3 வருடத்தில் 3 லட்சம் கோடி வருமானம்.. அசத்தும் சுற்றுலா துறை!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கடந்த 3 வருடத்தில் இந்திய சுற்றுலா துறை நாணய பரிமாற்றத்தின் மூலம் 3.25 லட்சம் கோடி வரையிலான வருமானத்தைப் பெற்றுள்ளதாக மத்திய அரசு திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

(ஈ-விசா திட்டத்தால் வெளிநாட்டுப் பயணிகள் எண்ணிக்கை 7 மடங்கு உயர்வு!)

3,25,478 கோடி ரூபாய்

3,25,478 கோடி ரூபாய்

இவ்வறிக்கையில் இந்திய சுற்றுலா துறை, நாணய பரிமாற்றத்தின் மூலம் சுமார் 3,25,478 கோடி ரூபாய் வருமானம் பெற்றுள்ளதாக மத்திய சுற்றுலா துறை அமைச்சர் மகேஷ் சர்மா நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை கூட்டத்தில் தெரிவித்தார்.

சுற்றுலா துறை

சுற்றுலா துறை

2014-15ஆம் ஆண்டில் மட்டும் சுற்றுலா துறை சம்பந்தப்பட்ட பல திட்டங்கள் மத்திய அரசிற்குக் கிடைத்துள்ளது. இதில் பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசம்

மேலும் சில திட்டங்கள் ஆலோசனை அளவிலேயே வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திர பிரதேசத்தில் இருந்து மட்டும் சுமார் 32 திட்டங்கள் மத்திய அரசிற்குக் கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து அருணாசல பிரதேசம் (15), மணிப்பூர் (14), ஒடிசா (11) ஆகிய மாநிலங்களில் இருந்தும் புதிய திட்டங்கள் கிடைத்துள்ளது.

உள்கட்டமைப்பு மேம்பாடு
 

உள்கட்டமைப்பு மேம்பாடு

இத்துறையின் வருவாய் அளவை மேம்படுத்தும் ஒரு திட்டமாக அமிர்தசரஸ், கேதார்நாத், அஜ்மீர், மதுரா, வாரணாசி, கயா, பூரி, துவராகா, அமராவதி, காஞ்சிபுரம், வேளாங்கண்ணி மற்றும் கவுகாத்தி ஆகிய பகுதிகளில் உள்ள சுற்றுலா தளங்களின் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.

ஸ்வதேஷ் தர்ஷன்

ஸ்வதேஷ் தர்ஷன்

அதுமட்டும் அல்லாமல் மத்திய அரசு இத்துறையில் ஸ்வதேஷ் தர்ஷன் என்னும் திட்டத்தையும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tourism sector earns Rs 3.25 lakh crore forex in last 3 years

Over Rs 3.25 lakh crore worth of foreign exchange has been earned through tourism in the country, the government said today.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X