26,000 புள்ளிகளில் தடுமாறும் இந்திய பங்கு சந்தை!! ஐரோப்பிய சந்தைகளின் தாக்கம்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஐரோப்பிய சந்தைகளின் மந்த நிலையால் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சந்தைகள் கடந்த 3 நாட்களாக 25,900 முதல் 26,300 புள்ளிகளில் தடுமாறிவருகிறது. மேலும் சிறு முதலீட்டாளர்களின் வர்த்தகம் தற்போது கணிசமாக குறைந்துள்ளதாகவும் பங்கு சந்தை ஆய்வு நிறுவனங்கள் தெரிவிக்கிறது.

 

மேலும் ஐரோப்பியில் ஸ்பெயின் ஜெர்மன், மற்றும் பிரஞ்சு சந்தைகள் தற்போது இருப்பு பங்குகளை அதிகளவில் விற்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது இந்த பாதிப்பு இந்திய சந்தைகளிலும் தென்படுகிறது.

பொருளாதார மந்தநிலை...

பொருளாதார மந்தநிலை...

ஐரோப்பிய சந்தைகளில் முக்கியமான ஸ்பானிஸ் IBEX 35 4 சதவீத சரிவையும், ஜெர்மன் DAX மற்றும் பிரஞ்ச் CAC சந்தைகளுக்ம் 3 சதவீத அளவில் சரிந்துள்ளது. இதனால் உலகின் மொத்த பொருளாதார வளரச்சியில் தொய்வு ஏற்ப்படும் என சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

என்ன காரணம்??

என்ன காரணம்??

இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கவின் வேலை வாய்ப்பின்மை அளவீடுகள் 14 வருட சரிவை சந்தித்துள்ளதால் முதலீட்டாளர்கள் அதிகப்படியான வளர்ச்சி மற்றும் லாபத்தை நோக்கி ஐரோப்பிய சந்தை பங்குகளை விற்று அமெரிக்க சந்தையில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.

பத்திர கொள்முதல்
 

பத்திர கொள்முதல்

இதுமட்டும் இல்லாமல் அமெரிக்காவின் பெடரல் வங்கி, வேலை வாய்ப்பின்மை அளவீடுகள் குறைந்துள்ள காரணத்தினால் பத்திர கொள்முதலில் மாற்றும் ஏதும் அறிவிக்கவில்லை. இதனால் இந்தியா உட்பட முக்கிய சந்தைகள் அனைத்தும் அமெரிக்க சந்தைகளில் முதலீடு செய்ய துவங்கியுள்ளது.

ஐரோப்பிய சந்தை

ஐரோப்பிய சந்தை

ஐரோப்பிய பங்கு சந்தையில் FTSEurofirst 300 1 சதவீதம் சரிவு பெற்று 13மாத சரிவை சந்தித்துள்ளது. மேலும் இந்த சரிவால் ஐரேப்பிய சந்தைகளில் வங்கி பங்குகள் மட்டும் 2.7 சதவீதம் சரிவை சந்தித்தது. இதனால் இந்திய சந்தைகள் அடைந்த பாதிப்பு என்ன???

இந்திய சந்தைகள்

இந்திய சந்தைகள்

ஐரோப்பிய சந்தைகளின் மந்த நிலை காரணமாக நேற்று ஒரு நாளில் மட்டும் சென்செக்ஸ் 349 புள்ளிகள் சரிவை தளுவியது, இதேபோல் நிஃப்டியும் 115 புள்ளிகள் சரிவை சந்தித்தது.

உலோக மற்றும் கட்டமான சந்தைகள்

உலோக மற்றும் கட்டமான சந்தைகள்

இதே நாளில் உலோக சந்தையில் முக்கிய நிறுவனங்களான டாடா ஸ்டீல், ஸ்டெர்லைட், ஹன்டல்கோ ஆகிய நிறுவனங்கள் அதிகளவில் சரிவை சந்தித்தது. மேலும் கட்டுமான நிறுவனங்களான டி.எல்.எஃப் செவ்வாய் கிழமை மட்டும் 26 சதவீதம் சரிந்தது குறிப்பிடதக்கது.

ஐடி துறை

ஐடி துறை

மேலும் இன்றைய வர்த்தகத்தில் ஐடி துறை பங்குகள் டிசிஎஸ் பங்குகள் 7.5 சதவீத சரிவும், ஹெச்.சி.எல் நிறுவனம் 8 சதவீத சரிவும் மற்றும் டெக் மஹிந்திரா 6 சதவீத சரிவும் பெற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex struggles at 26000 IT stocks hammered on numbers

Fears over slowdown in global economic growth also led to fresh selling in IT stocks. IT majors in India derive bulk of their income from abroad and stuttering economic growth could pose fresh worries.
Story first published: Friday, October 17, 2014, 14:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X