸ்

ஈ-காமர்ஸ்

நாட்டின் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தின் மொத்த மதிப்பு தற்போது 18,000 கோடி, 2016ஆம் ஆண்டுக்குள் அது 50,000 கோடியை எட்டும் என்று இந்தியாவின் சில முக்கிய ஆய்வு நிறுவனங்கள் கணித்துள்ளது. இத்துறையில் கடுமையான மற்றும் நிலையான சட்டதிட்டங்கள் இல்லாத காரணத்தால் இத்துறை நிறுவனங்கள் அதிகளவில் மோசடிகளில் ஈடுப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Big Billion Day sale cost Flipkart big; govt takes notice

The blockbuster Big Billion Day sale on Flipkart that gave it $100 million in revenue in only 10 hours has clearly backfired on the poster boy of Indian e-commerce. Flipkart is now facing government scrutiny, following complaints from traders over undercutting prices and adversely affecting competition. A probe by the Competition Commission of India (CCI) is not ruled out.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X