அமெரிக்கச் சந்தையில் புதிய திட்டத்துடன் களமிறங்கும் எச்சிஎல் ஷிவ் நாடார்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில் இன்போசிஸ், விப்ரோ போன்ற முன்னணி நிறுவனங்களுக்குக் கடுமையான போட்டி அளித்து வரும் எச்சிஎல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார், அமெரிக்கச் சந்தையில் உள்ள ஹெல்த்கேர் டெக்னாலஜி நிறுவனங்களைக் கைப்பற்ற 500 மில்லியன் டாலர் தனியுரிம நிதியை (proprietary fund) திரட்டியுள்ளார்.

 

இந்த நிதிதிரட்டும் வேலையில் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் முன்னாள் சீஇஓ-வான சஞ்சய் கல்ரா இணைந்துள்ளார்.

அமெரிக்கச் சுகாதாரத் துறை...

அமெரிக்கச் சுகாதாரத் துறை...

ஷிவ் நாடார் மற்றும் சஞ்சய் கல்ரா கூட்டணி ஹெல்த்கேர் டெக்னாலஜி நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் அமெரிக்கச் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த மென்பொருள் மற்றும் பிளாட்பார்ம்-களிலும் முதலீடு செய்ய உள்ளனர்.

முதல் முறையாக...

முதல் முறையாக...

பன்னாட்டுச் சந்தைகளில் உள்ள பிரச்சனைகளைக் களைய வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைக் கைபகப்படுத்தப் பிரத்தியேகமாக நிதிதிரட்டியது இதுவே முறை எனவும் சுகாதாரத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓபாமாகேர் திட்டம்..
 

ஓபாமாகேர் திட்டம்..

அமெரிக்காவில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்குப் பெரிதும் உதவி வரும் ஓபாமாகேர் திட்டம், இந்நாட்டின் சுகாதாரத் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் இத்திட்டம் மலிவு பராமரிப்பு சட்டத்தின் கீழ் அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

இதேபோன்ற திட்டங்கள் மற்றும் செயல்வடிவங்கள் உலகின் பிற நாடுகளிலும் செயல்படுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்திய ஐடி நிறுவனங்கள்

இந்திய ஐடி நிறுவனங்கள்

இப்புதிய வளர்ச்சியில் இந்திய ஐடி நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்த முயன்று வருகிறது. ஆனால் இவர்களின் முயற்சிகள் அனைத்தும் ஐடித்துறையைச் சார்ந்தது மட்டுமே.

இதனை மாற்றியமைக்கவே ஷிவ்நாடாரின் புதிய கூட்டணி இத்துறையில் நேரடியாகச் செயல்படத் திட்டமிட்டுள்ளது.

 

புதிய நிறுவனம்

புதிய நிறுவனம்

அமெரிக்கச் சந்தையில் சுகாதாரத் துறையில் இறங்கும் பணிகளில் எஸ்என்எஸ்கே அசோசியேட்ஸ் (SNSK (Shiv Nadar-Sanjay Kalra))முழுமையாக ஈட்டுப்பட்டு வருகிறது.

இப்புதிய நிறுவனத்தில் துவக்க முதலீடாக 200 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டு உள்ளது, இதில் 80 சதவீதம் ஷிவ் நாடாரும், 20 சதவீதம் கல்ராவின் கைவசம் உள்ளது. மீதமுள்ள 300 மில்லியன் டாலர் தொகை கல்ராவின் பெயரில் கடனாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஷிவ் நாடார்

ஷிவ் நாடார்

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ள ஷிவ் நாடார் 13 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார்.

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nadar's $500m fund eyes US health tech companies

HCL Shiv Nadar and former Tech Mahindra CEO Sanjay Kalra are establishing a $500-million proprietary fund to acquire US healthcare technology companies.
Story first published: Monday, September 14, 2015, 11:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X