வருமான வரி செலுத்துவதில் குழப்பமா? இத முதல்ல படிங்க..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: வருமான வரிப் படிவங்களை நிரப்பும் போது, பல வார்த்தைகளுக்கு என்ன பொருள் என்பதே தெரியாமல் தவிக்கும் நிலை பல பேருக்கு நிகழ்ந்திருக்கும்.

 

இத்தகைய நிலைய தவிர்க்கவும், வருமான வரிப் படிவத்தை எளிமையாகவும் முழுப் புரிதலுடன் நிரப்பவும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் தொகுத்துள்ளது.

அப்படி என்னபா விஷயம்!

(வருமான வரி இ-தாக்கல்: நீங்கள் கவனிக்க வேண்டியவை!)

நிதி ஆண்டு (Financial Year)

நிதி ஆண்டு (Financial Year)

நிதி ஆண்டு என்பது ஏப்ரல் 1-ம் நாள் தொடங்கி அடுத்த வருடம் மார்ச் 31-ம் நாள் முடிவடைகிறது, இதில் வருமானமானது ஒரு முழு ஆண்டிற்காகவோ அல்லது வருடத்தின் ஒரு பகுதிக்காகவோ என எடுத்துக் கொள்ளப்படுகிறது.

எடுத்துக்காட்டு: 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் நாள் முதல் 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் நாள் வரையிலுமான காலத்திற்கு நீங்கள் வருமான வரி செலுத்தினால், அது 2014-15ஆம் நிதி ஆண்டிற்கு வரி செலுத்தியுள்ளீர்கள் என்று பொருள்.

வரிவிதிப்பு ஆண்டு (Assessment Year)

வரிவிதிப்பு ஆண்டு (Assessment Year)

முந்தைய ஆண்டில் ஈட்டிய ஊதியத்தை வரிவிதிப்பு ஆண்டாகக் குறிப்பிடுவார்கள்.

எடுத்துக்காட்டு: 2014-15-ம் ஆண்டுக்கான வரிவிதிப்பு ஆண்டாக, 2013-14-ம் ஆண்டில் ஈட்டிய வருமானத்தைக் குறிப்பிடுவார்கள். நிதி ஆண்டுக்கும், வரிவிதிப்பு ஆண்டுக்கும் இடையில் மேலும் வேறுபாடுகளைத் தெரிந்து கொள்ள, கிளிக் செய்யவும்.

வரியை மூலத்திலிருந்து கழித்தல் (TDS - டி.டீ.எஸ்)
 

வரியை மூலத்திலிருந்து கழித்தல் (TDS - டி.டீ.எஸ்)

வருமான வரிச் சட்டத்தின் படி, டி.டீ.எஸ் என்பது நிறுவனம் அல்லது தனிநபரால் மற்றவர்களுக்குப் பணம் வழங்கும் முன்னர்க் கழித்துக் கொள்ளப்படும் பணமாகும். இது வரிகளை வசூலிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் வழிமுறைகளில் ஒன்றாகும்.

இதன் மூலம் பணத்தை மற்றொவருவருக்குக் கொடுக்கும் போது, ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை, நிறுவனமோ அல்லது தனிநபரோ கழித்துக் கொண்டு விடுவார்கள்.

இவ்வாறு கழித்துக் கொள்ளப்பட்ட சதவீத பணமானது அரசின் வருமான வரிக் கணக்கில் செலுத்தப்படும்.

படிவம் 16

படிவம் 16

நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து வந்தால், வரியை கழித்துக் கொண்டு உங்களுடைய நிறுவனத்தினர் உங்களுடைய ஊதியத்தைக் கொடுப்பார்கள். இந்தச் செயல்பாடு வரியை மூலத்திலேயே கழித்தல் என்று அழைக்கப்படுகிறது.

கிளிக் செய்யவும்.

