6 லட்சம் பணியாளர்கள்.. ரூ.7,00,000 கோடி வருவாய்.. இது டாடா குழுமத்தின் கதை..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் முக்கியத் தொழிற்துறை குழுமங்களில் முதன்மையான டாடா குழுமம், கடந்த நிதியாண்டில் 5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து 108.78 பில்லியன் டாலர் வருவாயைப் பெற்று அசத்தியுள்ளது.

 

இக்காலகட்டத்தில் டாடா குழுமத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை 6 லட்சமாக உயர்ந்துள்ளது, இதில் ஐடி மற்றும் கம்யூனிகேஷன் பிரிவுகள் மட்டும் 50 சதவீத பணியாளர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

700000கோடி ரூபாய்

700000கோடி ரூபாய்

2014ஆம் நிதியாண்டில் டாடா குழுமம் தனது இந்திய மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் 5 சதவீத உயர்வைப் பதிவு செய்து 700000 கோடி ரூபாய் வர்த்தகத்தைப் பெற்றதுள்ளது. இதில் வெளிநாட்டு வர்த்தகம் மட்டும் 70 சதவீத வருவாயைப் பதிவு செய்துள்ளது.

100 நிறுவனங்கள்

100 நிறுவனங்கள்

டாடா குழுமம் இந்தியாவில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் பல்வேறு துறை சார்ந்த 100 நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. 700000 கோடி ரூபாய் வருவாயில் 70 சதவீத வருவாயை இந்த 100 நிறுவனங்கள் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

2014-15ஆம் நிதியாண்டு

2014-15ஆம் நிதியாண்டு

இக்காலகட்டத்தில் டாடா குழுமத்தின் மொத்த வருவாய் அளவு 5.3 சதவீதம் வரை உயர்ந்து 108.78 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதன் அளவு 10.327 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரூபாய் மதிப்பில்
 

ரூபாய் மதிப்பில்

இந்நிறுவனத்தின் கடந்த ஒரு வருட காலகத்தில் நாணய பரிமாற்றத்தின் மூலம் அதிகளவிலான மதிப்பை சந்தித்துள்ளதாகத் தெரிவித்தது, இதனால் ரூபாய் மதிப்பில் இந்நிறுவனத்தின் வருவாய் 6,65,185 கோடி ரூபாயாக உள்ளது.

முக்கியத் துறைகள்

முக்கியத் துறைகள்

இந்நிலையில் இக்குழுமத்தின் மொத்த வருவாயில் என்ஜினியரிங் பிரிவின் வர்த்தகம் 41 சதவீதமாகவும், மெட்டிரியல் மற்றும் ஐடி மற்றும் கம்யூனிகேஷன் பிரிவுகள் தலா 21 சதவீதமும், சேவை மற்றும் எனர்ஜி பிரிவின் வர்த்தகம் 5 சதவீத்தைத அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. இதன் பின் நுகர்வோர் பொருட்கள் 4 சதவீதமும், கெமிக்கல் பிரிவில் 3 சதவீத வருவாயும் பங்குகொள்கிறது.

டாடா குழுமம்

டாடா குழுமம்

1868ஆம் ஆண்டு ஜாம்சேட்ஜி டாடா, டாடா குழுமத்தை நிறுவினர். தற்போது இக்குழுமம் இந்தியா மட்டும் அல்லாமல் உலகில் 6 கண்டங்களில் செயல்பட்டு வருகிறது.

டாடா குழுமத்தின் 30 நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தையில் பட்டிலிடப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனங்கள் 8 லட்சம் கோடி ரூபாய் சந்தை முதலீட்டில் இயங்கி வருகிறது.

டாடா சன்ஸ்

டாடா சன்ஸ்

டாடா குழுமத்தின் அனைத்து நிறுவனங்கள் மற்றும் பிரிவுகளுக்கு டாடா சன்ஸ் நிறுவனம் தான் முதலீட்டு ஹோல்டிங் நிறுவனமாகும்.

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

இதைக் கிளிக் செய்யவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata's revenue rises to $108.8 bn; headcount crosses 6 lakh

Tata group’s total revenue rose by over five per cent to USD 108.78 billion in the last fiscal, while its total headcount crossed six-lakh mark.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X