ஓரே நாளில் சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம துவக்கம் முதலே 70 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது. மேலும் மதிய வேளையில் வங்கித்துறை பங்குகளில் செய்ப்பட்ட வர்த்தகத்தின் எதிரொலியாக சென்செக்ஸ் சுமார் 400 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.

 

அதேபோல் நிஃப்டியும்119 புள்ளிகள் உயர்ந்தது 7962 புள்ளிகள் வரை எட்டியது குறிப்பிடதக்கது.

வங்கித்துறை பங்குகள்

வங்கித்துறை பங்குகள்

நேற்றைய வர்த்தகத்தை ஒப்பிடுகையில் வங்கித்துறை பங்குகளின் வர்த்தகம் சுமார் 9 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் உலக வங்கி 2014ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி சுமார் 5.6 சதவீதம் எட்டும் என அறிவித்தது. இதன் காரணமாக நீண்ட மற்றும் குறுகிய கால வர்த்தகத்துடன் பாதுகாப்பான லாபத்தை பெறவும் முதலீட்டாளர்கள் வங்கித்துறையே தேர்ந்தெடுத்து அதிகளவில் முதலீடு செய்துள்ளனர்.

வங்கிகள்

வங்கிகள்

இன்றைய வர்த்தகத்தில் பெடரல் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, ஆந்திரா வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், அலகாபாத் வங்கி, கனரா வங்கி, மற்றும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் 3 சதவீத வளர்ச்சியை பெற்றது, அதேபோல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகிய வங்கிகள் 2-3 சதவீத வளர்ச்சியை பெற்றது.

ஆசிய சந்தைகள்
 

ஆசிய சந்தைகள்

அமெரிக்காவின் நிதி கொள்ளையில் மாற்றம் இல்லாத காரணத்தால் ஆசிய சந்தைகள் உயர்வை சந்தித்துள்ளது. குறிப்பாக ஹங் செங் சந்தை மற்றும் ஷாங்காய் சந்தைகள் வளர்ச்சியை சந்தித்தது.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

அமெரிக்காவின் பெடரல் வங்கியின் பத்திர கொள்முதலில் மற்றம் இல்லாத காரணத்தால் ரூபாய் மதிப்பு சுமார் 35 பைசா வரை உயர்ந்து 61.05 டாலராக விற்கப்படுகிறது.

பிற துறைகள்

பிற துறைகள்

மேலும் இன்றைய வர்த்தகத்தில் வங்கித்துறை மட்டும் அல்லாது அனைத்து துறைகளும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக ரியல் எஸ்டேட் துறை, ஹெல்த்கேர், எண்ணெய் & எரிவாயு, உலோக மற்றும் பவர் ஆகிய துறைகள் அனைத்தும் 1-2 சதவீத வளர்ச்சியை பெற்றது.

தங்கம் மற்றும் வெள்ளி

தங்கம் மற்றும் வெள்ளி

இந்தியாவில் விழாக்காலம் துவங்கியதன் காரணத்தால் தங்கம் மற்று வெள்ளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பங்குசந்தையில் தங்கம் மீதான வர்த்தகத்தில் நேற்று 0.72 சதவீதம் அதிகரித்து 27,080 ரூபாய் வரை உயர்ந்தது. சில்லறை வணிகத்தில் 22 கேரட் ஒரு கிராம் தங்கம் 17 ரூபாய் அதிகரித்து 2554 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிலோவிற்கு 280 ரூபாய் அதிகரித்து 38,746 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இனி 10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரத்தை இந்தியாவின் முக்கிய நகர வாரியாக பார்க்கலாம்.

ஹைதராபாத்

ஹைதராபாத்

ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.25,600

பெங்களூரு

பெங்களூரு

பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.25,560

கொல்கத்தா

கொல்கத்தா

கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.25,580

டெல்லி

டெல்லி

தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.25,420

சென்னை

சென்னை

நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.25,540

மும்பை

மும்பை

மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.25,440

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex zooms 400 points; Nifty gains over 100 points

Benchmark indices are trading 1.5% higher each in the late noon trades on sustained buying by retail and fund investors in bank shares. The 30-share Sensex is up 408 points at 26,655 and the 50-share Nifty has gained 119 points at 7,962.
Story first published: Thursday, October 9, 2014, 15:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X