இந்தியாவில் தலைசிறந்த டாப் 10 வங்கிகள்.. கடைசி இடத்தில் யார் தெரியுமா?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் வங்கித் துறைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு, அந்த வகையில் இந்திய வங்கித்துறையும் நம் நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெழும்பாகவே உள்ளது.

 

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இந்திய வங்கித்துறை இண்டர்நெட் பாங்கிங், மொபைல் பாங்கிங் என பல தரப்பட்ட சேவைகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு வங்கிச்சேவை மிகவும் எளியமுறையில் கிடைக்கிறது. மேலும் அதிக வாடிக்கையாளர்கள் பெறுவதில் வங்கி நிறுவனங்கள் கடுமையான போட்டியில் இறங்கியுள்ளது.

இத்தகைய போட்டி மிகுந்த துறையில் டாப் 10 வங்கி நிறுவனங்களை பட்டியலிடப்பட்டுள்ளது.

2020இல் இந்தியா வங்கி

2020இல் இந்தியா வங்கி

இந்திய வங்கித்துறை 2020ஆம் ஆண்டுக்குள் உலகின் ஐந்து முக்கிய வங்கித்துறைகளுள் ஒன்றாக உருமாறும் என பொருளாதாக ஆலோசனையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்திய வங்கித்துறை ஆண்டுக்கு 8.5 சதவீதம் வரை வளர்ந்து வருகிறது.

எஸ்.பி.ஐ

எஸ்.பி.ஐ

இந்திய பொதுத்துறைகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி, இந்தியாவில் முதல் இடத்திலும், ஆசியாவில் 20வது இடத்திலும் உள்ளது. இந்நிறுவனத்தில் 2,22,033 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் இந்தியாவில் 14,816 கிளைகளும், 180 கிளைகள் வெளிநாடுகளிலும் உள்ளது. மேலும் இவ்வங்கி இந்தியா உட்பட உலகில் 35 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

ஐசிஐசிஐ வங்கி
 

ஐசிஐசிஐ வங்கி

இவ்வங்கியின் முழுமையான விரிவாக்கம் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்டஸ்ட்ரியல் கிரேடிட் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் கோ-ஆப்ரேஷன் ஆஃப் இந்தியா இது தான் ஐசிஐசிஐ வங்கியின் விரிவாக்கம். இவ்வங்கி 2வது இடத்தை பிடித்துள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி வங்கி

ஹெச்.டி.எஃப்.சி வங்கி

நாட்டின் மிகப்பெரிய வீட்டு கடன் மற்றும் வங்கிச் சேவை அளிக்கு நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி நிறுவனம் இப்பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் 3,251 கிளைகளும், 11,177 ஏடிஎம்களை வைத்துக்கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

ஆக்சிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கி

1994ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இவ்வங்கி கடந்த 5 வருடங்களில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் இவ்வங்கி நாட்டில் செயல்படும் தனியார் வங்கிகளில் முக்கிய பங்கு வகுக்கிறது. இந்நிறுவனம் 2402 கிளைகளுடனும், 12,922 ஏடிஎம்களுடன் செயல்பட்டு வருகிறது.

பாங்க் ஆஃப் பரோடா

பாங்க் ஆஃப் பரோடா

இந்தியா வங்கித்துறையில் பாங்க் ஆஃப் பரோடாவிற்கு மிகமுக்கிய பங்கு உண்டு, இந்நிறுவனம் இந்தியாவில் 1908ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் இவ்வங்கி 4,913 கிளை மற்றும் 2000 ஏடிஎம்களை கொண்டும், உலகில் 25 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

பஞ்சாப் நேஷ்னல் பாங்க்

பஞ்சாப் நேஷ்னல் பாங்க்

2012ஆம் ஆண்டில் இருந்து இந்நிறுவனத்தின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் உள்ளது. மேலும் பங்குச்சந்தை வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் சரிவு முக்கிய மாக பார்க்கப்படுகிறது. இவ்வங்கி இப்படியலில் 6வது இடத்தில் உள்ளது.

பாங்க் ஆஃப் இந்தியா

பாங்க் ஆஃப் இந்தியா

இந்நிறுவனம் இந்தியாவில் 1906ஆம் வருடத்தில் இருந்து செயல்படுகிறது. மேலும் இப்படியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது.

கோட்டாக் மஹிந்திரா வங்கி

கோட்டாக் மஹிந்திரா வங்கி

இந்தியாவின் நான்காவது தனியார் வங்கியாக உள்ளது. இந்நிறுவனம் 1985ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வந்தாலும் கடந்த 10 வருடத்தில் தான் இந்நிறுவனம் அதீத வளர்ச்சியை காட்டுக்கிறது. மேலும் இந்நிறுவனம் தற்போது ஐஎன்ஜி வைசியா வங்கியை கையகப்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.

ஐடிபிஐ வங்கி

ஐடிபிஐ வங்கி

பொதுத்துறை வங்கிகளில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிற்கு அடுத்த மிகப்பெரிய வங்கியாக கருதப்படும் வங்கியாக ஐடிபிஐ வங்கி உள்ளது இப்பட்டியலில் இவ்வங்கி 9வது இடத்தை பிடித்துள்ளது.

கனரா வங்கி

கனரா வங்கி

இந்நிறுவனம் இந்தியாவில் 5507 கிளைகளுடன், 7095 எடிஎம்களை கொண்டு செயல்படும் இந்நிறுவனம் இப்பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 Leading Brands In Indian Banking Sector

Indian banking sector is budding. The sector has reaped more financial rewards as the income of the inhabitants is booming with time. Banks are making use of latest technologies like internet banking and mobile banking paving way for rapid growth.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X