சென்னை: இந்தியாவில் வங்கிச் சேவை பெற முடியாத இடங்களில் உள்ள மக்களுக்கு நிதி சேவை அளிக்கும் விதமாக ரிசர்வ் வங்கி 11 நிறுவனங்களுக்குப் பேமெண்ட் வங்கிகளை அமைக்க ஒப்புதல் அளித்தது.
வருமானம் குறைவாக உள்ள மக்கள், சிறு வர்த்தக நிறுவனங்கள், முறைப்படுத்தாத துறைகளுக்கு முறையான நிதி சேவை அளிக்கும் அமைப்பு தான் இந்தப் பேமெண்ட் வங்கி. இவ்வங்கியில் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்குச் சிறு சேமிப்புக் கணக்கை கொண்டு பணப் பிரிமாற்றம் மற்றும் நிதி செலுத்துதல் போன்ற சேவைகளை அளிக்கும். சரி சாதாரண வங்கிகளுக்குப் பேமெண்ட் வங்கிகளுக்கும் என்ன வித்தியாசம் என்பதைப் பார்ப்போம்... இந்தியாவில் உள்ள பிற வங்கிகளைப் போல, பேமெண்ட் வங்கிகள் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்குக் கடன் அளிக்க முடியாது. இவ்வங்கியில் தனிநபர் 1 லட்சம் ரூபாய் வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். இதனால் இத்தகைய வங்கிகள் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் மட்டுமே இயங்க இயலும். சாதாரண வங்கிகளைப் போல் பேமெண்ட் வங்கி கிரேடிட் கார்டு கொடுக்க முடியாது. ஆனால் டெபிட் கார்டுகளை விநியோகம் செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இத்தகைய பேமெண்ட் வங்கிகள் நாட்டின் பிற வணிக வங்கிகளுடன் இணைந்து வணிக நிருபர்களாகச் செயல்பட ஆர்பிஐ அனுமதி அளித்துள்ளது. இதனால் கிராமம் மற்றும் சிறு நகரகங்களில் அதிகளவிலான வர்த்தகம் உருவாகும். இதனால் வங்கிகளும் லாபம் அதிகம். பேமெண்ட் வங்கிகளுக்கு அனுமதி பெற்ற நிறுவனங்கள் 100 கோடி ரூபாய் முதலதன தொகையுடன் துவங்கப்பட உள்ளது. இதில் பேமெண்ட் வங்கி உரிமையாளர் குறைந்தது 40 சதவீதம் அதாவது 40 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் என் ரிசர்வ் வங்கி உத்திரவிட்டுள்ளது. இந்திய வங்கித்துறையில் உள்ள அன்னிய முதலீட்டு வழிமுறைகளே இத்தகைய வங்கிகளுக்கும் விதிக்கப்பட உள்ளது. இதனால் எப்டிஐ திட்டத்தில் மாறுதல்கள் ஏதுமில்லை. முழுமையான வணிக வங்கிகளில் இருப்பது போலவே பேமெண்ட் வங்கிகளுக்கு வாடிக்கையாளர் சேவை மையம் இருக்கும். இதில் வாடிக்கையாளர்களின் குறைகள் மற்றம் சந்தேகங்கள் முழுமையாகத் தீர்க்கப்படும். வைப்பு நிதி சேவை மட்டும் அல்லாமல் பேமெண்ட் வங்கிகள் மியூச்சுவல் பண்ட், காப்பீடு, கடன் பத்திரங்கள் போன்ற சேவையும் அளிக்க இயலும். இச்சேவையில் வணிக வங்கிகளும் ஈடுபட ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்திய மக்கள் அனைவருக்கும் நிதிச்சேவை கொண்டு சேர்க்கும் இலக்குடன், பேமெண்ட் வங்கிச் சேவைகளை அளிப்பிற்காக 11 நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்குத் தீவிர ஆய்விற்குப் பின் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம். கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
பேமெண்ட் வங்கி என்றால் என்ன?
கடன் கொடுக்க முடியாது..
டெபாசிட்
கிரேடிட் கார்டு இல்லை...
வணிக நிருபர்கள்
100 கோடி ரூபாய்
அன்னிய முதலீடு
வாடிக்கையாளர் சேவை மையம்...
பிற நிதி திட்டங்கள்
11 பேமெண்ட் வங்கிகள்
சமுக வளைதள இணைப்புகள்
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications