ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் மாநில அரசுகளின் வரி வருமானம் குறையாது.. நிதியமைச்சர் நம்பிக்கை!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய வரி அமைப்பில் மறைமுக வரியை முறைப்படும் முயற்சியான சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவதன் மூலம் மாநில அரசுகளின் வரி வருமானம் சிறிதும் குறையாது என நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ஜிஎஸ்டி அமல்படுத்துவது குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனைப் பலமாநில அரசுகள் கடுமையாக எதிர்த்தது, மேலும் இந்த மசோதா மீதான விவாதம் இந்த வாரம் துவக்கம் முதல் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றம்...

நாடாளுமன்றம்...

ஜிஎஸ்டி குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த அருண் ஜேட்லி, தற்போது தாக்கல்செய்யப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரித் திட்டம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாய் நடுநிலைவிகிதங்களுக்கு (RNR) இணைங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் அடுத்தச் சில வருட நடைமுறைக்குப்பின் மந்திய மற்றும் மாநில அரசுகளின் வரி வருமானத்தில் குறைவுஇருக்காது என எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.

வருவாய் நடுநிலை விகிதங்கள் (RNR)

வருவாய் நடுநிலை விகிதங்கள் (RNR)

சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்திற்குப் பிறகு மாநில அரசுகளின் வரி வருமானம் குறையமால் இருக்கஉருவாக்கப்பட்டது தான் இந்த வருவாய் நடுநிலை விகிதங்கள் (RNR).

மேலும் இத்திட்டத்தின் வரி அளவை மாற்றி அமைக்கும் பணியில் ஜிஎஸ்டி கவுன்சில் இறங்கியுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில்
 

ஜிஎஸ்டி கவுன்சில்

இக்குழுவில் மூன்றில் இரண்டு பங்கு மாநில அரசு அதிகாரிகளும், மூன்றில் ஒரு பங்கு மத்திய அரசு அதிகாரிகளும்உள்ளனர். மேலும் இக்குழுவிற்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமை வகிக்கிறார்.

டிசம்பர் 2014

டிசம்பர் 2014

இப்புதிய வரிச் சட்டத்தை அமல்படுத்த நாடாளுமன்றத்தில் டிசம்பர் 2014ஆம் ஆண்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.ஆனால் செவ்வாய்க்கிழமை தான் நாடாளுமன்றத்தில் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி

ஜிஎஸ்டி வரி

1947ஆம் ஆண்டுக்குப் பின் மிகப்பெரிய மறைமுக வரி வதிப்புச் சீர்திருத்தமாகும்.

இந்த ஒரு வரி விதிப்பின் மூலம், இந்திய வரி அமைப்பில் இருக்கும் கலால் வரி, மாநில வாட் வரி, பொழுதுபோக்கு வரி,நுழைவு வரி, ஆடம்பர வரி, கொள்முதல் வரி ஆகியவற்றை நீக்கிவிடும்.

கூடுதல் வரி

கூடுதல் வரி

சரக்கு மற்றும் சேவை வரி நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறும் நிலையில் மாநில அரசுகள் அடுத்த இரண்டு வருடத்திற்கு 1சதவீதம் கூடுதல் வரி அல்லது IST (inter-state trade) வரியை விதித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளிக்கிறது.

மத்திய அரசின் உதவி

மத்திய அரசின் உதவி

ஜிஎஸ்டி வரி அமலாக்கத்திற்குப் பிறகு மாநில அரசு சந்திக்கும் வரி இழப்பை அடுத்த 5 வருடங்களுக்கு மத்திய அரசுதீர்க்கும் என அருண் ஜேட்லி தெரிவித்தார். முன்பு அதன் அளவு 3 வருடமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல்

பெட்ரோல்

இந்த வரி வதிப்பின் கீழ் பெட்ரோல் மற்றும் பெட்ரோலியம் பொருட்கள் இணைப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

GST not to impact states' revenues: Jaitley

Revenues of states will not be hit in the long run after implementation of the Goods and Services Tax (GST), finance minister Arun Jaitley said today.
Story first published: Wednesday, May 6, 2015, 10:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X