மோடி ஆட்சியில் இந்திய சந்தையின் மதிப்பு 10 லட்சம் கோடியாக உயர்வு!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகப் பதவியேற்று திங்கட்கிழமையுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய பங்குச் சந்தையின் மொத்த மதிப்பு 10 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

 

இக்காலகட்டத்தில் நாட்டின் பல முக்கிய நிறுவனங்கள் தனது சந்தை மதிப்பை இழந்துள்ளது. அதேபோல் பல புதிய நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

2014ஆம் ஆண்டில் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் மே 12ஆம் தேதி வரை நடந்த பொதுத்தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிக் கனியை பறித்து.

நரேந்திர மோடி மே 26ஆம் தேதி நாட்டின் பிரதமாராகப் பதவியேற்றார்.

வளர்ச்சியும் வீழ்ச்சியும்...

வளர்ச்சியும் வீழ்ச்சியும்...

பிரதமர் மோடியின் ஆட்சியில் டாடா, அதானி, பார்தி மற்றும் சன் குரூப் நிறுவனங்கள் அதிகப்பிடியான வளர்ச்சியைச் சந்தித்த நிலையில், கடந்த 10 வருடங்களாகச் சந்தையை ஆட்டிப்படைத்த அம்பானி குழுமங்கள், வேதாந்தா, ஐடிசி மற்றும் எல் அண்ட் டி போன்ற நிறுவனங்கள் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.

சந்தை மதிப்பு

சந்தை மதிப்பு

இதே காலகட்டத்தில் பிர்லா, மஹிந்திரா, ஐசிஐசிஐ, இன்போசிஸ், விப்ரோ, ஹிந்துதான் யுனிலீவர் மற்றும் எச்சிஎல் ஆகிய நிறுங்களின் சந்தை மதிப்பு அதிகளவில் உயர்ந்தது.

12 சதவீத உயர்வு
 

12 சதவீத உயர்வு

மேலும் கடந்த ஒரு வருடத்தில் மும்பை பங்குச் சந்தை சுமார் 12 சதவீதம் அளவு உயர்ந்துள்ளது.

 சென்செக்ஸ்

சென்செக்ஸ்

மோடி அவர்களின் ஆட்சியில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 2,950 புள்ளிகள் உயர்ந்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் இந்திய சந்தை மதிப்பு 1,02,52,461 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

30,000 புள்ளிகள்

30,000 புள்ளிகள்

அதுமட்டும் அல்லாமல் மோடியின் மேக் இன் இந்தியா திட்ட அறிவிப்பின் மூலம் சென்செக்ஸ் குறியீடு வரலாறு காணாத அளவிற்கு 30,000 புள்ளிகளை எட்டி புதிய உச்சத்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இந்த 12 மாத காலத்தில் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மதிப்பு 80,000 கோடி ரூபாய் குறைந்து 2,90,000 கோடி ரூபாயாகக் குறைந்ததுள்ளது.

அனில் அம்பானி

அனில் அம்பானி

இதேபோல் அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு 50,000 கோடி அளவில் குறைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Market wealth up by Rs.10 lakh cr

As the Modi government completed its first year on Monday, the stock market wealth has grown by over Rs.10 lakh crore in this period with conglomerates such as Tatas, Adani, Bharti, HDFC and Sun Groups clocking huge gains.
Story first published: Tuesday, May 26, 2015, 17:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X