ரிலையன்ஸ் ஜியோ-வின் 'ஓபன் ஆபீஸ்' பற்றி தெரியுமா உங்களுக்கு.?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் ஸ்டாப் அப் கலாச்சாரம் அதிகளவில் பிரபலம் அடைந்திருந்தாலும், பெரும் நிறுவனங்களின் இதன் தாக்கம் மிகவும் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய நிறுவன குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் குழுத்தின் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம், 'ஓபன் ஆபீஸ்' கலாச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.

 

பெரு நிறுவனங்கள் குறிப்பாக ரிலையன்ஸ் போன்ற நாட்டின் முன்னணி நிறுவனங்களில் இதுபோன்ற கலாச்சாரம் சாத்தியப்படுத்தியது, இந்திய நிறுவனங்கள் மத்தியில் முக்கியச் செய்தி.

அப்படி என்ன இருக்கு..?

டிசி22 கட்டிடம்..

டிசி22 கட்டிடம்..

மும்பையில் உள்ள ரிலையன்ஸ் கார்ப்பரேட் பார்க்கில் உள்ள டிசி22 (TC22) கட்டிடத்தில் உள்ள 7வது தளத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் அலுவலகம் அமைந்துள்ளது.

மதியம் சரியாக 1.17 மணியளவில் முகேஷ் அம்பானி அலுவலகத்திற்கு வந்தார். இதில் என்ன இருக்கு.. இருக்கே..!

பாதுகாப்பு..

பாதுகாப்பு..

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 36வது இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானிக்கு மத்திய அரசு Z பாதுகாப்பு அளித்துள்ளது.

ஆனால் ரிலையன்ஸ் ஜியோவின் அலுவலகத்திற்கு வரும்போது எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் சாதாரண ஊழியராகவே உள்ளே நுழைந்தார்.

ஆகாஷ் அம்பானி

ஆகாஷ் அம்பானி

இவரைப் போல் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர்களில் ஒருவரான ஆகாஷ் அம்பானியும் கையில் குறிப்புகளை எடுத்துக்கொண்டு உதவியாளர்கள் யாரும் இல்லாமல், தனி லிப்ட் இல்லாமல் சக பணியாளர்களைப் போல் தனது இருக்கைக்குச் சென்றார்.

ஈஷா அம்பானி
 

ஈஷா அம்பானி

இதே அலுவலகத்தில் ஆகாஷ் அம்பானியின் இரட்டைச் சகோதரியான ஈஷா அம்பானி, ஜியோ மற்றும் ரிடைல் பரிவு தலைவரான பங்கஜ் பாவர் அவர்களிடம் ஆலோசனை செய்துவந்தார்.

ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

மேலும் சிறு ஆலோசனை கூட்டமாகப் பணியாளர்கள் இருக்கையிலேயே கூட்டம் நடந்தது.

குறிப்பாக இந்நிறுவனத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான மனோஜ் மோடி அவர்களின் இருக்கையிலேயே அவர் அமர்ந்திருக்க முகேஷ் அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் மனிதவள பரிவின் தலைவர் சஞ்சய் ஜாக் ஆகியோர் நின்றுகொண்டு ஆலோசனை நடத்தினர்.

பழைய நிறுவன முறையில் இந்த ஆலோசனை கூட்டம் முற்றிலும் மாறுபட்ட முறையில் நடந்திருக்கும்.

பணியாளர்கள்

பணியாளர்கள்

ஆலோசனை முடிந்த பிறகு முகேஷ் அம்பானி தனது இருக்கைக்குச் சென்ற போது ஊழியர்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அவர்களிடம் இத்தகைய பழக்கத்தைக் கைவிடுமாறும், தங்களது வேலைத் தொடர்ந்து திறம்படச் செய்ய வேண்டும் என்று கூறி தனது இருக்கைக்குச் சென்றார்.

ஆகாஷ் அம்பானி இருக்கை..

ஆகாஷ் அம்பானி இருக்கை..

அதேபோல் ஆகாஷ் அம்பானி ஆலோசனை முடிந்தது வெறும் கண்ணாடிகளால் தடுக்கப்பட்ட தனது அறைக்குச் சென்றார்.

உணவகம்

உணவகம்

மேலும் இந்த அலுவலகத்தில் அனைவரும் பொது உணவகம் தான், அவை அனைத்தும் செல்ப் சர்வீஸ்டு முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

உடை

உடை

மேலும் அனைத்து ஊழியர்களும் இயல்பான ஆடைகளை அணிந்திருந்தனர் (கோட்டுச் சூட்டு ஏதுமில்லை). இதில் பெரும்பாலானோர் வெள்ளை சட்டை மற்றும் கருப்புப் பேன்ட் அணிந்திருந்தனர்.

மாற்றம்..

மாற்றம்..

இத்தகையை முறை அனைத்து அலுவலகம் மற்றும் பெரு நிறுவனங்களில் மாறினால் உலக நாடுகள் மத்தியில் இந்தியா மீதான மதிப்பு கண்டிப்பாக அதிகரிக்கும்.

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani's day out at Jio 'open office'

It isn't easy to tell if the new work culture at India's largest start-up, Reliance Jio, has elevated the rank and file a few notches higher in hierarchy or made the top management, led by chairman Mukesh Ambani, take a few steps down.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X