பிரான்ஸ் நாட்டின் வர்த்தகத்தில் முன்னிலை!! டிசிஎஸ்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: அடுத்த ஐந்து வருடத்தில் பிரான்ஸ் நாட்டின் வர்த்தகத்தலிருந்து 5 பில்லியன் டாலர் வருவாயை ஈட்ட வேண்டும் என்ற மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்துள்ளோம் என ஐரோப்பிய ஆய்வாளர்களிடம் டாடா கன்சல்டன்ஸி சர்விசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

2019-20ஆம் ஆண்டுக்குள் பிரான்ஸ் நாட்டின் முதன்மையான 5 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக முன்னேர வேண்டும் என்ற ஆர்வத்தை டி.சி.எஸ். கொண்டுள்ளது என அதன் உலகளாவிய தலைவர் மற்றும் எண்டெர்ப்ரைஸ் சொல்யூஷன் பிரிவின் துணை தலைவரான திரு. கிருஷ்ணன் ராமானுஜன் ஆய்வர்களிடம் கூறினார்.

ரூ.530 கோடிக்கு அல்டி

ரூ.530 கோடிக்கு அல்டி

2013 ஆம் ஆண்டில் அல்டிஸ் என்ற பிரான்ஸ் நாட்டின் நிறுவனத்தை 530 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியதால், பிரான்ஸ் நாட்டில் டி.சி.எஸ். நிறுவனம் மிக வலுவாக கால் பதித்துள்ளது.

ஆற்றல் மிகுந்த டி.சி.எஸ்

ஆற்றல் மிகுந்த டி.சி.எஸ்

"பிரான்ஸில் டி.சி.எஸ். நிறுவனத்தின் ஆக்ரோஷமான வளர்ச்சி இலக்கு: 3 வருடத்திற்குள் முதல் 10 இடத்திலும், 5 வருடத்திற்குள் முதல் 5 இடங்களிலும் இடம்பெறும், மேலும் 1 பில்லியன் டாலர் வருவாய் என்ற இலக்கை எட்டும்!" என நெல்சன் ஹால் ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த டொமினிக் ரவியர்ட் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பிரெஞ்ச் மொழி பயிற்சி

பிரெஞ்ச் மொழி பயிற்சி

மேலும் நிறுவனத்தில் பிரெஞ்ச் மொழி ஆற்றல்களை வளர்த்திட அல்லயன்ஸ் ஃபிரான்சைஸின் உதவியுடன் இந்திய மையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பிரான்ஸ் மாணவர்கள்
 

பிரான்ஸ் மாணவர்கள்

"பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பட்டப்படிப்பை முடித்த இளைஞர்களை பணியில் அமர்த்தி, டெலிவரி பயிற்சிக்காக 6-8 மாதங்களுக்கு அவர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்" என ரவியர்ட் கூறியுள்ளார்.

449 கோடி ரூபாய் வருவாய்

449 கோடி ரூபாய் வருவாய்

அல்டியை கணக்கில் எடுக்காமல், பிரான்ஸ் நாட்டில் இயங்கும் டி.சி.எஸ். கடந்த நிதியாண்டில் 449 கோடி ரூபாய் (தோராயமாக 75 மில்லியன் டாலர்) வருவாயை ஈட்டியுள்ளது என அறிவித்துள்ளது. 2012 ஆம் நிதியாண்டில் அல்டி நிறுவனம் €126 மில்லியன் (157 மில்லியன் டாலர்) பெறுமான பரிவர்த்தனையை பதிந்துள்ளது.

ஐரோப்பிய சந்தை

ஐரோப்பிய சந்தை

கடந்த சில ஆண்டுகளாக டி.சி.எஸ் நிறுவனத்தின் வேகமான வளர்ச்சிக்கு ஐரோப்பிய சந்தையும் ஒரு காரணமாக இருந்துள்ளது.

50 சதவீத வளர்ச்சி

50 சதவீத வளர்ச்சி

"ஐரோப்பாவில் டி.சி.எஸ். நிறுவனத்தின் வருடாந்திர வளர்ச்சி 50 சதவீதமாக உள்ளது. மேலும் வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதில் முதல் இடத்தை பிடித்துள்ளது; குறிப்பாக நார்டிக்ஸில்." என்று டி.சி.எஸ்.- ஆய்வாளர்கள் சந்திப்பில் கார்ட்னர் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சி இயக்குனரான ஜெஸிக்கா எகொல்ம் ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS eyes $1-b revenue from France in 5 years

Tata Consultancy Services has set an ambitious target of clocking $1 billion in revenue from France within the next five years, the company told European analysts.
Story first published: Saturday, December 20, 2014, 16:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X