விற்பனையை அதிகரிக்க பிளிப்கார்ட் உடன் இணைந்தது "சேலம் ஸ்டீல்"!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சேலம்: தமிழகத்தில் பல உருக்கு ஆலைகள் இருந்தாலும், சேலம் ஸ்டீல் நிறுவனத்திற்கு மக்கள் மத்தியிலும், நிறுவனங்கள் மத்தியிலும் தனி இடம் உண்டு. சேலம் ஸ்டீல் நிறுவனத்தின் சமயலறை சாதனங்கள் மற்றும் பாத்திரங்களின் விற்பனையை தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதிலும் விற்பனை செய்ய, இந்நிறுவனம் ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

 

உள்நாட்டு சந்தை

உள்நாட்டு சந்தை

இந்த இணைப்பின் மூலம் உள்நாட்டு சந்தையை அதிகளவில் பிடிக்க முடியும் என இந்நிறுவனம் நம்புகிறது. இதற்கு முன் சேலம் ஸ்டீல் தனது தயாரிப்புகளை கார்பரேட் நிறுவனங்கள், மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் பிற உருக்கு நிறுவனங்களுக்கு மட்டுமே விற்பனை செய்து வந்தது குறிப்பிடதக்கது.

12 பொருட்கள்

12 பொருட்கள்

மேலும் இந்நிறுவனத்தின் விற்பனை கூடிய விரைவில் ஆன்லைன் விற்பனை சந்தைக்கு கொண்டு வரும் என தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக 12 விதமான பொருட்களை விற்பனை செய்ய உள்ளது, இதன் விலை நிலை 600 ரூபாய் முதல் 3,750 ரூபாய் வரையில் இருக்கும் எனவும் சேலம் ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விற்பனையில் சாதனை
 

விற்பனையில் சாதனை

கடந்த வருடம் இந்நிறுவனம் 10 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை வழக்கமான முறையில் விற்பனை செய்துள்ளது, இதன் எடை 150 டன் முதல் 160 டன் வரை இருக்கும் என இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

விரிவாக்கம்

விரிவாக்கம்

எங்களின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியிலும், நிறுவனங்களுக்கு மத்தியிலும், சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதால், விற்பனை அளவை அதிகரிக்கவும், சந்தையை விரிவாக்கவும் எளிமையான யோசனையை கையாண்டு உள்ளோம்(பிளிப்கார்ட்).

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட் நிறுவனம் பல பிரிவுகளில் விற்பனை செய்து வருகிறது, அதில் சமயலறை சாதனங்கள் மற்றும் பாத்திரங்கள் பிரிவில் மட்டும் இந்நிறுவனம் ஒரு மாதத்திற்கு 10 கோடி ரூபாய் அளவில் விற்பனை செய்து வருவது குறிப்பிடதக்கது.

உற்பத்தி பிரிவு

உற்பத்தி பிரிவு

சேலம் ஸ்டீல்ஸ் நிறுவனம் சமையலறை சாதனங்களை பிரத்தியேகமாக தயாரிக்க புதிய தயாரிப்பு ஆலையை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது நாள் வரை ஹைதெராபாத்தில் இருந்த ஒரு தனியார் நிறுவனத்தின் உதவியுடன் தயாரித்து வந்தது.

வாடிக்கையாளர்

வாடிக்கையாளர்

சேலம் ஸ்டில்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் பட்டியலில் பல தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் உண்டு, அதில் திருப்பதி தேவஸ்தானம், திகார் ஜெயில், கேரளா கோஆப்ரேட்டிவ் மில்க் பெடரேஷன் மற்றும் பல கல்வி நிறுவனங்கள் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Salem Steel teams up with Flipkart to sell utensils

Salem Steel Plant (SSP) has just tied up online market place Flipkart. The objective is to expand its domestic market share.
Story first published: Tuesday, December 16, 2014, 11:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X