கடனுக்கான வட்டியை 0.15% குறைத்தது எச்டிஎப்சி வங்கி!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: தனியார் வங்கித்துறையில் இந்தியாவில் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி, வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி வகிதத்தை 0.15 சதவீதம் குறைத்து 9.7 சதவீதமாக அறிவித்துள்ளது.

 

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை ஏற்று ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியை அடுத்து எச்டிஎப்சி வங்கி தனது வட்டி வகிதத்தைக் குறைத்துள்ளது. இப்புதிய வட்டி விகிதம் ஜூன் 15ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது.

எச்டிஎப்சி வங்கி

எச்டிஎப்சி வங்கி

கடந்த 3 மாதத்தில் இவ்வங்கி தற்போது இரண்டாவது முறையாக வட்டியைக் குறைத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ஏப்ரல் மாத நாணய கொள்கையின் அறிவிப்பிற்குப் பிறகு தனது வட்டி வகிதத்தை 0.15% குறைத்து 9.85 சதவீதமாக அறிவித்தது.

ஆதித்தியா பூரி

ஆதித்தியா பூரி

அதுகுறித்து இவ்வங்கியின் தலைவரான ஆதித்தியா பூரி கூறுகையில் வங்கிகள் கூடிய விரைவில் தனது வட்டி வகிதத்தைக் குறைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ வங்கி

தற்போது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ 9.7 சதவீத வட்டி வகிதத்தில் கடன் வழங்கி வருகிறது.

ரிசர்வ் வங்கி
 

ரிசர்வ் வங்கி

நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், பணவாட்ட நிலையைச் சீர்ப்படுத்தவும் ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி மாதம் முதல் சுமார் 0.75% சதவீத வட்டி வகிதத்தைக் குறைத்துள்ளது.

அறிவுரை

அறிவுரை

கடன் பெற திட்டமிடுபவர் வங்கிகளின் வட்டி வகிதத்தை ஆராய்ந்து பின் பெறவும், இதன் மூலம் நீங்கள் சில ஆயிரங்களைச் சேமிக்க முடியும். குறிப்பாக வாகனக் கடன் மற்றும் பர்சனல் லோன்களை நாடுவோர் இதைக் கண்டிப்பாகக் கவனிக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HDFC Bank cuts lending rate by 15 bps to 9.7%

Following State Bank of India SBI, HDFC Bank, the country’s second-largest private sector bank, has cut its base rate by 15 basis points (bps) to 9.7 per cent.
Story first published: Wednesday, June 17, 2015, 11:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X