வேலை பறிபோனாலும் இந்த இன்சூரன்ஸ் உங்களை காப்பாற்றும்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இன்றைய பொருளாதார நிலையில், தான் செய்யும் வேலை நிலையானது என்று யாராலும் சொல்ல முடியாது. நம்முடைய திறன் குறைவினாலோ, நிறுவனத்தின் நிதி நிலை சரியில்லாத காரணத்திலாலோ நம்முடைய வேலை எந்த நேரத்திலும் பறிபோகலாம்.

 

இத்தகைய நிலையில் நம்முடைய கடன் சுமை, குறிப்பாக மாத சம்பளத்தில் 50% வரை செலுத்தப்படும் வீட்டுக் கடனுக்கான ஈஎம்ஐ போன்ற செலவுகளை யார் செலுத்துவது என்ற மிகப்பெரிய கேள்விக்குறி எழுகிறது.

இந்த இக்கட்டனா சூழ்நிலையில் நம்மை ஜாப் லாஸ் இன்சூரன்ஸ் பாலிஸி நம்மை காப்பாற்றுகிறது.

ராயல் சுந்தரம் இன்சூரன்ஸ்

ராயல் சுந்தரம் இன்சூரன்ஸ்

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராயல் சுந்தரம் இன்சூரன்ஸ் நிறுவனம் மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு அளிக்கப்படும் இந்த இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம் வேலை இழப்பு காலகட்டத்தில் வீட்டுக் கடனுக்கான 3 மாத ஈஎம்ஐ செலுத்துகிறது.

 வேலை இழப்பு

வேலை இழப்பு

இந்த இன்சூரன்ஸ் பெறுபவர் வேலை இழப்பு, உடல் நிலம் சரியில்லாமல் போனாலோ, விபத்தின் காரணமாக அதிகளவிலான காயங்கள் ஏற்ப்பட்டாலோ, மரணம் மற்றும் திடீர் உடல் இயலாமை போன்ற காரணங்களுக்காக 3 மாத ஈஎம்ஐ-களை இன்சூரன்ஸ் நிறுவனம் நேரடியாக கடன் பெறுள்ள நிறுவனங்களுக்கு செலுத்துகிறது.

இணைப்பு சேவை
 

இணைப்பு சேவை

இந்நிறுவனம் அளித்து வரும் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் விபத்து காப்பீட்டில் இணைப்பு சேவையாக வேலை இழப்புக்கான காப்பீடும் இணைக்கப்பட்டுள்ளது என அதன் நிர்வாக இயக்குனர் அஜய் தெரிவித்தார்.

இந்த இன்சூரன்ஸ் காப்பீட்டுதாரரின் தற்காலிக பணி இழப்பு, நிறுவனத்தின் நேர்மையின்மை போன்ற காரணத்தினால் வெளியேற்றப்படும் போதும் இத்திட்டம் பொருந்தும் என இந்நிறுவனம் தெரிவிக்கிறது.

3 மாத ஈஎம்ஐ

3 மாத ஈஎம்ஐ

இந்நிறுவனம் அளிக்கும் 3 மாத ஈஎம்ஐ காலத்தில், காப்பீட்டுதாரர் புதிய வேலையை தேடிக்கொள்ள ஏதுவாக அமையும்.

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

இத்தகைய சேவை ராயல் சுந்தரம் இன்சூரன்ஸ் நிறுவனம் மட்டும் அல்லாமல் ஐசிஐசிஐ லாம்பார்ட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி எர்கோ நிறுவனம் அளித்து வருகிறது. மேலும் பஜாஜ் அலையான்ஸ் நிறுவனம் கூடிய விரைவில் இத்தகைய திட்டத்தை அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அனைத்து நிறுவனங்களும் இத்திட்டத்தை இணைப்பு சேவையாக மட்டுமே அளித்து வருவது குறிப்பிடதக்கது.

ஐடி நிறுவனங்கள்

ஐடி நிறுவனங்கள்

இன்றைய நிலையில் ஐடி, மார்கெட்டிங் துறையில் பணிபுரிபவர்கள் மத்தியில் வேலை இழப்பு அதிகளவில் காணப்படுகிறது. இவர்களுக்கு இத்தகைய இன்சூரன்ஸ் திட்டம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

10 சதவீத உயர்வு

10 சதவீத உயர்வு

ஐசிஐசிஐ நிறுவனம் அளித்து வரும் இன்சூரன்ஸ் திட்டத்தில் இணைப்பு சேவையாக ஜாப் லாஸ் இன்சூரன்ஸ் இணைக்கப்பட்ட பின் காப்பீட்டுதாரர்களின் எண்ணிக்கை குறைந்த காலத்தில் 10 சதவீதம் உயர்ந்ததாக இந்நிறுவனத்தின் உயர் அதிகாரியான சஞ்சய் தத்தா தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Insurance companies offer job-loss covers

Confronted with a suspension order or a pink slip? you are the sole bread winner in your family and have been diagnosed with a life-threatening ailment and have lost your job. Now, there is some temporary respite in the form of a job loss insurance policy.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X