ஒரே நாளில் சென்செக்ஸ் 473.82 புள்ளிகள் உயர்வு: மத்திய பட்ஜெட் அலை

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: பிப்ரவரி 28ஆம் தேதி (நாளை) மோடி தலைமையிலான அரசு இரண்டாவது பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 473.47 புள்ளிகள் வரை உயர்ந்தது.

 

வியாழக்கிழமை ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது மும்பை பங்குச்சந்தை மற்றும் நிஃப்டி மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்தது குறிப்பிடதக்கது.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டை எதிர்பார்த்து பங்குச்சந்தையில் சில்லறை முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்ய துவங்கினர் இதனால் காலை வர்த்தக துவக்கம் முதலே 130 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது.

473 புள்ளிகள் உயர்வு

473 புள்ளிகள் உயர்வு

இன்றைய வர்த்தகத்தில் சிரிய அளவிலான சரிவை சந்திக்கவில்லை, இதன் மூலம் சந்தை முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் ஒரே நாளில் 473.47 புள்ளிகள் வரை 29,220.12 புள்ளிகளை எட்டியது.

நிஃப்டி

நிஃப்டி

மும்பை பங்குச்சந்தையை போலவே நிஃப்டியும் 160.75 புள்ளிகள் வரை உயர்ந்து 8,844.60 புள்ளிகள் வரை உயர்ந்தது.

மும்பை பங்கச்சந்தை
 

மும்பை பங்கச்சந்தை

கடந்த ஒரு மாத வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை பிப்ரவரி 9ஆம் தேதி சென்செக்ஸ் 28,227.70 புள்ளிகள் வரை சரிந்தது. அதுமட்டும் அல்லாமல் கடந்த 19ஆம் தேதி முதல் சென்செக்ஸ் தொடர் சரிவை சந்தித்து வருவது குறிப்பிடதக்கது.

லாபம் அடைந்த நிறுவனம்

லாபம் அடைந்த நிறுவனம்

இன்றைய வர்த்தகத்தில் பொரும்பாலான நிறுவனங்கள் உயர்வை சந்தித்தது. இதில் டாடா பவர் நிறுவனம் மட்டும் 5.43 சதவீத உயர்வை சந்தித்தது. இதை தொடர்ந்து எல்&டி, ஐசிஐசிஐ வங்கி, sesa sterlite ஆகிய நிறுவன 4.0 சதவீதத்திற்கு மேல் உயர்வை சந்தித்தது. இதில் இன்போசிஸ் மற்றும் டிசிஸ் நிறுவனம் குறைந்த அளவிலான உயர்வை மட்டும் சந்தித்தது குறிப்பிடதக்கது.

சரிவடைந்த நிறுவனங்கள்

சரிவடைந்த நிறுவனங்கள்

இன்றைய வர்த்தகத்தில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், விப்ரோ, ஐடிசி மற்றும் கெய்ல் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bulls super charged for Budget: Banks lift Sensex 473 pts

It was a super run up to the Budget as bulls seem excited ahead of FM arun Jaitley's speech tomorrow. The Sensex was up 473.47 points or 1.6 percent at 29220.12,and the Nifty ended 160.75 points or 1.8 percent at 8844.60.
Story first published: Friday, February 27, 2015, 16:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X