ஊதிய சான்று

ஊதிய சான்று

பார்ம் 16 ஊதிய சான்றாகவும் மற்றும் ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அரசுக்குச் செலுத்திய வரியைக் காட்டுவதாகவும் இருப்பதால் மிகவும் முக்கியமானதாக உள்ளது.

நேரடி வரிகள்

நேரடி வரிகள்

தனிநபர்கள் தங்களுடைய வருமானம் அல்லது லாபத்தில் கண்டிப்பாகச் செலுத்த வேண்டிய, தவிர்க்க முடியாத மற்றும் மற்றவர்கள் அல்லது பிற நிறுவனத்தின் மேல் சுமத்த முடியாத வகையிலான வரிக்கு நேரடி வரி என்று பெயராகும்.

நேரடி வரியைப் பொறுத்த வரையில் (வருமான வரி, சொத்து வரி, மற்ற வரிகள்) மொத்த சுமையும் வரி செலுத்துபவரின் மீதே இருக்கும்.

வருமான வரி

வருமான வரி

வருமான வரிச் சட்டம் 1961-ன் படி, ஒவ்வொரு மனிதரும் வரி விதிக்கப்படுபவராவார், மேலும் அவருடைய வருமானம் அதிகபட்ச விதிவிலக்கு நிலையைத் தாண்டும் போது, நிதித்துறை சட்டப்படியுள்ள வீதத்திற்கு ஏற்ற வகையில் அவர் வரி செலுத்த வேண்டும்.

இவ்வாறு செலுத்தப்படும் வருமான வரியானது, வரி செலுத்தும் ஆண்டின் முந்தைய ஆண்டிற்கான மொத்த வருமானத்திற்கானதாக இருக்கும்.

வரி செலுத்த வேண்டிய வருமானம் (Taxable Income)

வரி செலுத்த வேண்டிய வருமானம் (Taxable Income)

மொத்த வருமானத்தின் ஒரு பகுதியாக வரும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியிருக்கும். இவற்றில் ஊதியங்கள், வாடகை, வியாபார லாபங்கள், தொழில் முறை லாபம், மூலதன லாபம், வட்டி, ஈவுத்தொகை, பந்தயங்கள் மற்றும் லாட்டரிகளில் பரிசு பெறுதல் போன்றவை அடங்கும்.

விலக்கு அளிக்கப்பட்ட வருமானங்கள் (Exempted Incomes)

விலக்கு அளிக்கப்பட்ட வருமானங்கள் (Exempted Incomes)

இந்த வருமானங்கள் மொத்த வருமானத்தின் ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ இருப்பதில்லை. எனவே, இந்த வகை வருமானத்திற்கு வரிகள் பொருந்துவதில்லை.

முன்கூட்டியே வரி (Advance Tax)

முன்கூட்டியே வரி (Advance Tax)

மார்ச் 31-ம் நாளில், நிதி ஆண்டு முடிவதற்கு முன்னதாகவே ஒருவர் தனக்கான வரியின் ஒரு பகுதியை செலுத்துவது முன்கூட்டியே வரி செலுத்துதல் எனப்படும்.

வருமான வரிச்சட்டத்தின் விதிகள் ஒவ்வொரு தனிநபரும், சுய-தொழில் செய்பவர்களும், வியாபாரங்களில் உள்ளவர்களும் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களும், டி.டீ.எஸ் செலுத்தப்படாத வருமானங்களுக்கு, முன்கூட்டியே வரியைச் செலுத்த வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளன.

வரி விதிக்கப்படுபவர் (Assessee)

வரி விதிக்கப்படுபவர் (Assessee)

இந்தச் சட்டத்தின் கீழ் எந்தவிதமான வரியையோ அல்லது வேறு குறிப்பிட்ட அளவு பணத்தையோ செலுத்த வேண்டிய நபர் வரி விதிக்கப்படுபவர் என்று அழைக்கப்படுகிறார்.

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 Must Know Tax Terms While Filing Income Tax Returns

Whether you are filing your own income tax or handing it to others, you must know a few basic terms and functions before filing for taxes.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X