குவிக்கர், ஓஎல்எக்ஸ் தளங்களில் மோசடி.. உஷார்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஆன்லைன் விற்பனை தளங்களான குவிக்கர் மற்றும் ஓஎல்எக்ஸ், அறிமுகத்திற்குப் பின் இந்தியாவில் உபயோப்படுத்தப்பட்ட பொருடகளின் விற்பனை பன்மடங்காக உயர்ந்துள்ளது.

இதேவேளையில் இத்தளத்தில் பல வகையான மோசடிகள் நடைபெறுகிறது. மேலும் இந்த மோசடிகள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் கவனக்குறைவின் மூலம் மட்டுமே நடைபெறுவதாக கருத்து நிலவி வருகிறது.

இயங்கும் முறை

இயங்கும் முறை

இந்த குவிக்கர் மற்றும் ஓஎல்எக்ஸ் விற்பனை செய்வோர் தங்களது விளம்பரத்தை இலவசமாக இத்தளத்தில் பதிவிடலாம், இதனை பார்த்த வாடிக்கையாளர், விற்போரை நேரடியாக சந்தித்து அதனை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதன் படியே இந்த விற்பனை தளங்கள் வடிவமைக்கப்பட்டது.

 

மோசடி

மோசடி

ஆனால் சில வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி பொருட்களை பார்க்கும் முன்னரே, கையில் பெறும் முன்னரே விற்பனையாளர்களுக்கு பொருட்களுக்கான பகுதி பணத்தை மின்னணு முறையில் பரிமாற்றும் செய்து வருகினறனர்.

இதனால் பலர் ஏமார்ந்துள்ளதாக சென்னை காவல் நிலையத்திற்கு புகார்கள் கிடைத்துள்ளது.

 

ஆப்பிள் ஐபோன் மோசடி

ஆப்பிள் ஐபோன் மோசடி

இதன் படி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த டாக்கர் சுனில் குமார் என்பவர் விளம்பரத்தை பார்த்து சரிவர விசாரிக்காமல் ஆப்பிள் கைபேசி, வாங்குவதற்காக ஓஎல்எக்ஸ் மூலம் 10,000 ரூபாய் செலுத்தியுள்ளார், ஆனால் இன்னுமும் கைபேசி தனது கைக்கு வந்த சேர்ந்தபாடு இல்லை.

சொகுசு கார்

சொகுசு கார்

அதேபோல சென்னை கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்த அருணோதயம் என்பவர் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை 2 லட்ச ரூபாய்க்கு பெற்றுவிடலாம் என்று பணத்தை கட்டி ஏமார்ந்துள்ளார்.

உஷார்..

உஷார்..

இதனால் வாடிக்கையாளர்கள் விற்பனை செய்வோரிடம் நேரடியாக சென்று பொருட்களை பார்த்தப்பின்னர், பணத்தை செலுத்துமாறு காவல்துறை மக்களை அறிவிறுத்தியுள்ளது.

இத்தகைய தளங்களில் எப்படி வர்த்தகம் செய்யவேண்டும், வாடிக்கையாளர்களை எப்படி எல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை பற்றி நாளை பார்க்கலாம்.

செல்வம் கொழிக்கும் எதிர்காலம்

செல்வம் கொழிக்கும் எதிர்காலம்

செல்வம் கொழிக்கும் எதிர்காலம் வோண்டுமா? அப்ப இதைப் படிங்க..செல்வம் கொழிக்கும் எதிர்காலம் வோண்டுமா? அப்ப இதைப் படிங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

lot of fake sellers in olx and quikr, customers should be careful

lot of fake sellers in olx and quikr, customers should be careful
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X