டெல்லி: தனி நபர் கணக்கு எண் எனப்படும் பான் கார்டை, பொதுமக்கள் விண்ணப்பம் செய்த 48 மணிநேரத்திற்குள் பெறும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தற்போது இயங்கிவரும் ஆன்லைன் சேவையில் 105 ரூபாய் மட்டும் செலுத்தி பான் கார்டு விண்ணப்பித்தால், 2 முதல் 3 வாரத்திற்குள் கிடைத்துவிடும்.
இச்சேவையை எளிமையாக்கும் வகையில் மத்திய அரசு விண்ணப்பம் செய்த 48 மணிநேரத்தில் பான் கார்டு அளிக்கவழிவகைச் செய்துவருகிறது.
மத்திய நேரடி வரி ஆணையம்
இதுகுறித்து மத்திய நேரடி வரி ஆணையத்தின் உயர் அதிகாரி கூறுகையில், "தற்போது உள்ள ஆன்லைன் வசதியை மேம்படுத்தி 48 நேரத்திற்குள் ஒருவர் பான் கார்டு பெறும் வசதியை மத்திய அரசு செய்து வருகிறது." என்று கூறினார்.
ஆவணங்கள்
இப்புதிய சேவையின் மூலம் பான் கார்டு பெற ஒருவர், பிறப்பு தேதியை உறுதி செய்ய, வாக்காளர் அட்டை மற்றும் ஆதார்அட்டையைச் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய நேரடி வரி ஆணையம் தெரிவித்துள்ளது.
பான் கார்டு பயன்பாடு
பான் கார்டு வரி செலுத்துவதற்கும் மட்டும் அல்லாமல் அதிக விலை மதிப்புடைய அசையா சொத்துக்களை விற்கவும், புதிய வாகனங்களை வாங்க அல்லது விற்கப் போன்ற பல இடங்களில் தேவைப்படுகிறது.
புதிய சட்டம்
நிதிச்சட்டம் 2015இன் படி 1 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிற்கு நகை வாங்கினால் பான் கார்டு அவசியம் என்றுதெரிவித்துள்ளது.
மிகவும் முக்கியமானது
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications