தீபாவளி போனஸ்: பணியாளர்களுக்கு கார், வீடு, தங்கம் மற்றும் வைர நகைகள்...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சூரத்: குஜராத் மாநிலத்தின் சூரத்தை சேர்ந்த ஒரு வைர வியாபாரி, தீபாவளி போனஸாக தனது 1,200 பணியாளர்களுரக்கு கார், வீடுகள், தங்கம் மற்றும் வைர நகைகள் பரிசாக கொடுத்துள்ளார்.

 

இதுவரை இந்தியாவில் ஏன் உலகளவில் யாரும் செய்திராத வகையில் வியாபார இலக்குகளை எட்டியதிற்காக பணியாளர்களை மகிழ்விக்கும் வகையில் ஹரிகிருஷ்ணா எக்ஸ்போர்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் பால்கி சாவ்ஜிபாய் தோலாகியா பணியாளர்களுக்கு பரந்த மனதுடன் வலைஉயர்ந்த பரிசு பொருட்களை வழங்கியுள்ளார்.

கார்கள் மற்றும் வீடுகள்

கார்கள் மற்றும் வீடுகள்

நடப்பு நிதியாண்டில் வியாபார இலக்குகளை எட்டிய சுமார் 1200 பணியாளர்களுக்கு அதிரடியான பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் கார் இல்லாத 491 பணியாளர்களுக்கு கார்களும், சொந்த வீடு இல்லாத 200 பணியாளர்களுக்கு வீடுகளும் 525 பணியாளர்களுக்கு விலை உயர்ந்த தங்கம் மற்றும் வைர நகைகளை வழங்கியுள்ளார் பால்கி.

பால்கி சாவ்ஜிபாய் தோலாகியா

பால்கி சாவ்ஜிபாய் தோலாகியா

கடந்த வருடம் நிறுவனத்தில் 1200 பணியாளர்களை தேர்ந்தெடுத்தோம், இவர்களுக்கு வியாபார இலக்குகளை நிர்ணயம் செய்தோம். இலக்கை எட்டியவர்கள் அனைவருக்கும் அவர்களின் உழைப்பிற்கு பரிசாக சில பரிசுகளை வழங்கினோம் என்று பால்கி சாவ்ஜிபாய் தெரிவித்தார்.

பொறாமை

பொறாமை

வருடத்தின் இறுதியில் சம்பள உயர்வு கிடைக்காக குட்டிகரனம், சோமர்சால்ட் போடும் இந்தியா பணியார்களுக்கு இந்த செய்தி இவர்களின் மீது பொறாமை பட வைக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

போனஸாக 50 கோடி
 

போனஸாக 50 கோடி

பால்கி சாவ்ஜிபாய் தோலாகியா அவர்களிடம் செய்தியாளர்களிடம் பேசுகையில் பணியாளர்களுக்கு போனஸ் அளிப்பதற்காக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளோம்.

சூரத்

சூரத்

குஜராத் மாநிலத்தின் சூரத் என்றாலே பெரும்பாலானோருக்கு நினைவில் வருவது ஆடை மற்றும் துணி உற்பத்தி என்பது தான் ஆனால் இந்தியாவில் மிகப்பெரிய வைர வியாபாரம் மற்றும் வைர உற்பத்தி இங்கு தான் நடைபெற்று வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Diwali bonus: 500 cars, 200 flats given by this Gujarat boss to his employees

A diamond merchant in Gujarat's Surat city gifted nearly 500 cars and about 200 flats besides expensive jewellery as Diwali bonus to 1200 of his employees.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X