பணம் புரட்டியாச்சு.. பெயில் வாங்க வேண்டியதுதான் பாக்கி! - சுப்ரதா ராய்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பங்குதாரர்களுக்கு அளிக்க வேண்டிய 20,000 கோடி ரூபாயை அளிக்காமல் ஊழல் வழக்கில் சிக்கிய சகாரா நிறுவனத்தின் தலைவர் சுப்ரதா ராய், பெயில் பெற 10,000 கோடி நிதியை 14 மாத சிறைவாசத்திற்குப் பிறகு திரட்டியுள்ளார்.

 

அடுத்த வாரம் பெயில் மனுவின் விசாரணையின் போது நிதிமன்றம் அறிவித்த 10,000 கோடி ரூபாய் தொகையை (5,000 கோடி தொகை மற்றும் 5,000 கோடி ரூயாக்கான வங்கி உத்திரவாதம்) செலுத்திவிட்டு தனது சிறைவாசத்தை முடிக்க உள்ளார்.

14 மாத சிறைவாசம்

14 மாத சிறைவாசம்

சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி அமைப்பு சகாரா நிறுவனத்தின் மீது 20,000 கோடி ரூபாய் ஊழல் வழக்கை தொடுத்தது.

இதன் பெயரில் நிதிமன்றம் இந்நிறுவனத் தலைவர்கள் மூவரை கைது செய்ய நிதிமன்றம் உத்தரவிட்டது.

கைது

கைது

பல மாத ஏய்ப்பிற்குப் பின், வழியில்லாமல் இந்நிறுவனத் தலைவர்கள் சுப்ரதா ராய், அசோக் ராய் சவுதிரி மற்றும் ரவி சங்கர் துபே ஆகியோர் தத்தம் வீடுகளில் போலீஸில் சரண் அடைந்தனர்.

5 ஸ்டார் ஜெயில்

5 ஸ்டார் ஜெயில்

இந்த 10,000 கோடி ரூபாய் நிதி திரட்ட நிறுவன சொத்துக்களை விற்பதற்கும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், சப்ரதா ராய் மற்றும் இரு தலைவர்களுக்குப் பல லட்ச செலவில் சகல வசதிகளும் திகார் ஜெயிலில் வழங்கப்பட்டது.

5,000 கோடி ரூபாய்
 

5,000 கோடி ரூபாய்

கடந்த வாரம் சாதார நிறுவனம் அளித்த தகவலின் படி, சுப்ரதா ராய் உட்பட இரு தலைவர்களுக்குப் பெயில் பெற 3800 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தது.

கபில் சிபில்

கபில் சிபில்

தற்போது ராய் தரப்பில் நிதிமன்றத்தில் ஆஜராக உள்ள உயர் வழக்கறிஞர் கபில் சிபில் கூறுகையில், 5000 கோடி ரூபாய் நிதியும், 5000 கோடி ரூபாய்க்கான வங்கி உத்திரவாதமும் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்

வங்கி

வங்கி

சுப்ரதா ராய் அவர்களுக்குப் பெயில் பெற நிதிமன்றம் 5000 கோடி ரூபாய்க்கான நிதியுதவியைக் கோரியது. தற்போது வங்கிகள் அளிக்க உறுதியளித்தாலும், வங்கிகளின் பெயர்களைச் சகாரா நிறுவனம் அளிக்க மறுத்துவிட்டது.

நிதிபதிகள்

நிதிபதிகள்

வங்கி உத்திரவாதத்திற்கான அறிக்கையைக் கபில் சிபில் நிதிபதிகள் தாகுர், டேவ் மற்றும் சிக்ரி முன் அளித்துள்ளதாக, சிறிய திருத்தங்களுடன் அவை உறுதியாகிவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sahara chief Subrata Roy to SC: Mopped up funds for bail

Sahara chief Subrata Roy, behind bars for the last 14 months, may get out of jail next week as he told the Supreme Court on Friday that he had managed to raise sufficient cash and bank guarantee of Rs 5,000 crore to fulfill the bail condition.
Story first published: Saturday, May 9, 2015, 11:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X