3 பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய அரசு நிதி திரட்டுவதற்காக பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு இருப்பை தொடர்ந்து குறைத்து வருகிறது. இதன் படி சில வாரங்களுக்கு முன்பு கோல் இந்தியா பங்குகளை மத்திய அரசு விற்றது. அதன்பின் இந்தியன் ஆயில் மற்றும் ஒஎன்ஜிசி நிறுவன பங்குகளை விற்க பணிகள் நடந்து வரும் நிலையில், மேலும் 3 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

இப்பட்டியலில் நால்கோ, பெல், மற்றும் என்.எம்.டி.சி ஆகிய நிறுவனங்கள் இடப்பெற்றுள்ளது.

நிதியமைச்சகம்

நிதியமைச்சகம்

மத்திய நிதியமைச்சகம் மத்திய அரசின் சரங்க நிறுவனமான NMDC, அலுமினியம் உற்பத்தி நிறுவனமான NALCO ஆகிய நிறுவனங்களில் தளா 10 சதவீத பங்குகளையும், BHEL நிறுவனத்தில் 5 சதவீத பங்குகளையும் விற்க திட்டமிட்டுள்ளது.

10,000 கோடி ரூபாய்

10,000 கோடி ரூபாய்

இந்நிறுவனங்களின் பங்கு விற்பனையின் மூலம் மத்திய அரசுக்கு சுமார் 10,000 கோடி நிதி திரட்ட உள்ளது.

நிதி திரட்டல்

நிதி திரட்டல்

நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு நிதி திரட்டல் இலக்கான 43,000 கோடி ரூபாய் திரட்ட முடியாத காரணத்தால் அரசு நிறுவன பங்குகளை விற்க உள்ளது. இப்பட்டியலில் BALCO மற்றும் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனமும் அடங்கும்.

யூடிஐ
 

யூடிஐ

மத்திய அரசு யூடிஐ நிறுவனத்தின் மூலம் தனியார் வங்கிகளான ஐடிசி, எல்&டி, ஆக்சிஸ் வங்கி போன்ற நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ளது. இதன் இருப்பு அளவையும் குறைத்து மத்திய அரசு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

45 நாள்

45 நாள்

நிதி திரட்டல் இலக்கை அடைய நடப்பு நிதியாண்டில் இன்னும் 43 நாட்கள் உள்ளது. இக்காலகட்டத்தில் மத்திய அரசு கண்டிப்பாக இலக்கை எட்டும் என நம்பப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Government to decide on Nalco, Bhel, NMDC stake sale today

The government is expected to decide on selling stake in three blue chip public sector companies — Nalco, Bhel and NMDC — on Thursday after its move to sell shares in Indian Oil and ONGC have run into rough weather in the wake of low oil prices.
Story first published: Thursday, February 19, 2015, 13:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X