இந்தியாவின் ஏற்றுமதி 5.04 சதவீதம் சரிவு

By Mayura Akilan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: அக்டோபர் மாத ஏற்றுமதி 5.04 சதவீதம் சரிந்து 2,607 கோடி டாலராக இருக்கிறது.கடந்த ஆறு மாதங்களுக்குப் பின்னர் இந்தியாவின் ஏற்றுமதி பின்னடைவை சந்தித்துள்ளது.

 

பெட்ரோலியம், எலெக்ட்ரானிக்ஸ், என்ஜீனியரிங் பொருட்கள் மற்றும் இரும்புத் தாது ஏற்றுமதி சரிந்ததால் கடந்த வருடம் அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது ஏற்றுமதி சரிந்தது. அதேசமயம் இறக்குமதி 3.16 சதவீதம் அதிகரித்து 3,945 கோடி டாலராக இருக்கிறது. ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்தால் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்தது.

இந்தியாவின் ஏற்றுமதி 5.04 சதவீதம் சரிவு

கடந்த ஆறு மாதங்களுக்கு பின், இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி பின்னடைவை கண்டுள்ளது. இதன்படி, சென்ற அக்டோபர் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 5.04 சதவீதம் சரிவை கண்டு, 1.56 லட்சம் கோடி ரூபாயாக (2,600 கோடி டாலர்) குறைந்துள்ளது என, மத்திய அரசின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ஜினீயரிங் பொருட்களின் ஏற்றுமதி இந்திய ஏற்றுமதியில் கணிசமாக பங்கு வகிக்கும். ஆனால் இந்த ஏற்றுமதி 9.18 சதவீதம் சரிந்து அக்டோபர் மாதத்தில் 520 கோடி டாலராக இருந்தது. அதே போல எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின் ஏற்றுமதியும் 30.36 சதவீதம் சரிந்து 49.5 கோடி டாலராக இருக்கிறது. மந்தமான ஐரோப்பிய சந்தையும் இதற்கு ஒரு காரணமாகும்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தேவை சுணக்கம் கண்டுள்ளதையடுத்து மருந்து (-8.33%), நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள்(-2.25%) பருத்தி நூலிலை/துணிகள்(-13.84%) மற்றும் பெட்ரோலிய பொருட்கள் (-0.16%)ஆகியவற்றின் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவு சரிந்துள்ளன.

இந்த நிலையில் தங்கம் இறக்குமதி, கணக்கீட்டு மாதத்தில் மிகவும் அதிகரித்த காரணத்தால், நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதி,3.62% உயர்ந்து, 3,945கோடி டாலராக (2.37 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில்,3,807 கோடி டாலராக இருந்தது. மதிப்பீட்டு மாதத்தில், தங்கம் இறக்குமதி மட்டும், 109 கோடி டாலரிலிருந்து (6,540 கோடி ரூபாய்),417 கோடி டாலராக ( 25,000 கோடி ரூபாய்) எகிறியுள்ளது.

 

நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கும் வகையில், மத்திய அரசு, தங்கம் இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் காரணமாக, கடந்த பல மாதங்களாக தங்கம் இறக்குமதி கட்டுக்குள் இருந்தது.

இந்நிலையில், பண்டிகை காலத்தையொட்டி தேவை அதிகரித்ததை அடுத்து, சென்ற அக்டோபரில், தங்கம் இறக்குமதி, 283 சதவீதம் உயர்ந்துள்ளது. இதையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 1,059 கோடி டாலரிலிருந்து, 1,345 கோடி டாலராக எகிறியுள்ளது.

இதன் எதிரொலியாக, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ரிசர்வ் வங்கி, மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து வருவதாக, ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் எஸ்.எஸ்.முந்த்ரா தெரிவித்தார். இதையடுத்து தங்கம் இறக்குமதிக்கு மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் முதல் அக்டோபர் வரை

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான, ஏழு மாத காலத்தில்,இந்தியாவின் ஏற்றுமதி, 4.72 சதவீதம் வளர்ச்சி கண்டு, 18,979 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதே காலத்தில், இறக்குமதியும், 1.86 சதவீதம் அதிகரித்து, 27,355 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது.

ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதி அதிகமாக உள்ளதையடுத்து, மதிப்பீட்டு ஏழு மாத காலத்தில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 8,376 கோடி டாலராக உள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 8,731 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. பண்டிகை காலத்தை யொட்டி, தேவை அதிகரித்ததை அடுத்து, தங்கம் இறக்குமதி 283 சதவீதம் அதிகரித்து 6,540 கோடியிலிருந்து 25,020 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1,059 கோடி டாலராக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை இப்போது 1,330 கோடி டாலராக அதிகரித்திருக்கிறது.

என்ஜினீயரிங் பொருட்களின் ஏற்றுமதி இந்திய ஏற்றுமதியில் கணிசமாக பங்கு வகிக்கும். ஆனால் இந்த ஏற்றுமதி 9.18 சதவீதம் சரிந்து அக்டோபர் மாதத்தில் 520 கோடி டாலராக இருந்தது. அதே போல எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின் ஏற்றுமதியும் 30.36 சதவீதம் சரிந்து 49.5 கோடி டாலராக இருக்கிறது. மந்தமான ஐரோப்பிய சந்தையும் இதற்கு ஒரு காரணமாகும்.

இறக்குமதியில் எண்ணெய் பொருட்களின் இறக்குமதி 19.2 சதவீதம் சரிந்து 1,236 கோடி டாலராக அக்டோபர் மாதத்தில் இருக்கிறது. ஆனால் எண்ணெய் இல்லாத பொருட்களின் இறக்குமதி 18.9 சதவீதம் அதிகரித்து 2,708 கோடி டாலராக இருக்கிறது.

ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் ஏற்றுமதி 18,979 கோடி டாலராக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது இது 4.7 சதவீதம் அதிகமாகும். அதேபோல இறக்குமதி 27,355 கோடி டாலராக இருக்கிறது.

ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் வர்த்தகப்பற்றாக்குறை 8,375 கோடி டாலரும். இது கடந்த வருடம் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் (8,731 கோடி டாலர்) போது சிறிதளவு குறைவாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Exports down 5% in Oct, first decline in FY15

On a day when Prime Minister Narendra Modi tried to hard-sell India in Australia, data released showed merchandise exports fell 5.04 per cent to $26.09 billion in October from $27.48 billion a year earlier. The fall in exports, the first this financial year,
Story first published: Tuesday, November 18, 2014, 13:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X