ஸ்னாப்டீல் டெலிவரி: ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது உஷாராக இருங்க பாஸ்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் இ-காமர்ஸ் துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இத்துறை நிறுவனங்களின் சேவை தரம் தற்போது கேள்விகுறியாக உள்ளது.

 

ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனங்களான பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் நிறுவனங்களில் நாம் ஆர்டர் செய்யும் பொருட்கள் பதிலாக வேறு ஒரு பொருள் வருவதும், காலி டப்பாக்கள் வருவதும், கற்கள் மற்றும் செங்கல் வருவதும் தொடர் கதையாகிவிட்டது.

ஆப்பிள் ஐபோன்

ஆப்பிள் ஐபோன்

இந்நிலையில் இதே போன்ற ஒரு சம்பவம் ஸ்னாப்டீல் வாடிக்கையாளருக்கும் நடந்துள்ளது. புனேவில் ஒருவர் ஆப்பிள் ஐபோன் ஆர்டர் செய்துள்ளார், ஆனால் அவருக்கு கிடைத்தது மரக்கட்டைகள் தான்.

புத்தாண்டு பரிசு

புத்தாண்டு பரிசு

இதைதொடர்ந்து தற்போது டெல்லியை சேர்ந்த கெளதம் சச்தேவா தனது தந்தைக்கு புத்தாண்டு பரிசாக எல்.ஜி ஜி2 ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு கிடைத்து பழைய போன் ஒன்றை ஸ்னாப்டீல் டெலிவரி செய்துள்ளது.

சோதனை

சோதனை

மேலும் கெளதம் கூறுகையில் நிறுவனங்கள் பொருட்களை சோதனைக்கு உட்படுத்தவதில்லை. இதுவே இதற்கு முக்கிய காரணம். ஆனால் பார்சலில் சோதனை செய்யப்பட்டதற்கு பொய்யான அடையாளங்கள் பொறிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

கேஷ் ஆன் டெலிவரி
 

கேஷ் ஆன் டெலிவரி

கெளதம் இந்த ஆர்டரை கேஷ் ஆன் டெலிவரி முறையில் பெற்றுள்ளார், எனவே பொருட்களை பிரித்த சில மணிநேங்களில் டெலிவரி செய்த நபரை அழைத்து பொருட்களை அளித்துவிட்டு பணத்தை திரும்ப பெற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்னாப்டீல் நிறுவனத்தின் மெத்தனபோக்கு

ஸ்னாப்டீல் நிறுவனத்தின் மெத்தனபோக்கு

அதுகுறித்து கெளதம் தனக்கு கிடைத்த பார்சல் மற்றும் பொருட்களை போட்டோ எடுத்துக் ஸ்னாப்டீல் வாடிக்கையாளர் சேவை பிரிவிற்கு இமெயில் அனுப்பினார். ஆனால் அதுநாள் வரை கெளதம் அவர்களுக்கு எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை. இச்செயலை ஸ்னாப்டீல் நிறுவனத்தின் மெத்தனபோக்கை காட்டுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Snapdeal messes up again, delivers second-hand phone

New Delhi-based Gautam Sachdeva ordered a LG G2 smartphone from the online marketplace on December 24, 2014 to give it as a New Year gift to his father. However, Snapdeal spoiled his plans by delivering a "second-hand cell phone from some random seller." Says Sachdeva.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X