தடுமாறும் மும்பை பங்குச் சந்தை.. 166 புள்ளிகள் சரிவு!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: திங்கட்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 620 புள்ளிகள் வரை குறைந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வர்த்தக துவக்கத்தில் அமெரிக்க டாலரின் வலுவான நிலையின் காரணமாக ஆசிய சந்தை அனைத்தும் சரிவு பாதையில் சென்றது. இதன் எதிரொலி இந்திய பங்குச்சந்தையிலும் தெரிந்தது.

இன்று காலை வர்த்தக துவக்கம் முதலே மும்பை பங்குச்சந்தை சரிவுடன் துவங்கி, பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தது.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

வர்த்தகம் துவக்கம் முதலே சரிவுடன் துவங்கிய மும்பை பங்குச் சந்தை மதியம் 2 மணியளவில் 166 புள்ளிகள் வரை சரிந்து 28,678.21 புள்ளிகளை அடைந்தது.

நிஃப்டி

நிஃப்டி

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி பல ஏற்ற இறக்கங்களுடன் 45.65 புள்ளிகள் வரை சரிந்து 8,711 புள்ளிகளை அடைந்தது. கடந்த வாரம் நிஃப்டி 9,006 புள்ளிகளை எட்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடதக்கது.

ஆட்டோமொபைல் துறை

ஆட்டோமொபைல் துறை

இன்றைய வர்த்தகத்தில் ஆட்டோமொபைல் துறைகள் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது. குறிப்பாக பஜாஜ் ஆட்டோ, மஹிந்திரா மற்றும் மஹிந்திரா மற்றும் ஹிரோமோட்டோ கார்ப் ஆகிய நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கு அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது.

ஏர்டெல்

ஏர்டெல்

ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் முதலீடு அதிகளவில் இருப்பதாலும், இந்நிறுவனத்தின் 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க்கை விரிவாக்க திட்டங்களின் காரணமாக சில்லறை முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். மேலும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் மத்திய அரசு சுமார் 94,000 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.

கோல் இந்தியா

கோல் இந்தியா

மத்திய அரசு கோல் இந்தியா நிறுவனத்தின் பங்கு இருப்பை குறைத்ததில் இருந்து இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு மற்றும் வர்த்தக எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் கோல் இந்தியா நிறுவன வர்த்தகத்தில் சுமார் 3.22 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

 

 

ஐடித்துறை

ஐடித்துறை

மென்பொருள் துறையில் டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவனங்களின் வர்த்தகம் மிதமாக உள்ளதால் இன்றைய வர்த்தகத்தில் 1 சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சியை அடைந்துள்ளது. விப்ரோ மற்றும் டெக் மஹிந்திரா நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது.

வங்கித்துறை பங்குகள்

வங்கித்துறை பங்குகள்

வழக்கம் போல் இன்றும் வங்கித்துறை பங்குகள் சரிவை தழுவியுள்ளது. ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பின் மூலம் வங்கித்துறை பங்குகள் உயர்வடைந்தாலும். இதன் பின் இத்துறை நிறுவனங்கள் தொடர் சரிவை தழுவி வருகிறது.

 

 

டாடா நிறுவனங்கள்

டாடா நிறுவனங்கள்

டாடா குழுமத்தின் டிசிஎஸ் நிறுவனத்தை தவிர டாடா மோட்டார்ஸ், டாடா பவர் மற்றும் டாடா ஸ்டீல் போன்ற நிறுவன பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் சரிவை சந்தித்துள்ளது. இதில் ரிலையன்ஸ் நிறுவனமும் அடக்கம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSE Sensex falls; automobile sector gain

The BSE Sensex was trading flat on Tuesday as technology firms fell on worries about their outlook although auto makers gained after an industry body executive said it expected a revival in demand for vehicles.
Story first published: Tuesday, March 10, 2015, 14:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X