மத்திய அரசின் பரிந்துரைக்கு ரிசர்வ் வங்கி மறுப்பு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய வங்கிகளின் வளர்ச்சி மற்றும் நாட்டில் அன்னிய முதலீட்டு அளவுகளைக் கணக்கில் கொண்டு மத்திய அரசு, இந்திய வங்கிகளில் 100 சதவீதம் வரை அன்னிய முதலீட்டை அனுமதிக்க ரிசர்வ் வங்கியிடம் பரிந்துரை செய்தது.

 

இந்நிலையில் அன்னிய முதலீட்டு அளவுகளைக் கண்காணிக்கும் தொழில்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறை அளித்த இப்பரிந்துரைக்கு ரிசர்வ் வங்கி முழுமையாக மறுப்பு தெரிவித்துள்ளது.

100 சதவீத அன்னிய முதலீடு

100 சதவீத அன்னிய முதலீடு

இந்திய வங்கிகளில் 100 சதவீதம் வரை அன்னிய முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் தனியார் துறை வங்கிகளான ஐசிஐசிஐ, எச்டிஎப்சி போன்ற முக்கியமான வங்கிகளுக்கு மிகவும் சாதகமாக அமையும் என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள்

அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள்

இப்பரிந்துரை குறித்து ரிசர்வ் வங்கி முழுமையான விளக்கம் அளிக்காவிட்டாலும், சில மாதங்களுக்கு வங்கிகளில் அன்னிய முதலீட்டு அளவுகள் உயர்த்தும் முயற்சியில் அரசு இறங்கிய போது ரிசர்வ் வங்கி...

அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் ஒரு குறுகிய கால முதலீட்டாளர்கள், அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம், எவ்வித தடையும் இன்றி எப்போது வேண்டுமானாலும் முதலீட்டை வெளியேற்றலாம். இத்தகையவர்களை நம்பி நாட்டின் முக்கியத் துறையில் அன்னிய முதலீட்டு அளவுகளை உயர்த்துவது உகந்தது அல்ல என ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

லாபம் மட்டுமே..
 

லாபம் மட்டுமே..

மேலும் எப்ஐஐ எனப்படும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் அனைவரும் லாப நோக்கத்திலேயே செயல்படுபவர்கள், அதனால் நீண்ட கால முதலீட்டை எதிர்பார்க்கு இந்திய வங்கிகளுக்கு இவர்களின் முதலீடு உதவாது.

தனியார் வங்கிகள்

தனியார் வங்கிகள்

தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் இருக்கும் தனியார் வங்கிகள் அன்னிய முதலீட்டுக்கான தளர்வுகளை எதிர்பார்த்து வருகிறது. சமீபத்தில் 74 சதவீத அன்னிய முதலீடு அளவுகளில் நாட்டின் முக்கியத் தனியார் வங்கியான எச்டிஎப்சி சில பிரச்சனைகளைச் சந்தித்தது.

74% அன்னிய முதலீடு

74% அன்னிய முதலீடு

இந்திய வங்கித்துறையில் தற்போது நடைமுறையில் உள்ள சட்ட திட்டங்களின் படி, தனியார் வங்கிகளில் 74 சதவீத நேரடி அன்னிய முதலீடாகவும், இதில் 49 சதவீத முதலீடு அட்டோமேடிக் வாயிலாகவும் முதலீடு பெறலாம்.

வங்கிகளில் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் 49 சதவீதத்திற்கு அதிகமாக இருப்பு வைத்துக்கொள்ள FIPB அமைப்பிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

முதல் இடத்தில் ஐசிஐசிஐ வங்கி..

முதல் இடத்தில் ஐசிஐசிஐ வங்கி..

தனியார் வங்கிகளில் ஐசிஐசிஐ வங்கியில் 53.9 சதவீத பங்குகள் அன்னிய முதலீட்டாளர்கள் கையில் உள்ளது. இதேபோல் எச்டிஎப்சி வங்கியில் 39.9%, ஆக்சிஸ் வங்கியில் 43.8%, எஸ் வங்கியில் 41.3 சதவீதம், கோட்டாக் மஹிந்திரா வங்கியில் 34.7 சதவீத பங்குகள் அன்னிய முதலீட்டாளர்கள் கையில் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI rejects plan for 100% FDI in banks

The Reserve Bank of India (RBI) has turned down a proposal from the government to allow up to 100% foreign direct investment (FDI) in banks, a move that may come as a damper for several private sector lenders such as ICICI Bank and HDFC Bank.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X